messi
549 views
#இந்திய_விடுதலைப்_போராட்ட_வீரர்_லாலா_லஜபதி_ராய் #பிறந்தநாள் #ஜனவரி_28 ஜனவரி 28, இன்று -பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்..!! 1865 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் துதிகே என்ற ஊரில் பிறந்த அவர், 1888இல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். பஞ்சாபி எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான லாலா லஜபதி ராய், பஞ்சாப் சிங்கம் என்று பொருள் தரும் விதத்தில் "பஞ்சாப் கேசரி' என்றும், "ஷேர்-இ-பஞ்சாப்' என்றும் அழைக்கப்படுகிறார். 1905ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் தன்னாட்சி அதிகாரத்தினை முன்வைத்து அனைவரையும் வழிநடத்திச் சென்றார். 1928இல் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த “சைமன் கமிஷனே திரும்பிப்போ” போராட்டத்தின் போது வெள்ளையர்களின் தடியடியில் தலையில் காயமுற்று, உயிரிழந்தார். #life #lifes