magill vithu magill.
94 Posts • 23K views
saravanan.
754 views
#magill vithu magill. மகிழ் இங்க எதையும் கட்டி ஆளுற அளவுக்கு செல்வாக்கு இல்லைன்னாலும்... படுத்தா நைட்டு நிம்மதியா தூங்கற அளவுக்கு ஒரு வாழ்ந்தாலே போதுமானது..!! வாழ்க்கையை பற்றி மிக அதிகமாக பேசியவர்கள், அதை பற்றி ஒன்றும் முடிவாக சொல்ல முடியாமல்தான் சென்றிருக்கிறார்கள். ~ எந்தளவுக்கு மனிதர்களை நம்பக்கூடாது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களோ... அந்தளவுக்கு மனிதர்களை நம்ப கூடிய சூழல்களும் வரத்தான் செய்யும். எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இல்லாமல் போனதும் எப்படி வந்தது அப்படியே போகும் சொத்து சுகம் இருந்தும்கொடுத்தாலும் உறவுகள் இருந்தாலும் #அன்பைவிதைப்போம் ❤️ நிகழ்கால நிமிடங்களில், நாம் கலந்திருக்கும் உண்மை தன்மையே, நமக்கு இறை உணர்வை தரும், இதுவே தியான தன்மையாகும்... சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும் இந்தப் பிரபஞ்சம் உன்னிடமிருந்து எதையும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை… ஒரே ஒரு எளிய காரியம் தான் எதிர்பார்க்கிறது… தொடர்ச்சி — நிலைத்த முயற்சி. நீ எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தப் பாதையில் சிறிய அடிகள் கூட தொடர்ந்து செல்வாயானால்… உன் கர்மாவும், பிரபஞ்சத்தின் ஆற்றலும் உன்னோடு சேர்ந்து நடக்கத் தொடங்கும். ஒரே நாளில் அற்புதம் வேண்டாம்… ஆனால், ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வளர்ச்சி வேண்டும். அதுவே இந்த பிரபஞ்சத்தின் விதி, விருப்பம். உன் கனவு எதுவாக இருந்தாலும்… அதற்கு தடைகள் வந்தாலும், மனம் சோர்ந்தாலும்… செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு ஒரு கேள்வி மட்டும் பிரபஞ்சம் கேட்கிறது! “நீ தொடர்ந்து முயற்சி செய்கிறாயா?” யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியமில்லை… பிரபஞ்சம் உன் ஈடுபாட்டையே கவனிக்கிறது! நேற்றைவிட இன்று கொஞ்சம் மேலே இருந்தால்… அதுவே உன் வெற்றிக்கான மிகப்பெரிய அடையாளம். நீ தொடர்ந்து முயற்சி செய்தால்… பிரபஞ்சம் தானாகவே உன் பக்கம் வர ஆரம்பிக்கும்.. உன் கர்மா உன்னைத் தவறவிடாது.. மறக்காதே ! *🚩பகவத்கீதை🚩* *என்னை பரம புருஷனாக, ஜடாத தோற்றங்களின் ஆளும் தத்துவமாக, தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாக, எல்லா யாகங்களின் இறைவனாக அறிபவர்கள், உறுதியான மனத்துடன் என்னை உணர்ந்து, இறக்கும் நேரத்திலும் கூட என்னை அறிய முடியும்.* - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.🚩* உண்மையை மறைப்பது,தன்னை தானே புகழ்வது,தனது தவறுக்கு அடுத்தவரை காரணமாக்குவது, உண்ணும் உணவில் மாறுபாடு காட்டுவது, தர்மத்தை கேள்விக்கு உள்ளாக்குவது போன்றவை கர்ம சண்டாள பலனுக்கு தள்ளிவிடும்: பரமாத்மா 🚩🌙 வேகத்தைக் குறைத்து வாழ்க்கையை இரசியுங்கள்.வெகு வேகமாகப் போவதால் காட்சிகளைக் காணத் தவறி விடுவீர்கள் என்பது மட்டுமல்ல.எங்கு செல்கிறீர்கள், ஏன் செல்கிறீர்கள் என்ற நிதானத்தையையும் இழந்துவிட நேரிடும்.