நகை கடன் தள்ளுபடி அரசாணை
24 Posts • 15K views
வாக்குறுதியாக அளித்தது... கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி அத்துடன் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, 2021 வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த 2,117 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது... இதனால், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில், 10.56 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன... அதுமட்டுமல்ல, இதன் மூலம் கடன் சுமையால் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நிதி சுதந்திரம் கிடைத்து, புதிய தொழில்களை தொடங்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அரசு அப்போது கூறியது.. மகிழ்ச்சியில் மகளிர் குழுக்கள் அரசின் இந்த தள்ளுபடியில், கடனை செலுத்த முடியாத பெண்கள் குழுக்கள் மீதமுள்ள கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்... இதனால் பெண்கள் குழுக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய உற்பத்தி, வணிக முயற்சிகளில் இறங்கும் அளவுக்கு, அரசின் அந்த அறிவிப்பு தெம்பை தந்திருந்தது.. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில் சேர்ந்த 10.56 லட்சம் பெண்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த தள்ளுபடியாகிய நிதியை, அரசு 2021-22 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 600 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு வழங்கியது. மீதமுள்ள தொகையை மொத்தமாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு விடுவித்தது. இதற்குப் பொறுப்பாக வட்டி வசதி கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு அசத்தல் இதையடுத்து, கூட்டுறவு துறை, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கு தொடர்பான 194 கோடி ரூபாய் வட்டியை அரசிடம் வழங்குமாறு வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலுக்கு பிறகு, அந்த நிதியை அரசு இந்த மாதம் 20ம் தேதி விடுவித்துள்ளது. இதன் மூலம், மகளிர் குழுக்கள் மீண்டும் கடன் சுமையில்லாமல் தங்கள் சொந்த தொழில்கள் மற்றும் சமூக முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு பெற்றுள்ளன #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #நகை கடன் தள்ளுபடி அரசாணை #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
10 likes
9 shares
2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட மகளிர் குழுக்களின் கடன் ரூ.2,117 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 1.01 லட்சம் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 10.56 லட்சம் பெண்கள் பெரும் கடன் சுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடன் தள்ளுபடி தொகையை அரசு மூன்று தவணைகளாகக் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி வந்த நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட அசல் தொகைக்கான வட்டித் தொகையான 194 கோடி ரூபாயை விடுவிக்குமாறு கூட்டுறவுத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று, தமிழக அரசு அந்த வட்டித் தொகையையும் தற்போது விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலையைச் சீரமைப்பதோடு, மகளிர் குழுக்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சிறு தொழில்களைத் தொடங்கவும் இந்தக் கடன் தள்ளுபடி ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. கடன் நெருக்கடியில் தவித்த பல குடும்பங்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளதோடு, பெண்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய வணிக முயற்சிகளில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, தமிழகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #நகை கடன் தள்ளுபடி அரசாணை #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
15 likes
10 shares
அரசு குட் நியூஸ்? குறிப்பாக நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். அதுமட்டுமல்ல, இப்போது நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB) மற்றும் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) உள்ளிட்டவைகளில் வழங்கப்படும் கூட்டுறவு நகைக் கடனை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்? நிபந்தனைகள்? நகையின் தரம் போன்றவற்றையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகைக் கடன் பெற ஆவணங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.. நகையின் தூய்மையும் முக்கியம்... பொதுவாக 18 முதல் 22 காரட் தங்கநகைகளையே பெரும்பாலான வங்கிகள் ஏற்கின்றன... சில சமயம் நாணயங்கள் அல்லது தங்கப் பட்டைகளை ஏற்காமல் இருக்கலாம். விண்ணப்பிக்க வேண்டுமானால், ஆதார், வாக்காளர் அட்டை, PAN, பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணம் ஒன்று கட்டாயம் தேவைப்படும்.. அத்துடன் ரேஷன் கார்டு, மின்சார ரசீது அல்லது வங்கி ஸ்டேட்மெண்ட் போன்ற முகவரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் தேவைப்படும். குறைந்த வட்டி - நிறைந்த பலன் நகை மதிப்பீடு வங்கி அங்கீகரித்த மதிப்பீட்டாளரால் செய்யப்படும் என்பதால், அதை தனியாக எடுக்க வேண்டியதில்லை. விவசாய நகை கடன் என்றால் நில உரிமை, பயிர் சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை PACCS கேட்டால், அதையும் காட்ட வேண்டியிருக்கும்.. அனைத்து ஆவணங்களின் நகல்களையும், கையெழுத்து போட்டு ரெடியாக எடுத்து கொண்டு போவது ரொம்ப நல்லது. விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது, நகையின் எடையும் தூய்மையும் பார்த்து கடன் தொகை கணக்கிடப்படும்... சில இடங்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படலாம். உரிய காலத்தில் பணம் செலுத்தாவிட்டால், அரசு விதிகளின்படி வங்கி நோட்டீஸ் அனுப்பி ஏலம் விடும் நடைமுறைக்கு சென்றுவிடும்.. எனினும் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், குறைந்த வட்டியில் நிம்மதியாக கடனை பெறலாம் #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #நகை கடன் தள்ளுபடி அரசாணை
10 likes
8 shares