ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
832 views
1 months ago
அரசு குட் நியூஸ்? குறிப்பாக நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். அதுமட்டுமல்ல, இப்போது நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB) மற்றும் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) உள்ளிட்டவைகளில் வழங்கப்படும் கூட்டுறவு நகைக் கடனை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்? நிபந்தனைகள்? நகையின் தரம் போன்றவற்றையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகைக் கடன் பெற ஆவணங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.. நகையின் தூய்மையும் முக்கியம்... பொதுவாக 18 முதல் 22 காரட் தங்கநகைகளையே பெரும்பாலான வங்கிகள் ஏற்கின்றன... சில சமயம் நாணயங்கள் அல்லது தங்கப் பட்டைகளை ஏற்காமல் இருக்கலாம். விண்ணப்பிக்க வேண்டுமானால், ஆதார், வாக்காளர் அட்டை, PAN, பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணம் ஒன்று கட்டாயம் தேவைப்படும்.. அத்துடன் ரேஷன் கார்டு, மின்சார ரசீது அல்லது வங்கி ஸ்டேட்மெண்ட் போன்ற முகவரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் தேவைப்படும். குறைந்த வட்டி - நிறைந்த பலன் நகை மதிப்பீடு வங்கி அங்கீகரித்த மதிப்பீட்டாளரால் செய்யப்படும் என்பதால், அதை தனியாக எடுக்க வேண்டியதில்லை. விவசாய நகை கடன் என்றால் நில உரிமை, பயிர் சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை PACCS கேட்டால், அதையும் காட்ட வேண்டியிருக்கும்.. அனைத்து ஆவணங்களின் நகல்களையும், கையெழுத்து போட்டு ரெடியாக எடுத்து கொண்டு போவது ரொம்ப நல்லது. விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது, நகையின் எடையும் தூய்மையும் பார்த்து கடன் தொகை கணக்கிடப்படும்... சில இடங்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படலாம். உரிய காலத்தில் பணம் செலுத்தாவிட்டால், அரசு விதிகளின்படி வங்கி நோட்டீஸ் அனுப்பி ஏலம் விடும் நடைமுறைக்கு சென்றுவிடும்.. எனினும் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், குறைந்த வட்டியில் நிம்மதியாக கடனை பெறலாம் #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #நகை கடன் தள்ளுபடி அரசாணை