#😇நம்மவர் கமல்😎 #ரெங்கா! #renga-vamba! சிகப்பு ரோஜாக்கள்: தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தை பூர்விகமா கொண்ட ராமன் ராகவ், சிறுவயதில் அம்மா, மனைவி போன்றோரால் ஏற்பட்ட வருத்தங்கள் காரணமா பெண்களை கண்டாலே வெறுக்கும் நிலை உருவாகி எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க என்ற நிலைக்கு போய் மும்பை மாநகரத்தையே நடுங்க வைத்தவன். சாலையில் படுத்திருக்கும் பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள், சிறுமிகள் என யாரையும் இவன் விட்டு வைக்கவில்லை, அந்த அளவு பெண் வெறுப்பு இவனுக்கு. மும்பை இரவுகளை தூங்காத இரவுகளாய் ஆக்கி வைத்திருந்தான் இவன். பெண்கள் வெளியே வரவே பயந்தனர்.இது நடந்தது 60களில்.
மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பபட்டு அப்போதைய ஆளும் அரசுக்கு பெரிய நெருக்கடி உண்டாக்கிய விசயம் இது. ஒரு வழியாக சைக்கோ ராமன் ராகவ் கைது செய்யப்பட்டு ம..... ண தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்தும் விடுதலையாகி இயற்கையாக தான் இறந்து போனான்.
இதை ஒரு மூலக்கதையாக மட்டுமே பாரதிராஜா எடுத்துக்கொண்டார், தன்னுடைய திரையுலக மந்திரிசபையில் முக்கிய மந்திரிகளில் ஒருவரான பாக்யராஜை வசனம் எழுத கூட வைத்துக்கொண்டு பாரதிராஜாவே திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கினார்.
இப்பட நாயகன் கமல் ரோடு ரோடா போய் ராமன் ராகவ் மாதிரி கொ.. செய்யல, தனக்கு பிடித்த பெண்களை ஒரு ஆடம்பர அழகான வாலிபனான கமல் காதல் வலையில் விழ வைத்து அவர்களை முடிப்பதுதான் கதை.
சிறுவயதிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட கமல் இவ்வாறு செய்வதாக ப்ளாஷ்பேக் விரியும். ஒரு வீட்டில் விசுவாசமாக இருந்த நிலையில் அந்த வீட்டு எஜமானியம்மா தவறாக நடந்த நிலையில் வீட்டு ஓனரான எஜமானர் வந்து அவர் மனைவியை கொ.செய்ய , இந்த பொம்பளைங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க என ஆரம்பிக்கிறார், வீட்டு வேலைக்காரனான அந்த சிறுவன். அந்த வாரிசு இல்லாத கோடீஸ்வர முதலாளிக்கு புள்ளையாகி போகிறார் அவர்தான் கமல்.
வளர்ந்து வாலிபன் ஆனாலும் தனது வளர்ப்பு தந்தையும் பெண்களால் பாதிக்கப்பட்டார் என அவருக்காகவும் பெண்களை ஏமாற்றி கொ. செய்கிறார். இறுதியில் இவரிடம் காதலித்து மனைவியாக மாட்டிய ஸ்ரீதேவி இவரிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை.
கமல் வடிவுக்கரசியை ஏமாற்றுவது, அவரை கொ.. செய்வது, கமல் பற்றி தெரிந்து கொண்ட ஹோட்டல் சர்வர் பாக்யராஜ் கமலால் , கொ...படுவது என அதிர்ச்சியூட்டும் அட்டாக் காட்சிகள் படத்தில் உண்டு.
அழகான கணவன் அன்பான கணவன் என நினைத்துக்கொண்டு கனவுலக வாழ்க்கையில் சஞ்சரிக்கும் ஸ்ரீதேவி ஜன்னலை திறந்தவுடன் பார்க்கில் பூமிக்கு அடியில் இருந்து வரும் கை, அதற்கு இளையராஜா கொடுத்திருக்கும் அமானுஷ்ய இசை போன்றவற்றை தனியொருவன் இரவு 12மணிக்கு மேல் உட்கார்ந்து கேட்டால் கண்டிப்பா அவனை அசைத்து பார்த்துவிடும்.
