Ayisha💞
2K views
4 days ago
💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னைஆயிஷா(ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துஆ! இம்மை மறுமைக்கான அனைத்து நலன்களையும் உள்ளடக்கியது! யா அல்லாஹ்! உன்னிடம் நன்மைகள் அனைத்தையும் உடனே கிடைக்கின்ற தாமதமாக கிடைக்கின்ற அவைகளில் நான் அறிந்த அறியாத அனைத்து நன்மைகளையும் கேட்கிறேன்! உன்னிடம் அனைத்து தீங்குகளிலிருந்தும் உடனே வருகின்ற தாமதமாக வருகின்ற,அவைகளில் நான் அறிந்த அறியாத அனைத்து தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்! உன்னிடம் சொர்க்கத்தையும், சொல்லாலும்,செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் கேட்கிறேன் நரகத்தைவிட்டும், சொல்லாலும், செயலாலும் அதன் பால் சேர்க்கும் அனைத்தையும் விட்டும் உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன்! உன்னிடம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் கேட்ட அனைத்து நன்மைகளையும் கேட்கிறேன! யா அல்லாஹ்! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் எவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடினார்களோ அவற்றையிலிருந்து நானும் பாதுகாவல் தேடுகிறேன்! (நபிﷺ அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ .நூல்; இப்னு மாஜா) #🕋யா அல்லாஹ்