💘💞Par Tha💞💘
620 views
இளையராஜாவோடு இணைத்துப் பார்க்கும்போது சினிமா இயக்குநர் பாக்யராஜ் மீது ஒரு வியப்பு வரவே செய்கிறது. 80களில் இளையராஜாவையே முழுமையாக நம்பிக் கொண்டிருந்த சினிமா இயக்குநர்களின் மத்தியில் இளையராஜா இல்லாமலேயே பல படங்களை வெற்றிபெற வைத்தவர் பாக்யராஜ். இளையராஜா இசையமைப்பதுதான் ரீரிகார்டிங் என்றிருந்த நேரத்தில் தூறல் நின்னு போச்சு படத்தில் செந்தாமரை கொல்லப்படும் காட்சிக்கு இசையில்லாமல் சைலண்டாக விடும்படி பாக்யராஜ் சொன்னாராம். முந்தானை முடிச்சு படத்தில் விளக்கு வச்ச நேரத்துல பாடல் செக்ஸியா இருக்கு, நான் மாலை போட்டுருக்கேன் பாட முடியாது என்று இளையராஜா சொல்ல, அதுக்காக நான் பக்திப் படமா எடுக்க முடியும் என்று திருப்பிக் கேட்டாராம் பாக்யராஜ். ஏற்கெனவே அந்தப் படத்திற்கு கங்கை அமரன்தான் இசை என்று பாக்யராஜ் பிடிவாதம் பிடிக்க, ஏவிஎம் சகோதரர்களே பேசி இளையராஜாவைக் கூட்டி வந்தார்கள் என்பது பலரும் அறிந்தது. இளையராஜாவின் உற்ற நண்பர் பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியிருந்தாலும் இளையராஜாவைச் சார்ந்திருக்கவில்லை பாக்யராஜ். அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், ஆராரோ ஆரிரரோ, சுந்தரக் காண்டம், இது நம்ம ஆளு என்று அனைத்துமே மெகா ஹிட் படங்கள். பாக்யராஜின் அந்த கெத்து பிடித்ததாலோ என்னவோ சமீபத்தில் நடைபெற்ற பாக்யராஜின் 50ஆண்டு கால திரையனுபவ விழாவில் இளையராஜாவும் கலந்து கொண்டாரோ என்று தோன்றியது. #🤔தெரிந்து கொள்வோம்