பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
531 views
ஸ்ரீ (969) #ராமாநுஜர் ராமானுஜா என்று சொல்லிப் பாடணும் ராமானுஜா ராமானுஜா என்று சொல்லிப் பாடணும் அது நாவிலே வராது போனால் நல்லவரோடு சேரணும் (2) ஆண்டாள் திருப்பாவையை ஆசையுடனே பாடணும் அடியார் குழாங்களுடனே கோஷ்டியாகவே சேரணும் கெஞ்சி கெஞ்சி கேக்கணும் தஞ்சம் என்றே பணியணும் அஞ்சன வண்ணன் பாதத்தில் அடிமையாகவே புகுரணும் – (ராமானுஜா) ஆழ்வார்கள் அவதரித்த நாட்களை கொண்டாடணும் அவர்கள் அருளிச் செய்த பாசுரத்தை ஆசையுடனே பாடணும் பொய்கையார் பூதத்தார் பேயார் பதின்மர் புகழை பாடணும் பாசுரம் வராது போனால் நல்லவரோடு சேரணும் – (ராமானுஜா) கோயில் திருமலையில் குடியாக இருக்கணும் கோவிந்தனின் நாமங்களை கோஷ்டியாகவே பாடணும் திருவரங்கத் திருப்பதியில் இருப்பில்லாமல் போனாலும் ராமானுஜா ராமானுஜா என்றே சொல்லிப் பாடணும் – (ராமானுஜா)