மிதமாக முன்னேறி செல்வதே நல்லது.செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது. எவ்வளவு தான் சமாளித்து பயணம் செய்தாலும் காயப்படுத்தாமல் விடுவதில்லை இந்த "வாழ்க்கை"👍️ தனியாக நீந்தி கரை சேர கற்றுக்கொள். யாரும் இறுதிவரை நம்மோடு பயணிக்கப்போவதில்லை👍✔️✔️✔️️ #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 11.#விஷ்வரூபதரிசன_யோகம்.🙏 பாகம்__14 #ஶ்ரீபகவான்_சொன்னது🙏 🙏32. " உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களை. ஸம்ஹாரம் செய்ய தலைப்பட்டிருக்கிறேன். நீ போரிலிருந்துப் பின்வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழமாட்டார்கள்". விளக்கம்: "முதல்வனாகிய தங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்! தங்களின் செயல் எனக்குப் புரியவில்லை" _என்ற பார்த்தனின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். "எல்லாவற்றையும் அழிக்கும் வல்லமை வாய்ந்த காலம் நான்! உலகங்களைச் சம்ஹரித்து பூமியின் பாரத்தைத் தீர்க்க வந்துள்ளேன்!" என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. காலம் முன்னும், பின்னும் அண்டவெளியில் விரிந்தோடுகிறது. ஆகாயம், மற்ற பூதங்களையும் தன்னில் அடக்கி வைத்திருப்பதைப் போல, காலமானது, செயல்கள் யாவற்றையும் தன்னிடம் அடக்கிவைத்துள்ளது. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே, பகவத்சொரூபமாகிறது. உலகங்களையும், உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் செயல்! எனப் பகவான் கூறுகிறார். தோன்றிய அனைத்தையுமே சிறிது சிறிதாக அவர் எப்பொழுதும் விழுங்கிக் கொண்டிருக்கிறார்; சிலவேளைகளில் பெருவாரியாகவும் விழுங்க வேண்டியிருக்கிறது. மகாபாரத யுத்தம் அத்தகையதே. உலகில் அதிகரித்துவிட்ட அதர்மங்களை எல்லாம் அழித்தொழிக்கப் பகவான் வந்து நிற்கிறார். ஏன் அப்படி நடக்கிறது? என நாம் வியக்கிறோம். அவையாவும் #ஈசனின்_செயலே. எந்த நேரத்தில் உலகை அழிக்க வேண்டுமோ, அப்படி அவர் அழிக்கிறார். ஆக்கமோ, காத்தலோ, அழிவோ அனைத்தும் பகவானின் செயலே! #அனைத்தும்_அவனே! என அறிபவன் அவரைப் போற்றி, நற்பேறு பெறுகிறான். ஏனையோர் எப்பயனும், நற்கதியுமின்றி வீணே அழிந்துப் போகின்றனர். இறைவனை உணர்ந்தவன், பயங்கரமான எச்செயலைக் கண்டும் நடுங்குவதில்லை. எதிரில் நிற்கும் கௌரவ சேனை தோற்கும்; பீஷ்மர், துரோணர், துரியோதன் உட்பட்ட கௌரவர்களும், கர்ணன் முதலிய வீரர்களும் அழிவது உறுதி! என இப்பொழுது அர்ஜுனனுக்குக் காட்டப்படுகிறது. தனது *தாத்தாவையும், *குருவையும் தானே அழிப்பது தகுமா? என்ற அர்ஜுனனின் மனக்குழப்பத்தைக் ஶ்ரீகிருஷ்ணர் போக்குகிறார். எனவே நடைபெறும் யாவும் உனது செயலல்ல; நீ அதற்குப் பொறுப்பல்ல! என உறுதிபடக் காட்டுகிறார் ஶ்ரீகிருஷ்ணபகவான். 'கர்ணன் மடிவவதும் உன்னைப் பொறுத்தது அல்ல!' என அர்ஜுனனுக்கு உணரவைக்கப்படுகிறது. நீ போர் புரியாவிட்டாலும் இவர்கள் என்னால் அழிக்கப்படவிருக்கிறார்கள்! எனவே கலக்கத்தை விடு! என்கிறார்! #ஶ்ரீகிருஷ்ணாபரமாத்மா.🙏 #
13 likes
16 shares
saravanan.
