Rationalist
2.6K views
4 months ago
அறிஞர் அண்ணாவின் படைப்புலகம் கூர்நோக்கு கொண்டது. வெகுமக்களை பேச்சு, எழுத்தின் மூலமாக சென்றடைவதைப் போல நாடகம், திரையுலகின் வழியாக சென்றடைவது மிக முக்கியமென கருரியவர். நவீன ஊடக வெளியை வெகுமக்கள் அரசியலுக்காக பயன்படுத்திய மதிநுட்பக்காரர். அவரது திரைப்படங்களின் வசனங்கள், கருத்துகள் காலம்கடந்து இயங்குபவை. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'அவையம்' நிகழ்வாக திசை புத்தக நிலையத்தில் அண்ணாவின் படைப்புலகம் குறித்து உரையாடல் நடக்க இருக்கிறது. இன்றய இளம்தலைமுறையும், நம் மூத்த தலைமுறையும் சிந்திக்கும், சிந்தித்த விடயங்கள் குறித்து உரையாடுவோம். தோழர் Trotsky Marudu Maruthappan மற்றும் தோழர் Kavitha Bharathy ஆகியோர் உரையாடுகின்றனர். அனைவரும் பங்கேற்று உரையாடலை சிறப்பு செய்ய அழைக்கிறோம். நாள் : 14-செப்-2025 நேரம்: மாலை 5:30க்கு மேல் நிகழிடம் : திசை புத்தக நிலையம் Thisai Book Store #அறிஞர் அண்ணா #திசை புத்தக நிலையம் #சினிமா #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️