ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.4K views
2 months ago
தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போதில் இருந்தே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதன்பிறகு கனமழை தொடர்ந்து தமிழகத்தில் பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர். உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கு ஏற்பவே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. Bumper Lottery: கேரள பூஜா பம்பர்.. ரூ.12 கோடிக்கு குலுக்கல் எப்போது? கடந்த ஆண்டுகளில் அடித்த லக்கி நம்பர்கள் இதுதான் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக இன்று காலை 8.30 மணியளவில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. புயலாக மாற வாய்ப்பு இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் 24 ஆம் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடையக்கூடும். இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 26 ஆம் தேதி வாக்கில் மேலும் தீவிரமடையக் கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதிக்கு பிறகு புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இது கென்யார் புயல் என்று அழைக்கப்படும். கென்யா புயலாக வலுப்பெற்றது என்றால், இது நகரும் திசையை பொறுத்து கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #வங்கக்கடலில் புதிய புயல் #புதிய புயல் கனமழை எச்சரிக்கை #வடகிழக்கு பருவமழை தீவிரம் 🌧️ #🌪🌀வருகிறது புதிய புயல் 🌀🌪