ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
655 views • 17 days ago
அவசர தேவைகளுக்கு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு விரைவில் நிதி கிடைக்கின்றன.. சாதாரண கடன்களுடன் ஒப்பிட்டால், நகை அடமான கடனின் வட்டி விகிதம் குறைவுதான்.. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது!!
நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயம் நாட்டில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு, குறிப்பாக கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற செலவுகளுக்காக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது வழக்கம் ஆகி உள்ளது.
கூட்டுறவு வங்கி - நகைக்கடன்
இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், இந்த வகை நகைக்கடனுக்கு விதிமுறைகள் குறைவாகவும், வட்டி விகிதம் குறைவாகவும் இருப்பது. வங்கிகள் வட்டி விகிதம் மாற்றப்பட்டாலும், மொத்தத்தில் விவசாயிகளுக்கான வட்டி சுமை குறைவாகவே இருக்கும்.
மாநில மற்றும் மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு அடமானம் பெயரில் நகைக்கடன் வழங்கி வருகின்றன.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த 2025-ம் ஆண்டு, தங்கத்தின் விலை உயர்ந்ததால், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இதனால் புதிய தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருக்கும், ஆனால் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி நகைக்கடன் மதிப்பை 60 முதல் 65 சதவீதமாக குறைத்துள்ளன. அவசர தேவைக்காக, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக பொதுநகையை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, வட்டி சற்று அதிகம், கடன் அளவும் வரம்பு விதிக்கப்படுகிறது.
இதனிடையே, ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவது, விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.. அந்தவகையில் விரைவில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது..
நகை கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பு
மாநில அரசுகள் நகைக்கடனை விரைவில் தள்ளுபடி செய்துவிடும் என்ற அபரிமிதமான நம்பிக்கையிலும் அடகு வைக்கிறார்கள்.. இந்த முறை தேர்தலில் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. இதனால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம்..
அதுமட்டுமல்ல, நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். போதாக்குறைக்கு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது..
தமிழக அரசு சர்ப்ரைஸ்?
எனவே நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பும் விரைவில் வரக்கூடும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனராம்.. அதற்கேற்றபடி, நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
2026 தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.. ஆனால், கடந்த 2021 தேர்தலில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா? #நகை கடன் தள்ளுபடி அரசாணை
6 likes
4 shares