கமல்ஹாசன் ஹிட்ஸ்
173 Posts • 1M views
#இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ் #விருமாண்டி_விருமாண்டி #பேர_சொல்லவே_வாய்_வரல #21_ஆம்_வருடத்தில்_விருமாண்டி இந்த படத்தை டைரக்ஷன் செய்ய முதலில் தெம்பு வேண்டும்.அதுவும் தன் சொந்த செலவில் படம் எடுக்க நம்பிக்கை வேண்டும்.அந்த இரண்டும் இவரிடம் இருந்ததால் தான் #இன்றுவரை_இவர்_மட்டுமே #உலகநாயகன் சினிமாவில் வந்தவர் கோடி சென்றவர் கோடி சினிமா துறையில் இன்றில்லை நேற்றில்லை சினிமா துறை இருக்கும் வரை இவர் பெயர் நிலைத்திருக்கும். அவ்வளவு தொழில்நுட்பங்களை சினிமா துறையில் புகுத்தியுள்ளார். விருமாண்டி படத்திற்கு முதலில் வைத்த பெயர் சண்டியர். அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் இந்த படத்திற்கு பெயர் மாற்றச் சொல்லி வற்புறுத்தியதால் சண்டியர் என்ற பெயரை விருமாண்டி என்று மாற்றியமைத்தார். அந்தப் படத்திலேயே இதை நக்கலாக சொல்லி இருப்பார். பாலசிங்கம் அவர்கள் சண்டியரே சண்டியரே என்று கூப்பிட தலைவர் அம்மா ஆசையாய் வச்ச பேரு விருமாண்டி இருக்கையிலே என்ன சண்டியர் என்று கூப்பிடுற என்று கேட்க அதற்கு அவர் உனக்கு ஊர் வச்ச பெயர் சண்டியர் தானே என்று சொல்லுவார். #விருமாண்டி_என்பது_அடங்காத #காளை_அது_என்றும்_அப்படித்தான் இந்தப்படத்தில் வரும் பெயர்களும் வித்தியாசமாக அமைந்திருக்கும். விருமாண்டி, அன்னலட்சுமி, கொத்தாளத் தேவர் ,ஏஞ்சலா காத்தமுத்து, நல்லம நாயக்கர். இத்திரைப்படத்தில் அனைத்து கேரக்டர்களும் பேசப்படும் கேரக்டராகவே அமைந்திருக்கும். இந்த படத்தை முதல் தடவை பார்க்கும் போது சற்று புரியாததாகவே தோன்றும்.படத்தை நன்றாக கவனித்தால் கதை புரிய ஆரம்பிக்கும். கொத்தாளத் தேவர் சொல்லும் ஒரு கதை. பின்பு விருமாண்டி சொல்லும் ஒரு கதை. முதலில் விருமாண்டி நமக்கு கெட்டவனாக தோன்றினால் அடுத்து விருமாண்டி சொல்லும்போது முழுமையாக நமக்கு புரியும். #வேற_லெவல்_திரைப்படம் ஜெயிலில் கொத்தாளத் தேவரை பேட்டி எடுக்கும்போது அதான் விருமாண்டி விருமாண்டி பாத்தீங்களா அவன் பேரை சொல்ல வாயை வரல என்று சொல்லி ஆரம்பிக்கும் போதும். விருமாண்டி பேட்டி எடுக்கும்போது நீங்கள் போடும் உள்பாடி சைஸ் என்னவென்று கேட்கும் போதும் படம் என்னடா இப்படி எடுத்து இருக்காங்க வேற லெவல் என்று அப்போதே புரிய ஆரம்பிக்கும். #விருமாண்டி_கதை_சொல்ல #ஆரம்பிக்கும்_போது_தறிகெட்ட_ஒரு_காளை_மாடு_எப்படி_சிக்கி #சீரழிந்தது_விழுந்து_எழுந்து #அனைவரையும்_சிதைத்தது_என்பது_நமக்கு_புரியும் சிங்கப்பூர் மச்சான் ஆக காளையை அடக்கும் விருமாண்டி பின்பு அன்னலட்சுமியை தன் காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து ஊரை விட்டுப் போகும் அந்தக் காட்சி பின்பு அன்னலட்சுமியை கொத்தாளத் தேவர் அழைத்து வந்து சாக அடிக்கும் அந்த காட்சி எல்லாம் ஈரக் குலையை நடுங்க வைக்கும். நல்லமா நாயகனார் பஞ்சாயத்து காட்சி எல்லாம் வேற லெவல் அங்கு விருமாண்டி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் என்ன பேசுகிறார் என்றே நாம் காதில் கேட்க முடியாத அளவிற்கு கைதட்டல் விசில் பறக்கும். அப்பாத்தா செத்து குழிதோண்டி அந்த குழியில் ஊற்று தண்ணீர் கிளம்பும்போது விருமாண்டி அதை முகத்தில் பூசிக்கொண்டு பேசும் வசனங்கள் எல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதைப்போல் #நம்ம_வீட்ல_ஏது_மாமா_பெருமனுஷங்க என்று சொல்லும் அந்த காட்சி எல்லாம் தலைவர் வேற லெவல். கூட்டிக் கொடுக்கிறதுனா என்ன தெரியுமா என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அந்த பாங்கு தலைவரைத் தவிர வேறு எவரால் பேச முடியும். இங்கு வாயும் பேசும் அருவாளும் பேசும் என்று சும்மா வசனம் வைக்கவில்லை ஒவ்வொரு வெட்டும் வேற லெவல் அதிலும் ஒரு கத்தியால் வெட்டி விட்டு இன்னொரு கத்தி எடுத்து வெட்டுவார் பாருங்க #தலைவா_என்_உலகநாயகா #எங்கப்பா_இவ்வளவு_வித்தைய #கத்துக்கிட்ட இந்தப் படத்தை நான் எழுத வேண்டுமென்றால் என் பதிவுகள் கண்டிப்பாக ஒரு 15 பதிவுகள் தேவைப்படும். ஏனென்றால் ஒவ்வொரு வரியாக அனுபவித்து எழுதலாம் ஒரு காட்சியையும் ரசித்து ரசித்து எழுதலாம். அதற்கு நேரமின்மை காரணமாக மனதில் இருக்கும் அந்த காட்சிகளை மட்டும் நான் உங்களுக்காக எழுதி இருக்கின்றேன். