Arunachalam
693 views
1 days ago
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாம் நாள் விசாரணையினை முடித்துவிட்டு தனி விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் விஜயண்ணா, இத்தோடு விசாரணை அவர்மேல் முடிந்துவிட்டது என சொல்லமுடியாது எப்போது அழைத்தாலும் அவர் செல்லவேண்டும் விவகாரம் கட்சியின் முக்கிய முன்னணி புள்ளிகள், விஜயணா தாண்டி இப்போது திமுகவுக்கு முரசொலி மாறன் போல விஜயண்ணாவுக்கு இருக்கும் அந்த ஜாண் ஆரோக்கியசாமி நோக்கி திரும்புகின்றது, இவர்தான் விஜயண்ணாவுக்கு சகுனி போன்ற சாயல் எல்லாமும் அவரே இனி விசாரணை எந்த நோக்கில் செல்லும் என்பதை கசியும் அல்லது கசியவிடபடும் செய்திகளில் இருந்தே அறியலாம் விவகாரம் விஜயண்ணா கட்சிக்கான நிதி ஏற்பாடு நோக்கி செல்கின்றது பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு, , எதிர்கால ஏற்பாடு என அது எங்கெல்லாமோ சுற்றுகின்றது, விவகாரம் விஜய்க்கு சாதகமாக இருப்பது போல் தெரியவில்லை, நடப்பதை இனி காலம் காட்டும் தமிழகத்தில் சினிமா நடிகர் கட்சி துவங்குவது ஒன்றும் புதித்தல்ல ஆனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அங்கு பிரபலமான நடிகர் கட்சி தேசிய கட்சிக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பது ஒருமாதிரி அரசியல் எம்ஜிஆர் கட்சி துவக்கும் போது அல்ல அதற்கு முன்பே கவனமாக இருந்தவர், டெல்லியிடம் சிக்குமளவு அவர் எந்த வில்லங்கமும் செய்ததில்லை, மொழிப்போர் எனும் இந்தி எதிர்ப்பில் அவர் தார்சட்டி தூக்கியதாகவோ, திராவிட கொள்கை படி இந்துமத துவேஷம் பேசியதாகவோ இதர திராவிட குப்பைகளை தூக்கி சுமந்ததாகவோ காண முடியாது இதனால் கட்சியின் முக்கிய முகமாக இருந்தபோதே டெல்லியின் அபிமான பட்டியலில் இருந்தார்,அவர் சுடபட்டபோதும் டெல்லியின் சில நகர்வுகள் அவரை நோக்கி காவலாக வந்தன அது அவர் கட்சி தொடங்கும் போதும் இருந்தது அவர் டெல்லிக்கு எரிச்சல் தரும் எதையும் தனிகட்சியானபின்பும் செய்யவில்லை , மிக முக்கியமாக மிசா காலம் வந்தபோது அதை வரவேற்றார், அகில இந்தியாவிலே ஏன் உலகிலே மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அவர்தான் ஆயிரம் யானை பலம் கொண்ட எம்ஜிஆரின் அரசியலே இப்படித்தான் இருந்தது அதன் பின் நடிகர்கள் அரசியல் பெரிதாக சோபிக்கவில்லை, பாக்யராஜின் அரசியலோ , டி.ராஜேந்தரின் அரசியலோ இங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 1996ல் ரஜினி மேல் எதிர்பார்ப்பு வந்தது, அவர் லாகவமாக அரசியலில் சிக்காமல் ஆட்சிமாற்ற உதவி அதுவும் மூப்பனார் மூலம் உதவி என எதிலும் சிக்காமல் நழுவினார், காங்கிரஸ் பாஜக என இருவரையும் லாவகமாக கையாண்டு தப்பினார் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது டெல்லி காங்கிரஸின் குடுமி அய்யா கலைஞரிடம் இருந்ததால் விஜய்காந்தால் காங்கிரஸ் பக்கம் நகரமுடியவில்லை, அப்படி ஒரு பெரும் செக் வைத்துவிட்டு அவரின் மண்டபம் வரை இடித்து காட்டியது தமிழக திமுக அரசு, அதன்பின் விஜயகாந்தால் ஒருமுறை திமுக அரசை அகற்ற உதவ முடிந்தது அந்த முடிவும் ஜெயாவுக்கு சாதகமானதே தவிர விஜயகாந்த நிலமை அணில் போலவோ வானரம் போலவோ ஆயிற்று தனியாக அவரால் பெரிய அளவில் கட்சிநடத்தி சோபிக்க முடியவில்லை அதன் பின் எழாமலே போனார் ஒரு மாகாண கட்சி டெல்லியில் பிடி இல்லை என்றால் நிலைக்க முடியாது என்பதற்கு அவர் இரண்டாம் சாட்சி இப்படியான தமிழக்த்தில் விஜயண்ணாவின் வரவு ஆரம்பத்திலே காங்கிரசுக்கு ஆதரவு என்ற நிலைபாட்டில் இருந்தது ஆனால் இது இந்திரா காலம் அல்ல பாஜக காலம் அரசியல் என்பது