கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼
84 Posts • 684K views
44 years of #வாழ்வே_மாயம் 26, ஜனவரி. 1982 கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! இந்து தமிழ் திசை நாளிதழ். 26_01_2020 எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்‌ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’. ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான். கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள். ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள். கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார். தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ! ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. ‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா. #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #ரெங்கா! #renga-vamba! புன்னகை மன்னன் FB இருந்து .
15 likes
1 share
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்: தமிழ் ஹிந்து நவம்பர் 15, 2019 நந்து: தீமையின் ஆற்றல் * ஆளவந்தான், மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைமையும் முரட்டுத்தனமும் * குணா ‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது. அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும். தோற்ற கலைஞன் * சலங்கை ஒலி ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம். ‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி. சமூகப் போராளி * சத்யா சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார். வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார். காவியத்தலைவன் * நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள். அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர். ஆதித் தமிழன் * விருமாண்டி பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன். படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான். சரித்திரத்தின் ரணம் * ஹேராம் நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான். பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன். அழகிய கிழவி * அவ்வை சண்முகி அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட கோமாளி * அபூர்வ சகோதரர்கள் சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான். மௌனச் சித்தன் * பேசும் படம் இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம். ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார். அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.World Actor The GENIUS ONly KAMALHASSAN
18 likes
10 shares
#😇நம்மவர் கமல்😎 #ரெங்கா! #renga-vamba! சிகப்பு ரோஜாக்கள்: தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தை பூர்விகமா கொண்ட ராமன் ராகவ், சிறுவயதில் அம்மா, மனைவி போன்றோரால் ஏற்பட்ட வருத்தங்கள் காரணமா பெண்களை கண்டாலே வெறுக்கும் நிலை உருவாகி எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க என்ற நிலைக்கு போய் மும்பை மாநகரத்தையே நடுங்க வைத்தவன். சாலையில் படுத்திருக்கும் பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள், சிறுமிகள் என யாரையும் இவன் விட்டு வைக்கவில்லை, அந்த அளவு பெண் வெறுப்பு இவனுக்கு. மும்பை இரவுகளை தூங்காத இரவுகளாய் ஆக்கி வைத்திருந்தான் இவன். பெண்கள் வெளியே வரவே பயந்தனர்.இது நடந்தது 60களில். மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பபட்டு அப்போதைய ஆளும் அரசுக்கு பெரிய நெருக்கடி உண்டாக்கிய விசயம் இது. ஒரு வழியாக சைக்கோ ராமன் ராகவ் கைது செய்யப்பட்டு ம..... ண தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்தும் விடுதலையாகி இயற்கையாக தான் இறந்து போனான். இதை ஒரு மூலக்கதையாக மட்டுமே பாரதிராஜா எடுத்துக்கொண்டார், தன்னுடைய திரையுலக மந்திரிசபையில் முக்கிய மந்திரிகளில் ஒருவரான பாக்யராஜை வசனம் எழுத கூட வைத்துக்கொண்டு பாரதிராஜாவே திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கினார். இப்பட நாயகன் கமல் ரோடு ரோடா போய் ராமன் ராகவ் மாதிரி கொ.. செய்யல, தனக்கு பிடித்த பெண்களை ஒரு ஆடம்பர அழகான வாலிபனான கமல் காதல் வலையில் விழ வைத்து அவர்களை முடிப்பதுதான் கதை. சிறுவயதிலேயே பெண்களால் பாதிக்கப்பட்ட கமல் இவ்வாறு செய்வதாக ப்ளாஷ்பேக் விரியும். ஒரு வீட்டில் விசுவாசமாக இருந்த நிலையில் அந்த வீட்டு எஜமானியம்மா தவறாக நடந்த நிலையில் வீட்டு ஓனரான எஜமானர் வந்து அவர் மனைவியை கொ.