❤️ மனசு ❤️
💜 நானும் என் மனசு 💜
மனசு ஒரு மாயாஜால உலகம்
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரம்
நானும் மனசும்
ஒருவரை ஒருவர் விட்டு
ஓடுவதும் இல்லை
ஒளிவதும் இல்லை
நாங்கள்
உறவாடுகிறோம்...!!
சில நேரம் யாவும் இழக்காமல்
அவ்வப்போது யுக்தி
சொல்லிக் கொடுக்கிறது
அதனால் பிழைக்கிறேன்
என் மனசு
எனக்கு
ஒரு கேடயம்...!!
அத்தனை எளிதில் எதுவும்
நடக்காமலிருக்க என்
ஏழாம் அறிவுக்கும்
ஆறாம் உணர்வுக்கும் இடையில்
சம்மணம் போட்டு
அமர்ந்து விடுவேன்
அதனால் ஆறுதல் தேடி
என் மனசு ஏங்கியதில்லை...!!
என் மனசே எனக்கு ஒரு
மந்திர சாவி...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##