723 views
#magill vithu magill. மகிழ் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் நம் மனம் ஆயிரம் சந்தேகங்களை எழுப்பும்… “செய்யலாமா? வேண்டாமா?” “முடியுமா? முடியாதா?” “இது சரியான பாதையா?” அந்த தயக்கமே எத்தனையோ கனவுகளை ஆரம்பிக்காமலேயே அழித்துள்ளது! ஆனால் சில உண்மைகள் உள்ளன… வழியும் தெரியாது… வெளிச்சமும் தெரியாது… ஆரம்பத்தில்! நீ அடி எடுத்து வைக்கும் வரை பாதை தோன்றாது… நீ முன்னே நகரும் வரை ஒளி பிரகாசிக்காது… நீ தொடங்கும் அந்த நொடியில் .. உனது கர்மாவும், இந்தப் பிரபஞ்சமும் உன்னோடு கூட்டணி சேர்ந்து வெற்றிக்கான பாதையை நீயே உருவாக்கும் நிலைக்கு உன்னை தள்ளும்! ஒவ்வொரு அடியும்… ஒரு புதிய வாய்ப்பைத் திறக்கும். ஒவ்வொரு நகர்வும்… ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்கும். அதை புரிந்துகொண்ட நாளில்.. பயம் கரையும்… தோல்வி பாடமாகும்… வெற்றி மட்டுமே உன் பாதையில் இருக்கும்! தொடங்கு… மீதியை இந்த பிரபஞ்சம் செய்து விடும். மற்றும் நினைவில் கொள் .. இதை உணர்ந்த பின்பு ஒரு நாள் நீ என்னை நினைத்து நன்றி சொல்லுவாய்! பாசாமோ? நோசமோ? உப்பை போல அளவோடு பயன்படுத்துங்கள்.. குறைவாயக இருந்தாலும் கஷ்டம் தான்! அதிகமா இருந்தாலும் கஷ்டம் தான்? அளவோடு இருந்தால் லாபமே... செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு எண்ணற்ற இறைவன் யாவும் ஒன்றே உங்கள் எண்ணத்தில் இருக்கும் இறைவனை யாரோ ஒருவர் அவரை மட்டுமே ஆத்மாற்தமாக வணங்குங்கள் நல்லதே நடக்கும் பல பாவங்கள் செய்துவிட்டு தர்மம் செய்தால் பாவம் விலகும் குலதெய்வத்தை வணங்கினால் பாவம் விலகும் என்கிற மாயை நம்பி பண்ணிய பாவத்தில் இருந்து தப்பிவிடலாம் என்கிற மாயையில் திரியாதே . இயற்கையின் சத்யா தர்ம விதிப்படி எதை விதைகின்றாயோ அதைநறுவடை செய்தே ஆகவேண்டும் இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு நீண் என்ன செய்தாயோ அதுவே உனக்கு திரும்ப வரும் என்பதை அறிந்து செயல்படு நல்லதே நினை நல்லதே செய் நன்மையே நடக்கும் கேட்டதை செய்துவிட்டு நீங சந்தோசமாக வாழலாம் என்று நினைத்தால் அது தவறு யாரையுமே நம்பாத வரைக்கும் தான் இந்த உலகம் அவ்வளவு அழகானது அதிஅற்புதமானது அதுவே ஒருவரை நம்பி ஏமாந்தால் புரியும் இந்த உலகம்தான் எவ்வளவு கொடூரமானது என்று *🚩பகவத்கீதை🚩* *மேலும், முன்னேற்றம் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் யோகி, எல்லா களங்களிலிருந்தும் தூய்மை பெற்று, இறுதியில் அனேக பிறவிகள் பயின்ற பிறகு, உன்னதமான பரம கதியை அடைகிறான்.* சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும் - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 11. #விஷ்வரூபதரிசன_யோகம்.🙏 பாகம்_11 #அர்ஜுனன்_சொன்னது . 