வசந்த நவராத்திரி
36 Posts • 11K views
தேவி பாகவதம் ============== தேவியின் தோற்றம் 9. தேவி படைகள் பெறுதல் தேவிபால் அசுர மந்திரி தூது 1. மஹிஷன் மந்திராலோசனை (1) 2. மஹிஷன் மந்திராலோசனை (2) 3. தேவி புரிந்த பெரும்போர் (1) 4. தேவி புரிந்த பெரும்போர் (2) 5. தேவி புரிந்த பெரும்போர் (3) 6. தேவீ மகிஷ சம்வாதம் 7. மந்தோதரி வரலாறு 8. மகிஷாசுர வதம் _9. மகிஷாசுர மர்தனீ ஸ்துதி 0. மகாதேவி மறைந்தபின் 21. சும்ப நிசும்பர் தோற்றம் 22.தேவர் அம்பிகையை வேண்டல் 23.காளியின் தோற்றம் 24.தூதுவர் உரை 25. காளியின் கோர யுத்தம் 26. சாமுண்டி பராக்கிரமம் 27. ரக்தபீஜன் பிரவேசம் 28. சக்திகளின் பராக்கிரமம் 29. ரக்தபீஜன் வதம் 30. நிசும்பன் அழிவு 31. சும்பன் முடிவு 32. சுரத-சமாதியர் வரலாறு 33. புவனசுந்தரி மாஹாத்மியம் 34. நவராத்திரி பூஜை மஹிமை 35. தேவி பூஜையின் பயன் 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்
8 likes
11 shares
நவராத்ரி ======== ஸ்ரீ பரமேஸ்வர சக்தியின் நான்கு வடிவங்கள் ======================== 1.பாத்மபுராணம் 61அத்யாயம் -------------------------------------- ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய பின்னா சதுர்த்தா வ்யவகாரகாலே போகே பவானி ஸமரேஸுதுர்க்கா க்ரோதேசுகாளி த்வவனேது விஷ்ணு: 2.ஒன்றே சக்தி -------------------- ஏகைவ சக்தி: பரமேஸ்வரஸ்ய ப்ரயோஜனார்த்தாய சதுர்விதாபூத் போகே பவானி புருஷேஷு விஷ்ணு: க்ரோதேசுகாளி ஸமரேஸுதுர்க்கா. பொருள் ========== பரமேஸ்வரனுடைய சக்தியானது உலக உற்பத்தியின்போது 1.பரமேஸ்வரருக்கு மனைவியாக ஸ்ரீபவானி தேவியாகவும், 2.புருஷம் வடிவம் கொள்ளும்போது ஸ்ரீமஹாவிஷ்ணுவாகவும், 3.உலகை பக்ஷிக்கும் போது ஸ்ரீமஹாகாளியாகவும், 4.போரிடும் போது ஸ்ரீதுர்க்கையாகவும் விளங்குகிறது. காரணாகமம் ========= ஸ்ரீதுர்க்கா த்யானம் ========================= ரக்தாம்பராம் ஸ்யாமலிநீம் த்வினேத்ராம் கிரீடரத்னாங்கித ஹேமபூஷாம் சசூலகட்காம் த்ருதசங்கசக்ராம் ம்ருகேந்திரயானாம் ரவிசந்த்ரபூஷாம் இஷ்டார்த்தார்தீம் ஸுரவந்த்ய பாதாம் ருத்ராம்ஸுதுர்க்காம் மனஸாஸ்மராமி பொருள் ========== சிவப்பு நிற ஆடையையணிந்தவளும்,பச்சைநிறமுடையவளும், இரண்டு கண்களை உடையவளும்,கிரீடம்,ரத்னங்களிழைத்த தங்க நகையணிந்தவளும்,கைகளில் சூலம்,கத்தி,சங்கு,சகரம் இவைகளைத் தரித்தவரும்,சிங்கத்தை வாஹனமுடையவளும், சூரிய,சந்திரனை ஆபரணமாக அணிந்தவளும்,விரும்பிய பொருளை கொடுப்பவளும்,தேவர்களால் வணங்கப்படும் பாதங்களையுடைய ஸ்ரீருத்ராம்ச துர்க்கையை மனதாலே ஸ்மரிக்கிறேன். தொடரும்.............. 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்
21 likes
7 shares
காசியில் நவராத்திரி கோயில்கள்! காசி மாநகரில் நவராத்திரிக்கு உரிய தெய்வங்கள் அனைவரையும் அங்கு உள்ள கோயில்களில் தரிசிக்கலாம். 1.காசியில் வருணை நதிக்கு அருகில் சைலபுத்ரி (மலைமகள்) கோயில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாள் இந்த துர்கையை வழிபடுகிறார்கள். 2-ஆம் நாளன்று துர்காகாட் படித்துறை அருகே உள்ள பிரம்மசாரிணி கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். 3-வது நாளன்று சௌக் கடைத் தெரு அருகே உள்ள சித்திரா கண்டா அம்மன் கோயிலில் அருள் புரியும் ‘சந்திரமணி தேவி’யை வழிபடுகிறார்கள். 4-வது நாளன்று சௌக் கடைத் தெருவில் உள்ள கூஷ்மாண்டா என்ற திருக்கோயிலில் உள்ள கூஷ்மாண்டா அம்மனை வழிபடுவர். 5-வது நாளன்று ஜைத்புரா பகுதியில் உள்ள ஸ்கந்த மாதா என்கிற வாகீஸ்வரி அம்மனை வழிபடுவர். 6-வது நாளன்று ஆத்மவிஸ்வேஸ்வரர் கோயிலின் பின்பக்க நுழைவாயிலை ஒட்டியுள்ள சுற்றுச் சுவரில் இருக்கும் காத்யாயினி அம்மனை தரிசிப்பார்கள். 7-ஆம் நாளன்று காளிகா பகுதியில் உள்ள காளராத்ரி துர்கையை தரிசிப்பார்கள். இவள் கழுதையை வாகனமாகக் கொண்டவள். 8-வது நாளன்று காசியின் புகழ்பெற்ற அன்னபூரணியை தரிசிப்பர். இவளை மகா கௌரி துர்கை என்றும் அழைக்கின்றனர். 9-ஆம் நாளன்று காசி சித்தாத்ரி சங்கடா கோயிலின் அருகே உள்ள மடம் ஒன்றில் இடம் பெற்றுள்ள ‘ஸித்தி மாதா’ அம்மனை வழிபடுவர். இவளின் விக்கிரகத்துக்குக் கீழே உள்ள வெள்ளித் தொட்டி ஒன்றில் சிவலிங்கம் உள்ளது. இந்த அம்மன்கள் ஒன்பது பேரும் காசியில் பிரசித்தமானவர்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 10-ஆம் நாளான விஜயதசமி அன்று துண்டி விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர்- மற்றும் அன்னை விசாலாட்சியை தரிசிப்பார்கள் 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்
13 likes
12 shares