#magill vithu magill. மகிழ்
வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு, எந்த அதிசயமும் நடக்க தேவையில்லை, எடுக்க வேண்டிய முடிவுகள், சரியானதாக இருந்தால் மட்டும் போதும்!!!
உறவுகளிடம் பேச வைப்பதும் பணம் தான். உறவுகளிடம் பேசவிடாமல் விலகி வைப்பதும் பணம் தான். உறவுகளை தீர்மானிப்பதும் பணம் தான்.
உங்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யாதீர்கள்... நீங்கள் செய்யும் நல்லதிலும் குறை தேடிக் கொண்டே இருப்பார்கள்..!
யாரிடம் பிடிவாதம் பிடித்து, கோபப்பட்டு சின்ன குழந்தை போல் மாறி திரிகிறோமோ அவங்கள தான் நாம உயிருக்கும் மேல வச்சிருக்கோம்.
சிலநேரங்களில்
வாழ்க்கை
சாதகமாக இருக்கும்
சில நேரங்களில்
எதிர்பாரா பிரச்சினை
முன் நிற்கும்
அதையும் கூட
கூர்ந்து கவனித்து
பாதகத்தை
சாதகமாக மாற்றுவதே
வெற்றியின் ரகசியம் 🥰
*🚩பகவத்கீதை🚩*
சாதாரண அறிவையும் தெய்வீக அறிவையும் நான் உனக்கு முழுமையாக அறிவிக்கின்றேன். யாராயினும் இவ்விரண்டு அறிவையும் முழுமையாக அறிந்து கொண்டால், முழுமையாக அறிந்ததற்கு ஒப்பாகும். எனவே, இதனை அறிந்த பின் நீ அறிய வேண்டியவை ஏதும் இருக்காது.
எல்லா
இடங்களிலும்......
அமைதியாக இருந்துவிடாதே .....
உன்னிடமும் நியாயம் உள்ளது....
என்பது தெரியாமலே போய்விடும்.!
வாழ்க்கையின்
மிக சிறந்த பொக்கிஷம்
சரியான நேரத்தில் கிடைக்கும்
ஆறுதலும் மாறுதலும் தான
செய்த குற்றத்திற்கு பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩
ஒரு மனிதனை தாக்கும் மிகப் பெரிய ஆயுதம் அவர்களுக்கு பிடித்த ஒருவரின் மௌனம்...
சொன்ன வார்த்தைகள் தக்க சமயத்தில் உன்னையே திரும்ப வரும்போது தெரியும் எத்தனையோ சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள்
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
10. #விபூதி_யோகம்
பாகம்__18
🙏34. " அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். செல்வர்களின் வளர் செல்வம் நான்; பெண்மைகளுள் நான் புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, பொறுமையாகவும் இருக்கிறேன்".🙏
விளக்கம்: உலகில் தோன்றிய யாவும் அழிவது உறுதி. அவைகளை தோற்றுவிப்பதைப் போன்று ஈசன் சம்ஹாரமும் செய்கிறார். ஆகையால் அவர் அனைத்தையும் துடைக்கும் தெய்வம் ஆகிறார். பிறப்பையும், இறப்பையும் ஒன்றாகக் கருதுபவரே இறைவனை அறிய வல்லவர் ஆவர்.
#திருமகள் இருக்கும் இடத்தில் செல்வம் வளர்கிறது. திருமகளும், திருமாலும் ஒன்றே. எங்கு செல்வமாகிய திருமகள் இருக்கிறாளோ, அங்கே திருமாலும் இருக்கிறார். அம்பிகையின் பிரபையில் தோன்றும் சில அம்சங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.
நல் வாழ்க்கை நிலைத்திருக்கும் பொழுது #புகழ் தானே வந்தமைகிறது. வடிவம் பொருத்தமாக அமைந்தால் அது அழகு எனப்படுகிறது. ஓசையில் அழகு பொழிந்தால் அது "இசை" எனப்படுகிறது. அசைவதில் #அழகு பொழிந்தால் அது "நாட்டியம்" என்று பெயர் பெறுகிறது. கடவுளே அழகன்.
எதன் மீது மகாலக்ஷ்மியின் அம்சம் இருக்கிறதோ, அதுவே தெய்வம். உள்ளத்தில் உள்ள கருத்து *சொல்லாக பரிணமிக்கிறது. சொல்லில் முறையும், மகிமையும் இருக்குமானால் அது ஈஸ்வரனின் படைப்பே(பரம்பொருளின் விபூதியே).
சக்தி #சொல் வன்மையாகப் பரிணமிக்கும் பொழுது, அவள் "வாணி" (கலைமகள்) என்று பெயர் பெறுகிறாள். முன்பு நிகழ்ந்தவகைகளை ஞாபகம் கொண்டு வருவதற்கு நினைவு தேவைப்படுகிறது. நினைவு நீண்டு தெளிந்திருந்லால் அது "சக்தியின் பிரபாவம்" ஆகும்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை உள்ளபடி உணர்ந்தறிவது மேதமை அல்லது #அறிவு என்று பெயர் பெறுகிறது. உடலும், புலன்களும் துன்பங்களுக்கு இடையிலும் தடுமாற்றம் அடையாமல் இருக்குமானால் அதுவே "திண்மை" ( உறுதி) ஆகிறது.
உண்ணும் பொழுது அல்லது பேசும் பொழுது நம்மை அறியாமல் நம் நாக்கை கடித்து விட்டால் அதற்காக யாரும் பல்லைக் குறை கூறுவதில்லை. எனவே மனிதன் பொறுமையே வடிவெடுத்தவனாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரு மனிதனும் தான் செய்த குற்றத்தை தானே மன்னித்துக் கொள்கிறான். அவ்வாறே பிறர் செய்த குற்றத்தையும், கேட்டையும் பொறுத்துக் கொள்ளுதலே #பொறுமை (பொறை) ஆகிறது.
எனவே பெண்களுள் நான் புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறுமையாக இருக்கிறேன்! என்கிறார் பகவான். இத்தனை மேலான தன்மைகளே சிறந்தப் பெண்மைக்கு உரியவையாகின்றன.
எனவே #அர்ஜுனா! அனைத்தையும் அழிக்கும் *மரணம் நான். செல்வர்களின் வளர் *செல்வம் நான். பெண்மைகளுள் நான் *புகழ், *திரு, *சொல், *நினைவு, *அறிவு, *திண்மை, பொறையாக (*பொறுமை) இருக்கிறேன்! என்கிறார் #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