தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மு.பரமேஸ்வரன் தலைமையில் 17.1.26 காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.நாராயணன் மாநில செயற்குழு முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.மாவட்ட செயற்குழுவில் வாடிப்பட்டி தெற்கு கிளைகள் நீங்கலாக 10 கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.27.1.26 அன்று மதுரையில் மதுரை மாவட்ட கருவூல அலுவலகம் உட்பட ஏழு இடங்களில் பெருந்திரள் பங்கேற்புடன் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பெருந்திரள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பது, இதழ் சந்தா சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.கூட்டத்தில் 35 பேர் பங்கேற்றனர்.
#📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்