முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
4.7K views
14 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா 27-வது வார்டில் ரூ.3,000 பொங்கல் தொகுப்பு வழங்கல் திண்டிவனம்: ஜன- 08 கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படியும், மண்டல பொறுப்பாளர் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள 27-வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கழகத் தலைவர் அறிவித்தபடி ரூ.3,000 பொங்கல் தொகுப்பை 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட வடக்கு பொருளாளர் வழக்கறிஞர் ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டார். மேலும், திமுக நகர துணை செயலாளர் டி.எம்.கே. தாஜ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் டி.சி.எம். தோல் மண்டி ஹாஜ் ஷெரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், உசேன், திமுக 27-வது வார்டு வாழ்க கிளைக் கழக செயலாளர் சாகுல் அமீது, எஸ். எஸ். பி .சலீம்.சுல்தான், அசாருதீன், நைனா முகமது, 27-வது வார்டு பிரதிநிதி மு. மஸ்தான், திமுக பி. சித்திக், மேஸ்திரி ஜெயவேல், துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

More like this