வாக்குறுதியாக அளித்தது...
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி
அத்துடன் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, 2021 வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த 2,117 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது... இதனால், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில், 10.56 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன...
அதுமட்டுமல்ல, இதன் மூலம் கடன் சுமையால் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நிதி சுதந்திரம் கிடைத்து, புதிய தொழில்களை தொடங்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அரசு அப்போது கூறியது..
மகிழ்ச்சியில் மகளிர் குழுக்கள்
அரசின் இந்த தள்ளுபடியில், கடனை செலுத்த முடியாத பெண்கள் குழுக்கள் மீதமுள்ள கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்... இதனால் பெண்கள் குழுக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் புதிய உற்பத்தி, வணிக முயற்சிகளில் இறங்கும் அளவுக்கு, அரசின் அந்த அறிவிப்பு தெம்பை தந்திருந்தது..
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில், 1.01 லட்சம் மகளிர் குழுக்களில் சேர்ந்த 10.56 லட்சம் பெண்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த தள்ளுபடியாகிய நிதியை, அரசு 2021-22 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 600 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு வழங்கியது.
மீதமுள்ள தொகையை மொத்தமாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு விடுவித்தது. இதற்குப் பொறுப்பாக வட்டி வசதி கொடுக்கப்படவில்லை.
தமிழக அரசு அசத்தல்
இதையடுத்து, கூட்டுறவு துறை, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைக்கு தொடர்பான 194 கோடி ரூபாய் வட்டியை அரசிடம் வழங்குமாறு வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலுக்கு பிறகு, அந்த நிதியை அரசு இந்த மாதம் 20ம் தேதி விடுவித்துள்ளது. இதன் மூலம், மகளிர் குழுக்கள் மீண்டும் கடன் சுமையில்லாமல் தங்கள் சொந்த தொழில்கள் மற்றும் சமூக முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு பெற்றுள்ளன #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 #நகை கடன் தள்ளுபடி அரசாணை #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?