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் திரு‌இளையராஜா அவர்களின் இசை. படத்தின் டைட்டில் மியூசிக் வித்தியாசமாக இருக்கும். படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். உன்னைவிட சாங் வேற லெவல். படத்தில் வரும் சின்ன சின்ன பாடல்களும் கலக்கல். படத்தில் எவ்வளவு பேர் நடித்திருந்தாலும், எவ்வளவு இனிமையான பாடல்கள் அமைந்திருந்தாலும் கடைசியில் படம் விட்டு வெளியே வரும்போது நம் ஒவ்வொருவரின் மனதிலும் விருமாண்டியே முழுமையாக ஆட்கொண்டிருப்பார்...... #விருமாண்டி. Thanks & credited goes to john peter FB தரவு
12 likes
14 shares
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்: தமிழ் ஹிந்து நவம்பர் 15, 2019 நந்து: தீமையின் ஆற்றல் * ஆளவந்தான், மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைமையும் முரட்டுத்தனமும் * குணா ‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது. அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும். தோற்ற கலைஞன் * சலங்கை ஒலி ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம். ‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி. சமூகப் போராளி * சத்யா சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார். வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார். காவியத்தலைவன் * நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள். அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர். ஆதித் தமிழன் * விருமாண்டி பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன். படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான். சரித்திரத்தின் ரணம் * ஹேராம் நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான். பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன். அழகிய கிழவி * அவ்வை சண்முகி அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட கோமாளி * அபூர்வ சகோதரர்கள் சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான். மௌனச் சித்தன் * பேசும் படம் இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம். ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார். அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.World Actor The GENIUS ONly KAMALHASSAN
18 likes
10 shares
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! மகாநதி ஒரு மீள்பார்வை. மகாநதி பற்றி சந்தான பாரதி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம், `மகாநதி'. இந்தப் படத்தை இயக்கும்போது, பல இடங்களில் கண்ணீர் விட்டிருக்கேன். படம் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேசமயம், பொண்ணுங்களைப் பெத்த சிலர் திட்டவும் செஞ்சாங்க. முக்கியமா, என் அண்ணனே என்னைத் திட்டுனார். `ஏண்டா இப்படி எடுத்த'னு... இந்த நெகிழ்வுக்கும், மகிழ்வுக்கும் காரணம் என் நண்பர் கமல்தான். அவரால்தான் இந்தப் படம் சாத்தியமாச்சு.'' - `மகாநதி' படம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த நாள்களை நெகிழ்வோடு நம்மிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார், படத்தின் இயக்குநர் சந்தானபாரதி. `` `மகாநதி' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் கமல் சார். இந்தப் படம் உருவாக முக்கியமான காரணமும், அவர்தான். எழுத்தாளர் ரா.கி.