ஆயிரம் கணக்குகளை கொண்டது, தமிழகத்தில் இழந்த பலத்தை விஜயினை கொண்டு மீட்க காங்கிரஸ் நினைத்தால் அதை பாஜக அனுமதிக்காது அது அவர்கள் நீண்டகால திட்டத்துக்கு நல்லதல்ல, திமுகவும் எளிதில் விடாது அவர்களின் கட்சிக்கும் அது நல்லதல்ல‌ இங்கு ஒருமாதிரி நெளிந்து வளைந்து வெளிவரவேண்டும் அந்த வித்தை விஜயண்ணாவுக்கு தெரியாது சிக்கி கொண்டார் எம்ஜிஆர் கட்சி துவங்கும்போது அவர் மேலும் அந்நிய செலாவணி வழக்கு மிரட்டல்கள் இருந்தன, வழக்கு பதிவாகவில்லையே தவிர அப்படியான காட்சிகள் இருந்ததை பல ஆவணங்களில் காணலாம் எம்ஜிஆரின் காலம் வேறு, அப்போதைய சூழல் வேறு எம்ஜிஆரின் பலம் வேறு என்றாலும் அவர் டெல்லிக்கு பணிந்தே சென்றார் இது வரலாறு இப்போது பாஜக அசுர பலத்தோடு இருக்க அவர்களை மீறி விஜய் வரமுடியுமா என்பது காலத்தின் கையில்தான் இருக்கின்றது என்றாலும் பல விஷயங்கள் டெல்லி கையிலும் இருக்கின்றன‌ இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் காங்கிரஸின் அமைதி, விஜயே அதில்தான் குழம்பி போயுள்ளார் என்பதுதான் விஷயம் ஆம், கரூர் சம்பவம் நடந்தபோது விஜய்க்கு முதல் ஆறுதல் ராகுலிடம் இருந்து வந்தது, விஜயும் காங்கிரசும் நெருங்கி வந்ததையும் பொங்கலுக்கு பின் காங்கிரஸ் மேலிடம் விஜயினை சந்திக்க இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள் இதை காட்டியே திமுகவிடம் காங்கிரசார் தைரியமாக மோத துவங்கினார்கள் இன்னும் அது ஓயவில்லை ஆனால் பொங்கல் நேரம் சரியாக சிபிஐ விசாரணைக்கு விஜய் அழைக்கபட காங்கிரஸ் தரப்பு கடும் அமைதிக்குள் சென்றது, காங்கிரஸின் மேலிடம் ஏதோ போபர்ஸ் வழக்கு, நேஷனல் ஹெரால்டு வழக்குபோல் இங்கே பெரிய மவுனம் காப்பது திமுகவுக்கே குழப்பம் அப்படியே விஜய்க்கும் குழப்பம் காங்கிரஸ் விஜயினை காட்டி திமுகவினை மிரட்டி பார்த்ததா அல்லது விஜயினை இப்போது கைவிடுகின்றதா என்பதே தெரியாமல் எல்லோரும் குழம்பியிருக்கும் நேரமிது டெல்லியில் விசாரணை முடிந்திருக்கலாம் ஆனால் விஜய் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் இவைதான் ஒன்று தைரியமாக காங்கிரசுடன் சேர்ந்து பாஜக கூட்டணி, திமுக கூட்டணியினை எதிர்க்க வேண்டும், அப்போது வரும் இருமுனை அழுத்தமும் அவர் தாங்க வேண்டும் அல்லது தனித்து நின்று கொண்டு சீமானை போல் எல்லோர்ம் மேலும் கல்லெறிய வேண்டும் அப்போதும் ஒரு கல் பாஜக மேல் விழுந்தால் நிலமை சிக்கலாகலாம் மூன்றாவது தேர்தலை புறக்க்கணித்துவிட்டு 2031ல் சந்திப்போம் உறவுகளே என சினிமாவுக்கு ஓடலாம் விஜய் உண்மையிலே சிக்கலான நேரத்தில் இருக்கின்றார், தன்னை உருவாக்கிய காங்கிரசா இப்போது தன்னை நோக்கி புன்னகைக்கும் பாஜகவா இல்லை திமுகவா இங்கு யார் எதிரி யார் நண்பன் என தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார் எது அடுத்த வழி ? எது பாதுகாப்பான் நகர்வு என்பதும் அவருக்கு தெரியவில்லை, எல்லாம் வேண்டாம் என இனி நடிக்க சென்றாலும் ஜனநாயகன் படம் படும் பாட்டிலே இனி படம் பற்றியும் யோசிக்க முடியாது அவர் மீண்டு வருவது கொஞ்சமல்ல நிறையவே சிரமம், இனி அவருக்கு எளிதில் தூக்கம் வராது, அப்படியே தூக்கம் வந்தாலும் அய்யா கலைஞர் மஞ்சள் சால்வை சூழ தன் மந்தகாச புன்னகையினை வீசியபடி "தம்பி , அரசியல் இப்போது புரிந்ததா?" என சொல்லி புன்னகைப்பார் அத்தோடு அலறி எழுவார் விஜயண்ணா எந்த பாஸ்டர், போதகர் ஏன் ஆனானபட்ட இயேசப்பா வந்தாலும் அந்த அய்யா கலைஞர் ஆவியினை விரட்ட முடியாது காரணம் அது அரசியல் ஆவி அதை விரட்டும் சக்தி யாருக்குமில்லை , அரசியல் இருக்குமிடமெல்லாம் புன்னகைத்தபடி அதுவும் இருக்கும் #👨மோடி அரசாங்கம்