lifes
1K Posts • 489K views
messi
775 views 29 days ago
#பெரியார் #டிசம்பர்_24 #நினைவு_தினம் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973 சமூகசீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார். #life #lifes
17 likes
10 shares
messi
746 views 17 days ago
#ஷாஜகான் #பிறந்ததினம் #ஜனவரி_5 ஜனவரி 5, வரலாற்றில் இன்று. முகலாய மன்னர் ஷாஜகான் பிறந்த தினம் இன்று. இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஷஹமணி புதீன் முகம்மது ஷாஜகான். இவர் 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை ஜஹாங்கிர் இறந்ததை தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.. ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச் சின்னங்களில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. . இது அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. . ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஷாஜகானாபாத்தின் உருவாக்கியவர் அவரே, அது இப்போது 'பழைய தில்லி' என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 5 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நிறுவிய முகலாய மன்னர் மன் ஷாஜகான் ன் பிறந்த தினம்". #life #lifes
15 likes
12 shares
messi
558 views 1 days ago
#லெனின் #ஜனவரி_21 #நினைவு_தினம் விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ஏப்ரல் 22 1870 – ஜனவரி 21, 1924), ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார். லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, உள் நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது ஏதேனுமொன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் #life #lifes
8 likes
6 shares