முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
547 views
4 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! கிராமத்தில் பொங்கல் விழா –முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழுப்புரம் ஜன-19 விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 17.1.2026 சனிக்கிழமை மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகளுக்காக ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், எலுமிச்சை ஸ்பூன், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் வி. விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் அவரது குடும்பத்தாரும் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பரிசளிப்பு நிகழ்வின் போது மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். விழா இனிய பொங்கல் வாழ்த்துகளுடன் மகிழ்ச்சியான சூழலில் நிறைவடைந்தது.

More like this