#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁நார்மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பியு யிர்க்கொரு நற்றுணைவன்_
_🍁கார்மலி மேதிய தேறிய காலனை அன்றுதை கண்ணுதல் எம்பெருமான்_
_🍁கூர்மலி மூவிலை வேலினன் ஓர்விடை யான்சுடு காடுறை கொள்கையினான்_
_🍁வார்சடை மேல்இள மாமதி சூடிய வன்பதி வாஞ்சிய நன்னகரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_மனத்தில் அன்போடு நல்ல திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிர்க்குச் சிறந்த பாதுகாவல் !! கரிய எருமையின்மீது ஏறி வரும் நமனை முன்னம் உதைத்தவனும் நெற்றிக்கண்ணனும் ஆன எம் பெருமான் !! கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன் !! ஒப்பற்ற இடபவாகனம் உடையவன் !! சுடுகாடே இடமாக உடையவன் !! நீள்சடையின்மீது அழகிய இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