saravanan.
639 views
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁தாளகி லேம்தழ லின்சுடு நஞ்சிது தன்னையெ னச்சுரர் அஞ்சியழக்_ _🍁காளவி டந்தனை உண்டுக றுத்தொளி வீசிடும் ஓர்மணி கண்டமுளான்_ _🍁வேளல ரம்பினை ஏவவும் ஓர்நொடி யிற்பொடி யாகவி ழித்தபிரான்_ _🍁வாளர வம்பிறை சூடிய வார்சடை யான்பதி வாஞ்சிய நன்னகரே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_"தீயினும் சுடுகின்ற இந்த விடத்தை நாங்கள் தாங்கமாட்டோம்" என்று தேவர்கள் அச்சத்தோடு வந்து துதிக்கவும் அவர்களுக்கு இரங்கி அந்தக் கரிய விடத்தை உண்டு, கருமை அடைந்து, ஒளி வீசும் ஒப்பற்ற நீலமணிகண்டம் உள்ளவன் !! மன்மதன் மலர்க்கணையை ஏவியபோது அவன் ஒரு நொடியளவில் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் அவனைப் பார்த்த தலைவன் !! நீள்சடையில் கொடிய பாம்பையும் பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