ஆந்தை ரிப்போர்ட்டர்
1.7K views
10 hours ago
கன்னடத் திரையுலகில் அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் சதீஷ் நினாசம். இவர் நடிப்பில், பீரியட் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' (Rise of Ashoka) திரைப்படம் விரைவில் ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. #ஆந்தை பொழுது போக்கு