🙏 25. " தேவர் தலைவா! அச்சமூட்டும் கோரப் பற்களுடன், பிரளய கால அக்னிக்கு ஒப்பான உமது முகங்களைக் கண்டதும், எனக்குத் திசைகள் தெரியவில்லை; அமைதியும் அடைந்திலேன்; வையகத்திற்கு வைப்பிடமே! அருள் புரியவேண்டும்."🙏 எத்தனையோ கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் மறைந்துவிட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் விளக்கம்: சூரியனை இலக்காக வைத்துக்கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. ஆனால் இப்பொழுதோ, பார்க்குமிடங்களெல்லாம் பரஞ்சோதியாக இருப்பதால் அர்ஜுனனுக்குத் திசைகள் கூட தெரியவில்லை. ஊழித் தீயானது அனைத்தையும் விழுங்குவதைப் போல, உமது எல்லையற்ற ஒளியானது, திசைகளை மறைத்துவிட்டது. எனவே பகவானே! நான் மீண்டும் அமைதியடைவதற்காகச் சாந்த வடிவினராக வரவேண்டும்! #பிரபஞ்ச_நாயகனே! என்கிறான் #அர்ஜுனன். 🙏 26 + 27. "திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும், பாராளும் மன்னர் கூட்டத்தாருடனும், பீஷ்மர், துரோணர், கர்ணனோடும்; நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரைப் பற்களையுடைய உமது வாய்களுள் பரபரப்புடன் புகுகின்றனர். சிலர் பொடிப்பட்ட தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்".🙏 விளக்கம்: திருதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதனின் வளர்ப்பு மகனே #கர்ணன். கர்ணனை வீராதிவீரனென்றும், பாண்டவர்களை அவன் அழித்துவிடுவான் என்றும், குறிப்பாக அர்ஜுனனை, அவன் கொன்று விடுவான் என்றும் கௌரவர்களும், திருதராஷ்டிரனும் உறுதியாக நம்பினர். அர்ஜுனனைத் தவிர பிற பாண்டவர்களுக்கும் அப்பயம் இருந்தது. எனவே தான் கர்ணனும் அழிவான்! என்பதைக் காட்டவே, அவனும், பகவானின் வாய்க்குள் புகுவதை ஶ்ரீகிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்குக் காட்டுகிறார். பாரதப் போரில் மாவீரர்களும், ஏனைய வீரர்களும் அழிவது உறுதி! இவையனைத்தும் பரம்பொருளின் செயலே. #நீ_என்_கைக்கருவியே. எனவே நானே அனைத்து அழிவிற்கும் காரணமென தேவையின்றி கலங்காதே ! அர்ஜுனா. என்றே இக்காட்சியைக் காட்டி உணர்த்துகிறார்! ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா. உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும், நமது ஒவ்வொரு செயல்களுக்கும் காரணம் அந்த #பரந்தாமனே. #அவனின்றிஓர்_அணுவும்அசையாது என்றிருக்கையில், நம்மால் எதையுமே செய்ய இயலாது என்றிருக்கையில், தேவையின்றி நீ கலங்காதே. நீ எதைச் செய்தாலும் அதற்கு காரணம் நானே! நீ, எனது கருவி மட்டுமே. எனவே நம்மால் என்னென்ன தீங்கு விளையுமோ? என்ற பலனை எதிர்பாராது, #உனது_கடமையான_போர்புரிதலை_மட்டும்_செய்_அர்ஜுனா! என்று விளக்குவதற்காகவே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தனது விஸ்வரூபக் காட்சியைக் காட்டியருளினார்; நானே பரம்பொருள் என்பதை உணர்த்தியருளினார்! #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா. 🙏
9 likes
12 shares
saravanan.