செய்ய , இந்த பொம்பளைங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க என ஆரம்பிக்கிறார், வீட்டு வேலைக்காரனான அந்த சிறுவன். அந்த வாரிசு இல்லாத கோடீஸ்வர முதலாளிக்கு புள்ளையாகி போகிறார் அவர்தான் கமல். வளர்ந்து வாலிபன் ஆனாலும் தனது வளர்ப்பு தந்தையும் பெண்களால் பாதிக்கப்பட்டார் என அவருக்காகவும் பெண்களை ஏமாற்றி கொ. செய்கிறார். இறுதியில் இவரிடம் காதலித்து மனைவியாக மாட்டிய ஸ்ரீதேவி இவரிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை. கமல் வடிவுக்கரசியை ஏமாற்றுவது, அவரை கொ.. செய்வது, கமல் பற்றி தெரிந்து கொண்ட ஹோட்டல் சர்வர் பாக்யராஜ் கமலால் , கொ...படுவது என அதிர்ச்சியூட்டும் அட்டாக் காட்சிகள் படத்தில் உண்டு. அழகான கணவன் அன்பான கணவன் என நினைத்துக்கொண்டு கனவுலக வாழ்க்கையில் சஞ்சரிக்கும் ஸ்ரீதேவி ஜன்னலை திறந்தவுடன் பார்க்கில் பூமிக்கு அடியில் இருந்து வரும் கை, அதற்கு இளையராஜா கொடுத்திருக்கும் அமானுஷ்ய இசை போன்றவற்றை தனியொருவன் இரவு 12மணிக்கு மேல் உட்கார்ந்து கேட்டால் கண்டிப்பா அவனை அசைத்து பார்த்துவிடும். கிராமப்படம்தான் தன்னால் எடுக்க முடியும் என்று இருந்த முத்திரையை பாரதிராஜா தகர்த்து எறிந்த படம் இது. இப்படத்தில் ஒரு பூனை ஒன்று உண்டு அதுவும் அமானுஷ்ய பூனைதான். இதை தனது நண்பர் ஆர்சி பிரகாஷ் என்பவரிடம் இருந்து பெற்றாராம் பாரதிராஜா. கமலுக்கு பதில் இப்படத்தில் சிவக்குமாரை தான் நடிக்க வைக்க இருந்தாராம் பாரதிராஜா, உதவி இயக்குனர்களும் அவர் இதற்கு சரியாக வர மாட்டார் என கருத்து தெரிவித்து, ஒரு வழியாக கமல் களமிறக்கப்பட்டார் என கூறப்படுகிறது. கமலும் முன்பே ராமன் ராகவ் பற்றி அறிந்து இருந்தாராம். ரெட்ரோ காலத்து பட்டன் அப் சட்டைகள், டைகள் போன்றவற்றை பார்த்து பார்த்து செய்தாராம் கமல், ஸ்டைலான காஸ்ட்யூம்ஸில் கவனம் செலுத்தி இருக்கிறார் இவர். மேலும் தோற்றம் அமெரிக்க சைக்கோ சீரியல் கில்லர்களாக இருந்த டெட் பண்டி, ஆல்பர்ட் டிசால்வோ போல் தன்னை நடை உடைகளில் உருமாற்றிக்கொண்டாராம் கமல். படத்தில் பாடல்களுக்கு அதிக வேலையில்லை நிறைய பாடல்கள் இருப்பது போல் தெரியும், ஆனால் இரண்டு பாடல்கள்தான் படத்தில்.ஆபிஸ் குமாஸ்தாவாக வரும் கவுண்டமணி சில காட்சிகளில் கலகலக்க வைத்திருந்தார். பின்னணி இசையை பர பரவென அமைத்திருந்தார் இளையராஜா. இவரின் பின்னணி இசை இல்லையென்றால் சிரமப்பட்டு நடித்த கமல், சிரமப்பட்டு இயக்கிய பாரதிராஜா, வசனம் எழுதிய பாக்யராஜ் அனைவரின் உழைப்பும் பெரிய அளவில் தெரியாமல் போய் இருக்கும். படத்தில் இன்னொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ். கிராமத்து ஒளிப்பதிவை பாரதிராஜாவின் படங்களில் மேற்கொண்ட இவர், டார்க்கான இரவுகளில் நடக்கும் காட்சிகளை அழகாய் படமாக்கி இருந்தார். 1978 அக்டோபர் 28 தீபாவளியன்று கமல் , ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் இது . இதே தீபாவளி நாளன்று கமல் , ஸ்ரீதேவி நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா என்ற அமைதியான படமும் ரிலீஸ் ஆகியது. இறுதியில் சிகப்பு ரோஜாக்கள் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. ம் அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம். இதையெல்லாம் டிஜிட்டலில் கொண்டு வரலாம். ஆனால் டிஜிட்டலில் வந்தாலும் ரஜினி படமாய் இருந்தாலும் கமல் படமாய் இருந்தாலும் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படங்கள்தான் வருகிறது. கவுண்டமணி கோவில் காளைல கேட்டது மாதிரி ஏன் நம்ம நாட்ல பணமே இல்லையா இருந்த பணம்லாம் என்னாச்ச்சுனு கேட்பாரே, அது போல தமிழ் சினிமால எத்தனையோ நல்ல படம் வந்திருக்கு அதை எல்லாம் டிஜிட்டலில் கொண்டு வாருங்கள் நல்லா இருக்கும். சிகப்பு ரோஜாக்களை எல்லாம் பின்னணி இசைக்காகவே டிஜிட்டலில் பார்க்கலாம் கண்டிப்பா வொர்த்.CREDIT: goes to Abiram Arunachalam முகநூல் பதிவு தரவுகளில் இருந்து #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼
7 likes
8 shares