messi
642 views
6 days ago
இன்று - கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் மறைந்த அச்சுத மேனன் பிறந்த நாள் #ஜனவரி_13, 1913 அச்சுத மேனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகஸ்ட் 1970 வரை முதல்தடவையாகவும் 4--10--1970 to 25--03--1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பிற முற்போக்கு ஜனநாயகக் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தது கேரளாவில்தான்! அந்த ஆட்சி எனும் கப்பலை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனைகளைக் குவித்த காப்டன், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் முதல்வருமான தோழர் சி.அச்சுத மேனன். தூய, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகம்; மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்த அமலாக்கம்; ஏழை எளியோருக்கான பெரும் சீர்திருத்தத் திட்டங்களை நிறைவேற்றுதல்; அடிப்படையான ஆய்வு நிலையங்களை நிறுவுதல் போன்ற இன்னபிற நடவடிக்கைகளிலிருந்து பிரிக்கவொண்ணா வகையில் இரண்டறக் கலந்தது அவரது பெயர். நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த அவர், அரசியலில் புதிய, உயர்ந்த நெறிகளை வகுத்தளித்தார். அவர் தலைமையில் இயங்கிய அரசு. இதன் விளைவாக, எவரும் சாதிக்காத வகையில், கேரளாவில் விவசாயத் தொழிலாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போயிற்று. ஏறத்தாழ 25 லட்சம் உழவர்கள், நிலத்தின்மீதான உரிமைகளைப் பெற்றனர்; லட்சக்கணக்கான ஏக்கர் வன நிலங்களையும், பிர்லா வசமிருந்த 30,000 ஏக்கர் நிலம் உட்பட மற்றபிற நிலங்களையும் மறுவிநியோகத்துக்காக அரசு எடுத்துக் கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்பு மனையும் அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் மட்டுமின்றி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆச்சார்ய நரேந்திர தேவ், ஸ்ரீ நாராயண குரு, அரவிந்த கோஷ், இன்ன பிறரின் சிந்தனைகளைக் கம்யூனிஸ்டுகள் கற்றறிய வேண்டும் எனவும், காந்திஜியின் அகிம்சைப் பாதையை நாம் தீவிரமாகப் பரிசீலித்தல் அவசியமெனவும் அவர் கருதினார்.கேரள சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது உள்ளிட்ட விருதுகள் அவரைத் தேடி வந்தன. 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் நாள் திருவனந்தபுரத்தில் அவர் மரணமுற்றார் #life #lifes