575 views
#magill vithu magill. மகிழ் உண்மையை பொய்யோடு ஒப்பிடுவதை போல .. உண்மையை அவமதிக்கும் செயல் வேறு ஒன்றுமே இல்லை .. நிழல் தான் நிஜத்தை சார்ந்து இருக்கு .. நிஜம் என்றும் நிஜமாகவே இருக்கு .. அவன் அப்படித்தான் !! அவனுள் இருப்பவன் அவனை அப்படி இருக்க வைத்திருக்கான் !! இவன் இப்படித்தான் !! இவனுள் இருப்பவன் இவனை இப்படித்தான் வைத்திருக்கான் !! எதுவும் எப்படியும் தான் !! எதுனுள்ளும் இருப்பவன் எதையும் எப்படியும் தான் வைத்திருக்கான் !! நீ மட்டும் !! அவன் அப்படி !! இவன் இப்படி !! அது அப்படி !! என்று கணிக்க வரவில்லை ??!! என்பது மட்டும் நிதர்சனமான மெய் !! *🚩பகவத்கீதை🚩* *அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன்* *பரம யோகியாகக் கருதப்படுகிறான்.* - *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* * #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 10.#விபூதி_யோகம் பாகம்__20 🙏36. " வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான்; வெற்றியாகவும், முயற்சியாகவும், சாத்துவிகர்களுடைய சத்துவ குணமாகவும் நான் இருக்கிறேன்".🙏 விளக்கம்: பிறரை ஏமாற்றுவது எப்பொழுதுமே தவறானதே. #சூதாட்டம் என்பதும் தவறானதே. பொய்ப் பத்திரம் தயாரிப்பது, பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது, போலியான பொருட்களை விற்பது என அனைத்துமே தவறானவையே. ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சில சூதாட்டங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கிறது. மன்னர்களின் காலத்தில் மன்னர்கள், தங்கள் பொழுதுபோக்கிற்காகச் சூதாடுவது என்பது மரபு. பாண்டவர்களும் பகடைகளின் மூலம் சூடினர். அது சகுனியின் சதியால் வஞ்சகச் சூதாட்டமாக முடிந்தது. அது தவறே. ஆனால் வஞ்சகமின்றி வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக மட்டுமே சூதாட்டம் நடைபெறும் போது அது தவறில்லை. *சூதாட்டம் என்பது வெளிப்படையாக சபையினர் முன்னே செய்யப்படுகிறது. அதனால் வரும் இலாப, நஷ்டங்களும், சுகத், துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். வஞ்சக செயல்கள் அனைத்துமே கேடுடையவையே! என்றாலும் அவைகளில் *சூதாட்டம் மட்டும் சற்றே வேறுபட்டது. ஏனென்றால் அதற்கு அறிவு மிகவும் வேண்டும். #அறிவு என்பது *தெய்வத்திடமிருந்தே வருகிறது. பிற வஞ்சகங்களைப் போலின்றி சூதாட்டத்திற்கு "அறிவுத்திறன்" தேவைப்படுவதால் வஞ்சகர்களுடைய சூதாட்டமும் நானே! என்கிறார். அதாவது வஞ்சகங்கள் அனைத்துமே கேடானவேயே! என்றாலும் அந்தக் கேட்டிலும் அறிவைப் பயன்படுத்தி செய்யப்படுவதால் #சூதாட்டத்தின்_அந்த_அறிவாக இருப்பதும் நானே! என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. #தேஜஸ் என்பது ஒளி என்று பொருள்படும். ஆரோக்கியம், புலனடக்கம், பிரம்மச்சரியம் முதலியவைகளில் இருந்து உண்டாகும் பொலிவும், மனத் தெளிவும், செயலாற்றும் திறமையும் சேர்ந்து