"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை பாமர ஆசாமியிடம் பரமாசார்யா"
துவாதசி பாரணையும் நெல்லிக்காயும் மகா பெரியவா
எந்த விரதமானாலும் சரி துளிக்கூட நியம நிஷ்டை தவறாம அனுஷ்டிப்பார்.
சில விரதங்கள் இருக்கிற சமயத்துல கூடவே மௌன விரதத்தையும் சேர்ந்து அனுஷ்டிப்பார் ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்துட்டு மறுநாள் துவாதசி அன்னிக்கு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் பரமாசார்யா.
வழக்கமா துவாதசி அன்னிக்கு மகா பெரியவாளைப் பார்க்க வர்றவா பலரும் நிறைய கனி வர்க்கங்களைத்தான் வாங்கிண்டு வருவா ஏன்னா முதல்நாள் உபவாசமிருந்த பெரியவா மறுநாள் பாரணை பண்றச்சே அந்தப்பழங்கள்ல ஒரு விள்ளலையாவது எடுத்துண்டா பெரும் புண்ணியம் கிடைக்குமேன்னுதான்.
அதே மாதிரி அந்த துவாதசியிலயும் நிறையபேர் வகை வகையான பழங்களை எடுத்துண்டு வந்து பெரியவாளுக்கு சமர்ப்பிச்சிருந்தா.
அந்த சமயத்துல சாதாரணமா இருந்த பக்தர் ஒருத்தர் பெரியவா முன்னால் வந்து நின்னு நமஸ்காரம் பண்ணினார் அவர் கையில் மஞ்சள் பை ஒண்ணு இருந்தது.
நமஸ்காரம் செஞ்சவருக்கு குங்குமமும் கல்கண்டும் குடுத்தார் மகாபெரியவா அதை வாங்கிண்டு நகர ஆரம்பிச்சார்.
அப்போ மகாபெரியவா கொஞ்சம் நில்லு அப்படின்னு உரத்த குரல்ல சொல்ல அந்த ஆசாமி சட்டென்னு நின்னு திரும்பிப் பார்த்தார்.
என்ன நீ இப்படிப் பண்றே எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை அப்படின்னார் பெரியவா.
தன் கையில் இருந்த மஞ்சள் பையைக் கொஞ்சம் தயக்கத்தோட பார்த்த அந்த ஆசாமி இல்ல சாமீ அது வந்து வார்த்தைகளை முடிக்காம இழுத்தார்.
என்ன இங்கே ஆப்பிள் ஆரஞ்சுன்னு குவிஞ்சு இருக்கே இதுல நாம எடுத்துண்டு வந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கப்போறதுன்னு நினைக்கறியா.
இதெல்லாத்தையும் விட அதுதான் ஒசந்தது அதுவும் துவாதசி அன்னிக்குக் கொண்டு வந்திருக்கே குடு அதை என்று சொன்னார் பரமாசார்யா.
தன்கையில இருந்த பையை பவ்யமா பெரியவா கிட்டே நீட்டினார் அந்த ஆசாமி பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார் மகாபெரியவா.
அதைப் புரிஞ்சுண்ட சீடர் மூங்கில் தட்டு ஒண்ணை எடுத்து அந்த ஆசாமி பக்கமா நீட்டி அதுல அந்தப் பையில இருந்த வஸ்துவை கொட்டச் சொன்னார்.
மஞ்சள் பையை மூங்கில் தட்டுல கவிழ்த்துக் கொட்டினார் அந்த ஆசாமி அதுலேர்ந்து குண்டு குண்டான நெல்லிக் காய்கள் அழகா கொட்டி தட்டை நிரப்பித்து.
இன்னிக்கு பிக்ஷைல இதை அவசியம் சேர்க்கணும்னு சொல்லிடு சீடரிடம் சொன்னார் பெரியவா.
எத்தனையோ பணக்காரா எடுத்துண்டு வந்து குவிச்சிருந்த ரகம் ரகமான கனி வர்க்கம் எல்லாம் நெல்லிக்காய்க்குக் கிடைச்ச பாக்யம் தங்களுக்குக் கிடைச்சுலையேன்னு தோணித்து அங்கே இருந்தவா எல்லாருக்குமே.
அற்பமா தான் நினைச்சதை ஏத்துண்டு அற்புதமா ஆக்கிட்ட ஆசார்யாளை மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுட்டுப் புறப்பட்டார் அந்த ஆசாமி.
துவாதசி அன்னிக்கு நெல்லிக்காய் கொண்டு வந்து குடுக்கணும்னு அந்தப் பாமர ஆசாமிக்கு எப்படித் தோணித்து அவர் நெல்லிக்காய் கொண்டு வந்துட்டு தராமாப் போறார்னு பரமாசார்யாளுக்கு எப்படித்
தெரிஞ்சுது எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil
#periyava mahaperiyava #jai mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்