விளையாட்டுப் போட்டி விழா
வாலிபர் சங்கம் நடத்தியது
---------------
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
எலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல், இசை நாற்காலி, திருக்குறள் ஒப்பித்தல், பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார்.
#⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