Fahmi
641 views
6 days ago
*🌹🌹🌹꧁༼ ﷽ ༽ ꧂🌹🌹🌹* *பாதுகாக்க வேண்டிய ஐந்து பொக்கிஷங்கள்* قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رضي الله عنه: احْفَظُوا عَنِّي خَمْسًا ، فَلَوْ رَكِبْتُمُ الْإِبِلَ فِي طَلَبِهِنَّ لَأَنْضَيْتُمُوهُنَّ قَبْلَ أَنْ تُدْرِكُوهُنَّ ، لَا يَرْجُو عَبْدٌ إِلَّا رَبَّهُ ، وَلَا يَخَافُ إِلَّا ذَنْبَهُ ، وَلَا يَسْتَحِي جَاهِلٌ أَنْ يَسْأَلَ عَمَّا لَا يَعْلَمُ ، وَلَا يَسْتَحِي عَالِمٌ إِذَا سُئِلَ عَمَّا لَا يَعْلَمُ أَنْ يَقُولَ : اللَّهُ أَعْلَمُ ، وَالصَّبْرُ مِنَ الْإِيمَانِ بِمَنْزِلَةِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ ، وَلَا إِيمَانَ لِمَنْ لَا صَبْرَ لَهُ. (حلية الأولياء، ج : ١، ص : ٧٥ - ٧٦) அலி இப்னு அபீ தாலிப் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : “என்னிடமிருந்து ஐந்து விஷயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவற்றை தேடிப்பெற ஒட்டகங்களில் சென்று, அந்த ஒட்டகங்கள் களைப்படைந்து விட்டாலும் அவற்றின் உண்மை அர்த்தத்தை முழுமையாக அடைய முடியாது. 1. ஒரு அடியான் தன் இறைவனைத் தவிர வேறு யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது. 2. பாவம் செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும். 3. அறியாதவன், தானறியாத விஷயங்களைப் பற்றி கேட்க வெட்கப்படக் கூடாது. 4. அறிஞன், தன்னிடம் கேட்கப்படும் விஷயம் தெரியாவிட்டால் ‘அல்லாஹ்வே நன்றாக அறிவான்’ என்று கூறுவதற்கு வெட்கப்படக் கூடாது. 5. உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதுபோல ஈமானுக்கு பொறுமை முக்கியமானது; பொறுமை இல்லாதவருக்கு ஈமானே இல்லை.” #🕋யா அல்லாஹ் (நூல் : ஹில்யதுல் அவ்லியா, பாகம் : 1, பக்கம் : 75, 76) *♥︎ ✾‌ ᥫ᭡ •°•°•🆂︎•°•°• ᥫ᭡ ✾‌ ♥︎*l