#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி
திண்டிவனத்தில் ஆலோசனை கூட்டம்
திண்டிவனம், டிச.18:
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்.எல்.ஏ. அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திண்டிவனம் நகரம் பாகம் எண் 106-ல் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்களுக்கு 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி .கே .பி .ரமேஷ். நகர துணை செயலாளர் டி எம் கே தாஜ். மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ஏ. கௌதமன் வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.சூரிய பிரகாஷ். ஆடிட்டர் பிரகாஷ்.27-வது வார்டு கிளைக் கழக செயலாளர் சாகுல் அமீது, மு.மஸ்தான். தோல் மண்டி ஷரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், ஜம்ஜம் சுல்தான், முகமது ஜாஃபர், துரை, அசாருதீன், மும்மு ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.