#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மேன்மையி லாமொழி பேசியு ழன்றிடு வீணரு ரைப்பன விட்டொழிமின்_
_🍁தேன்மலர் இட்டடி வாழ்த்திடு சிந்தையி னார்க்கரு ளைப்பொழி செல்வனவன்_
_🍁நான்மறை நல்லறம் ஓதிட ஆலதன் நீழல மர்ந்தவன் நம்பெருமான்_
_🍁மான்மறி ஒண்மழு ஏந்திய வன்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_தகாத புன்மொழிகளே பேசித் திரியும் வீணர்கள் சொல்வனவற்றை மதிக்கவேண்டா !! வாசமலர்களைத் தூவித் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குப் பேரருள் செய்யும் செல்வன் !! நால்வேதங்களின் நல்ல அறங்களையெல்லாம் சனகாதியர்களுக்கு விளக்குவதற்குக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருப்பவன் நம் பெருமான் !! மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் தாங்கியவன் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