messi
613 views
#சர்வதேச_இனப்படுகொலை #நினைவு_நாள் #ஜனவரி_27 இன்று சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள் (Holocaust Remembrance Day )- ஜனவரி 27 - இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து விஷவாயு மூலம் கொன்றனர். இதுபோல சுமார் அறுபது லட்சம் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யப்படைகள் வென்றன. 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் போலந்தின் அவுஷ்விட்ஸ் நகரில் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் ரஷ்யாவின் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நாளே சர்வ தேச இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. #life #lifes