⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
702 views
5 hours ago
நாளை தை 11 (25-01-2026) ஞாயிற்றுக்கிழமை - ரத சப்தமி. *************************************************** இதிகாசமாகிய மகாபாரதத்தில் பாஞ்சாலி மாத விலக்காகியிருந்த சமயத்தில் அந்தப் பதிவிரதையின் கூந்தலைப் பற்றி இழுத்துவந்து சபையில் அவளின் ஆடைகளைக் களைய எத்தனித்த துச்சாதனனின் அடவாடித்தனத்தை - மாபாதகச் செயலை, பெருஞ்சபையில் கூடியிருந்த அனைத்து பெரியோர்களிடமும் முறையிட்டுக் கதறினாள், பீஷ்மரின் பாதத்தில் விழுந்து, வணங்கி தன்னைக் காக்குமாறு பணிந்தபோது, பராக்கிரமம் மிக்க பீஷ்மர் பிதாமகர் - சக்தி இருந்தும், தன்னுடைய ஐம்புலன்களும் தலை கவிழ்ந்து தன் கையாலாகத்தனத்தைப் பறைசாற்றியபோது அதனால் ஏற்பட்ட மகாபாபத்தினால், தான் நினைத்தபோது மாத்திரமே மரண தேவதை, தன்னை ஆலிங்கனம் செய்திடல் வேண்டும் என்ற செவ்வரத்தைப் பெற்றிருந்தும், போர்களத்தில், அர்ஜுனனின் காண்டீபத்தினால் வீழ்த்தப்பட்ட நிலையில் தன் உயிர் இன்னும் பறிபோகவில்லையே அதற்கான காரணத்தையறிந்த பீஷ்மாச்சாரியார், தன்னுடலில் ஏழு இடங்களில் ஏழு எருக்கம் இலைகளை வைக்குமாறு கூற, அவ்விதமே எருக்கம் இலைகளை அவர் குறிப்பிட்ட அவயங்களில் வைக்க, அவர்தம் இன்னுடலைவிட்டு உயிர் பிரிந்தது. இந்நிகழ்ச்சியின் உட்பொருள்: ஒருவன் ஒரு தகாத செயலைச் செய்தால், அவன் மீதுள்ள பயத்தின் காரணமாக நாம் வாய் திறவாமல், மௌனமாக இருந்திடல் கூடாது! அவ்வண்ணம் நாம் வாளாவிருந்தால், அவன் செய்திடும் தீச்செயல்களினால் உண்டாகும் பாபம் நம்மையும் பற்றிக் கொள்ளும் என்பதே இதன் தாத்பரியம். ஒன்று, சக்தி இருக்கும் பட்சத்தில், அச்செயலைத் தடுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏன் இப்படிச் செய்கிறாய் என்றாவது கேட்க வேண்டும். ஏதும் பேசாமல் வாளாவிருந்திடல் கூடாது இதன் காரணமாகவே, இன்றைய தினத்தில் நாமும் அறிந்தும், அறியாமலும் செய்திட்ட அனைத்து பாபங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் பொருட்டு தலை, இரண்டு தோள்கள், இரு தொடைகள் மற்றும் கால்களில் மொத்தம் ஏழு இடங்களிலும் (ஆண்கள் மஞ்சள் கலந்த அட்சதையுடனும், பெண்கள் மஞ்சள் பொடியுடன்கூடிய) ஏழு எருக்கம் இலைகளை வைத்துக் கொண்டு குளித்தால், சகல பாபங்களும் நீங்குவதோடு, நோய் - நொடிகளற்ற நல்வாழ்வைத் தந்தருளும். ரதசப்தமி நன்னாளில், சூரிய பகவானுக்கு மானசீகமாக எருக்கம் இலைகளைக் கொண்டு அர்ச்சித்து, ஏழு வகையான உணவு வகைகளைக் கொண்டு நைவேத்தியம் செய்தால், இப்பிறவியிலும் ஏழேழ் பிறவியிலும் நீங்கள் செய்த பாபங்கள் அனைத்தும் விலகி, ஒருமித்த தம்பதி சமேதராய் போதும் போதும் என்ற அளவிற்கு செல்வ வளத்தைப் பெற்று, நன் மக்கட்பேறு பெற்று, “இந்த நற்குணங்களுடன் கூடிய குழந்தைகளைப் பெற இவர்களுடைய தாய் -தந்தையர் என்ன தவம் செய்தார்களோ?” -என்று அனைவரும் புகழ்ந்து கொண்டாடுவர். ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉ரதசப்தமி🙏 #✡️ஜோதிட பரிகாரங்கள்