கிராமப்படம்தான் தன்னால் எடுக்க முடியும் என்று இருந்த முத்திரையை பாரதிராஜா தகர்த்து எறிந்த படம் இது.
இப்படத்தில் ஒரு பூனை ஒன்று உண்டு அதுவும் அமானுஷ்ய பூனைதான். இதை தனது நண்பர் ஆர்சி பிரகாஷ் என்பவரிடம் இருந்து பெற்றாராம் பாரதிராஜா.
கமலுக்கு பதில் இப்படத்தில் சிவக்குமாரை தான் நடிக்க வைக்க இருந்தாராம் பாரதிராஜா, உதவி இயக்குனர்களும் அவர் இதற்கு சரியாக வர மாட்டார் என கருத்து தெரிவித்து, ஒரு வழியாக கமல் களமிறக்கப்பட்டார் என கூறப்படுகிறது. கமலும் முன்பே ராமன் ராகவ் பற்றி அறிந்து இருந்தாராம்.
ரெட்ரோ காலத்து பட்டன் அப் சட்டைகள், டைகள் போன்றவற்றை பார்த்து பார்த்து செய்தாராம் கமல், ஸ்டைலான காஸ்ட்யூம்ஸில் கவனம் செலுத்தி இருக்கிறார் இவர். மேலும் தோற்றம் அமெரிக்க சைக்கோ சீரியல் கில்லர்களாக இருந்த டெட் பண்டி, ஆல்பர்ட் டிசால்வோ போல் தன்னை நடை உடைகளில் உருமாற்றிக்கொண்டாராம் கமல்.
படத்தில் பாடல்களுக்கு அதிக வேலையில்லை நிறைய பாடல்கள் இருப்பது போல் தெரியும், ஆனால் இரண்டு பாடல்கள்தான் படத்தில்.ஆபிஸ் குமாஸ்தாவாக வரும் கவுண்டமணி சில காட்சிகளில் கலகலக்க வைத்திருந்தார்.
பின்னணி இசையை பர பரவென அமைத்திருந்தார் இளையராஜா. இவரின் பின்னணி இசை இல்லையென்றால் சிரமப்பட்டு நடித்த கமல், சிரமப்பட்டு இயக்கிய பாரதிராஜா, வசனம் எழுதிய பாக்யராஜ் அனைவரின் உழைப்பும் பெரிய அளவில் தெரியாமல் போய் இருக்கும். படத்தில் இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ். கிராமத்து ஒளிப்பதிவை பாரதிராஜாவின் படங்களில் மேற்கொண்ட இவர், டார்க்கான இரவுகளில் நடக்கும் காட்சிகளை அழகாய் படமாக்கி இருந்தார்.
1978 அக்டோபர் 28 தீபாவளியன்று கமல் , ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் இது . இதே தீபாவளி நாளன்று கமல் , ஸ்ரீதேவி நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா என்ற அமைதியான படமும் ரிலீஸ் ஆகியது. இறுதியில் சிகப்பு ரோஜாக்கள் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. ம் அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம். இதையெல்லாம் டிஜிட்டலில் கொண்டு வரலாம். ஆனால் டிஜிட்டலில் வந்தாலும் ரஜினி படமாய் இருந்தாலும் கமல் படமாய் இருந்தாலும் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படங்கள்தான் வருகிறது. கவுண்டமணி கோவில் காளைல கேட்டது மாதிரி ஏன் நம்ம நாட்ல பணமே இல்லையா இருந்த பணம்லாம் என்னாச்ச்சுனு கேட்பாரே, அது போல தமிழ் சினிமால எத்தனையோ நல்ல படம் வந்திருக்கு அதை எல்லாம் டிஜிட்டலில் கொண்டு வாருங்கள் நல்லா இருக்கும். சிகப்பு ரோஜாக்களை எல்லாம் பின்னணி இசைக்காகவே டிஜிட்டலில் பார்க்கலாம் கண்டிப்பா வொர்த்.CREDIT: goes to Abiram Arunachalam முகநூல் பதிவு தரவுகளில் இருந்து
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