ரெங்கராஜன், கமல், நான் மூணு பேரும் சேர்ந்து ஒரு ஃபேமிலி டிராமா படம் எடுக்கலாம்னுதான் பல கதைகளைப் பேசிக்கிட்டு இருந்தோம். வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடிச்சுத் திரும்பிய கமல் சார், இந்தப் படத்தோட கருவைச் சொன்னார். எங்க எல்லோருக்குமே அது ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே, உட்கார்ந்து பேசி, இந்தப் படத்தோட கதையை முழுமையாக்கினோம். படத்தை நான்தான் இயக்கணும்னு கமல் சார் உறுதியா இருந்தார். அந்தச் சமயத்துல ரொம்ப பிஸியா இருந்த சுகன்யாவைப் படத்தின் ஹீரோயினா கமிட் பண்ணோம். அவங்ககூட `சின்ன மாப்பிள்ளை' படத்துல நானும் நடிச்சிருப்பேன். அதனால, `மகாநதி'யில அவங்க நடிக்கணும்னு விருப்பப்பட்டுக் கேட்டேன்; அவங்களும் அழகா நடிச்சுக் கொடுத்தாங்க. படத்தோட வில்லனா கொச்சின் ஹனிபா நடிச்சார். `குணா' படத்துலேயே அவர் நடிக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னை. முடியாம போயிருந்தது. அது இந்தப் படம் மூலமா நிறைவேறுச்சு. படத்துல வர்ற கமல் சாரோட பொண்ணு கேரக்டருக்கான ரொம்ப மெனக்கெட்டோம். சின்ன வயசுப் பொண்ணா மகாநதி ஷோபனா நடிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் வயதுக்கு வந்த பெண்ணா, நடிகை சங்கீதா நடிச்சிருந்தாங்க. இதுல ஷோபனாவை நாங்க முதலில் ஒரு ஸ்கூல பார்த்தோம். அவங்க ரொம்ப அழகாகப் பாடவும் செஞ்சாங்க. அதனால, இளையராஜா அவருடைய இசையில் படத்துல வரக்கூடிய `ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்' பாடலைப் பாடவெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டாங்க. கமல் தன் பொண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிற காட்சியைக் கொல்கத்தாவுல இருக்கிற ஒரு ரெட்லைட் ஏரியாவுல ஷூட் பண்ணினோம. கமல் கதறி அழும் காட்சியைப் பார்க்கிறப்போ, நானே கண் கலங்கிட்டேன். ரொம்ப தத்ரூபமா நடிச்சார். இப்போவும் இந்தக் காட்சியை டிவியில பார்க்கிறப்போ எமோஷனல் ஆகுற ஆடியன்ஸ் அதிகம். ஆனா, இந்தக் காட்சியை ஷூட் பண்றப்போ, எங்களுக்குப் பெரிய பிரச்னை வந்துச்சு. கமலோட பொண்ணு கேரக்டர்ல நடிச்ச சங்கீதா தீடிர்னு இந்தக் காட்சியில நடிக்கப் பிடிக்காம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரல. அதனால, அங்கே இருந்த ஒரு பொண்ணை இந்தக் காட்சியில நடிக்க வெச்சோம். படத்தோட பெயர் `மகாநதி'க்கு ஏத்த மாதிரி, படத்துல எல்லா கேரக்டருக்கும் கிருஷ்ணா, யமுனா, காவேரினு நதிகள் பெயரை வெச்சோம். படத்தோட ரீ-ரெக்கார்டிங் அப்போ இளையராஜா சார் ரொம்பவே கலங்கிட்டார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ, எங்க `மகாநதி' டீம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதெல்லாத்தையும் சாத்தியமாக்குனது, கமல் சார்தான். நானும், கமலும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே டுடோரியல்ல படிச்சோம். அவர் ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நான் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். காலேஜ் முடிஞ்சு, இயக்குநர் ஶ்ரீதர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அந்த நேரத்துல ஶ்ரீதர் சார் படத்துல கமல் சார் ஹீரோவா கமிட் ஆனார். அப்போ, `நம்ம நண்பனா இருந்தாலும், எப்படி அவரை அணுகிப் பேசுறது'னு ஸ்பாட்ல எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. அதனால, ஷுட்டிங் ஸ்பாட்ல கமலைத் தவிர்த்தேன். ஒரு பிரேக் டைம்ல, `டேய் நில்லுடா'னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, கமல் சார்தான். `என்கிட்ட நல்ல நண்பனா பேசு'னு அதட்டுனார். அப்படித்தான் எங்க நட்பு. இப்போவரைக்கும் நல்லபடியா தொடருது. பிறகு அவர் தயாரிப்புல உருவான எல்லாப் படத்திலும் நானும் வொர்க் பண்ணியிருக்கேன். அவர் எப்பவும் நல்ல இருக்கணும்.'' நெகிழ்வாகத் தொடங்கி, நெகிழ்வாகவே முடிக்கிறார், சந்தானபாரதி. #கமல்ஹாசன் ஹிட்ஸ் நன்றி: காளிமுத்து ராஜ் வலைதள பதிவு
6 likes
4 shares