90 களில் மகாராஷ்டிராவில் இருந்த போது ஒரு நாள் என் நண்பரின் வீட்டுக்கு போயிருந்தேன்.. அவர் ஒரு மராட்டியர்..
ஒரு சந்தர்பத்தில் அந்த வீட்டின் பூஜை அறையை பார்த்த போது அங்கே எல்லா கடவுள்களின் போட்டோக்களும் இருந்ததை பார்க்க முடிந்தது..
அப்போது அங்கிருந்த ஒரு போட்டோவை குறிப்பாக காட்டி நான் கேட்டேன்.
"இந்த போட்டோவில் சிவன் இருக்கிறார்.. பக்கத்தில் மனைவி பார்வதி.. கூடவே அவர் மகன் விநாயகன்.. ஆனால் இந்த குடும்பத்தில் முருகனை காணோமே?" என்றேன்..
அவர்களுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை...
கடைசியில் ஒரு வழியாக, "ஓ.. கார்த்திகேயனை சொல்றியா?" என்ற படி "கார்த்திகேயன் போட்டோவை இங்கே நாங்கள் வீடுகளில் வைப்பதும் கிடையாது.. கும்பிடுவதும் கிடையாது"
"என்ன காரணம்" என்று கேட்டேன்..
"கார்த்திகேயன் போட்டோ வீட்டுக்கு நல்லது கிடையாது.. அதனால் அந்த போட்டோவை வைப்பது இல்லை"
" ஏன் நல்லது இல்ல?"
"கார்த்திகேயன் போட்டோ வைத்தால் வீட்டில் சண்டை வரும்.. பிரச்னை வரும்.. அமைதி இருக்காது. அதனால் தான் வைப்பது இல்லை"
எனக்கு ஆச்சர்யம்..
என்னோட ஆச்சர்ய முகத்தை பார்த்து அவர்களே தொடர்ந்தார்கள்.
"அந்த பழ விஷயத்தில் குடும்பத்தில் சண்டை போட்டு, கலகத்தை உண்டாக்கி விட்டு, கோபத்தோடு போனவன் தான் கார்த்திகேயன்.. அதனால் தான் நீங்க முருகன்னு சொல்ற கார்த்திகேயன் போட்டோவை நாங்கள் வீட்டில் வைப்பது கிடையாது. கார்த்திகேயன் போட்டோவை வைத்தால் குடும்பத்தில் கலகம் வரும்.. குடும்பத்துக்கு ஆகாது" என்றார்கள்..
ஒரு கடவுளை இந்தியாவின் ஒரு பகுதி கோவில் கட்டி கும்பிடுகிறது.. அதே கடவுளை இந்தியாவின் இன்னொரு பகுதி நெகடிவ் முத்திரை குத்தி ஒதுக்குகிறது..
இன்னும் சொல்லபோனால், வடக்கனுங்க ரொம்ப பேருக்கு *முருகன்"னு சொன்னா யாருன்னே தெரியாது..
ஆனா அவனுங்க கும்பிடுர எல்லா தெய்வங்களையும் நாம ஏத்துகிட்டோம்..
சுதந்திர போராட்ட தியாகின்னு அவனுங்க காட்டின எல்லாரையும் பாடமா படிக்கிறோம்..
ஆனா அவனுங்களுக்கு நாம கும்பிடுற முருகனை தெரியாது.. நாட்டுக்கு போராடின வவுசியை தெரியாது.. சிவாவை தெரியாது.. வாஞ்சி நாதனை தெரியாது..
ஆனா இப்படி தேர்தல்னு வந்தா மட்டும் இங்கே வந்து"முருகா.. முருகா"னு தினுசு தினுசா கூவுரானுங்க....
பிக்காலி பசங்க...
ரெக்சன்...
#👨மோடி அரசாங்கம்