தேஜஸாக மிளிர்கின்றன. கீழ்மையான குணங்களை அகற்றி, மேன்மை குணத்தில் நிலைநிற்கும் பொழுது, நம் முகத்தில் ஒரு தேஜஸ்( ஒளி) இருக்கும். நேர்மையான முறையில் அறிவும், புலனடக்கமும், ஆரோக்கியமும், மனத்தெளிவும் இணையும் பொழுது, ஒருவரின் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றுகிறது. அது நல்ல அரசர்கள், நேர்மையான ஆச்சாரியர்கள், சிறந்த மதத் தலைவர்கள் ஆகியோரிடம் இதை. நாம் காணலாம். #பண்பும்_பயனும் உடைய தொழிலை, உறுதியான மனத்தோடு செய்தால் நம்மிடம் ஒரு #நேர்மை_ஒளி பிறக்கிறது. சத்வம், ரஜோ, தமஸ் என்ற முக்குணங்களும் இறைவனின் படைப்பின் சொரூபமே என்றாலும், அவைகளுள் சத்துவகுணம் (சாத்வீகம்) ஒரு சாதகனுக்கு(ஞானநிலையில் பயிற்சிப் பண்ணுபவன்) இறைவனது சந்நிதிக்கு அழைத்துச் செல்ல உதவுகிறது. எனவே #அர்ஜுனா! வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான்; எதிலும் வெற்றியாகவும், முயற்சியாகவும்; சாத்விகர்களுடைய சத்துவகுணமாகவும் நான் இருக்கிறேன்! என்கிறார் #கேட்டால்தான்_கிடைக்குமா ?? #கேட்க்காவிட்டால் #கிடைக்காதா !! ஓர் நட்பின் கேள்விக்கு .. கேட்பது என்பது எண்ணத்தால் நிகழும் செயல் ஆகும் .. எதை எண்ணுகிறோம் ?? எப்படி எண்ணுகின்றோம் ?? எவ்வளவு ஆழமாக எண்ணுகின்றோம் ?? அந்த எண்ணத்தில் நமக்கு இருக்கும் தீர்க்கம் பொறுத்தே கேட்பது வலுப்பெறுகிறது .. அப்படியான வலிமையான எண்ணமே செயலாய் மாறுகின்றது .. வாய் ஒன்றை சொல்ல !! மனம் ஒன்றை நினைக்க !! நம் புலன்கள் எதையோ அனுபவித்த வண்ணம் இருக்க !! அங்கே என்ன கேட்டாலும் , ( அது வருமா ?? நடக்குமா ?? கிடைக்குமா ?? போன்ற சலனம் இருக்குமாயின் .. ) அந்த கேட்டல் பலன் அளிப்பதில் தாமதமும் , நம் சலனத்தைப்போலவே அமையும் என்பதே எதார்த்தம் ஆகும் .. இவனிடம் கேட்கின்றேன் !! இவனிடம் பெறவும் விரும்புகின்றேன் !! என்று உங்கள் எண்ணம் பயணிக்கும்போது .. முதலில் அந்த இவன் அதை பெற்று உங்களுக்கு தரும் , மனநிலைக்கு வருவதில் தொடங்கி , அதை பெறுகின்ற தன்மைக்கு அந்த இவனை கொண்டுவந்து , அந்த இவனை பெறவைத்து , அந்த இவன் உங்களுக்கு கொடுக்கும்படியான சூழலை அமைத்து கொடுத்த பின்னே தான் அது கிடைக்கும் , அதற்கும் கொஞ்சம் தாமதம் ஆகும் தானே .. அதே இறைவா கொடு !! எப்படியும் கொடு !! எதன்வழியும் கொடு !! என்ற எண்ணத்தில் தீர்க்கம் இருக்கும்போது , எப்படியும் கிடைக்க வேண்டியது கிடைத்துவிடும் , விரைவாக .. அடுத்து கேட்டால் தான் கிடைக்குமா ?? என்ற கேள்வி .. கேட்க்கும் எண்ணம் வெளிப்படும்போதே கேட்க தொடங்கி விட்டிர்கள் .. இருந்தாலும் கேட்க்கூட , கேட்காதே கிடைக்கவேண்டியது கிடைத்துக்கொண்டு இருப்பதால் தான் முடிகிறது .. கேட்பது உங்கள் விருப்பம் மட்டுமே , மற்றபடி கேட்காதே கிடைத்துக்கொண்டே தான் இருக்கு அனைத்தும் , உங்களை உணர்ந்த உங்கள் நாயகன் இறைவன் கருணையால் .. #ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏 ..#
14 likes
14 shares