_*"விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை"*_ _*என்பது பழமொழி.*_
_*இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாக பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே "ஈகோ" எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது.*_
_யோசித்துப் பாருங்கள்,_
_வாழ்வது கொஞ்ச காலம், அதனை ஏன் வாழ்ந்து அனுபவிக்கத் தெரியவில்லை._
_*ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில் காலம்தான் ஜெயிக்கும். காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவைத் துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்.*_
_இல்லறம் எனும் பந்தம்_
_நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும்._
_*தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள். பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள்.*_
_இல்லறம் எனும் நல்லறத்தில்_
_'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்._
_*"பட்டுக் கொடுத்தாலும் துட்டுக் கொடுத்தாலும் ஒற்றுமை வராது.*_ _*ஆனால் விட்டுக் கொடுத்தால்*_
_*ஒற்றுமை வரும்!"*_
_*என்கிறார் வாரியார் சுவாமிகள்.*_
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