ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.5K views
4 months ago
நவராத்ரி ======== ஸ்ரீ பரமேஸ்வர சக்தியின் நான்கு வடிவங்கள் ======================== 1.பாத்மபுராணம் 61அத்யாயம் -------------------------------------- ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய பின்னா சதுர்த்தா வ்யவகாரகாலே போகே பவானி ஸமரேஸுதுர்க்கா க்ரோதேசுகாளி த்வவனேது விஷ்ணு: 2.ஒன்றே சக்தி -------------------- ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய ப்ரயோஜனார்த்தாய சதுர்விதாபூத் போகே பவானி புருஷேஷு விஷ்ணு: க்ரோதேசுகாளி ஸமரேஸுதுர்க்கா. பொருள் ========== பரமேஸ்வரனுடைய சக்தியானது உலக உற்பத்தியின்போது 1.பரமேஸ்வரருக்கு மனைவியாக ஸ்ரீபவானி தேவியாகவும், 2.புருஷம் வடிவம் கொள்ளும்போது ஸ்ரீமஹாவிஷ்ணுவாகவும், 3.உலகை பக்ஷிக்கும் போது ஸ்ரீமஹாகாளியாகவும், 4.போரிடும் போது ஸ்ரீதுர்க்கையாகவும் விளங்குகிறது. காரணாகமம் ========= ஸ்ரீதுர்க்கா த்யானம் ========================= ரக்தாம்பராம் ஸ்யாமலிநீம் த்வினேத்ராம் கிரீடரத்னாங்கித ஹேமபூஷாம் சசூலகட்காம் த்ருதசங்கசக்ராம் ம்ருகேந்திரயானாம் ரவிசந்த்ரபூஷாம் இஷ்டார்த்தார்தீம் ஸுரவந்த்ய பாதாம் ருத்ராம்ஸுதுர்க்காம் மனஸாஸ்மராமி பொருள் ========== சிவப்பு நிற ஆடையையணிந்தவளும்,பச்சைநிறமுடையவளும், இரண்டு கண்களை உடையவளும்,கிரீடம்,ரத்னங்களிழைத்த தங்க நகையணிந்தவளும்,கைகளில் சூலம்,கத்தி,சங்கு,சகரம் இவைகளைத் தரித்தவரும்,சிங்கத்தை வாஹனமுடையவளும், சூரிய,சந்திரனை ஆபரணமாக அணிந்தவளும்,விரும்பிய பொருளை கொடுப்பவளும்,தேவர்களால் வணங்கப்படும் பாதங்களையுடைய ஸ்ரீருத்ராம்ச துர்க்கையை மனதாலே ஸ்மரிக்கிறேன். தொடரும்.............. 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்