#magill vithu magill. மகிழ்
இங்க எதையும் கட்டி ஆளுற அளவுக்கு செல்வாக்கு இல்லைன்னாலும்...
படுத்தா நைட்டு நிம்மதியா தூங்கற அளவுக்கு ஒரு வாழ்ந்தாலே போதுமானது..!!
வாழ்க்கையை பற்றி
மிக அதிகமாக பேசியவர்கள்,
அதை பற்றி
ஒன்றும் முடிவாக
சொல்ல முடியாமல்தான் சென்றிருக்கிறார்கள்.
~ எந்தளவுக்கு மனிதர்களை
நம்பக்கூடாது என்று
எண்ணிக்கொண்டு
இருக்கிறீர்களோ...
அந்தளவுக்கு மனிதர்களை
நம்ப கூடிய சூழல்களும்
வரத்தான் செய்யும்.
எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இல்லாமல் போனதும் எப்படி வந்தது அப்படியே போகும்
சொத்து சுகம் இருந்தும்கொடுத்தாலும் உறவுகள் இருந்தாலும்
#அன்பைவிதைப்போம் ❤️
நிகழ்கால நிமிடங்களில்,
நாம் கலந்திருக்கும்
உண்மை தன்மையே,
நமக்கு இறை
உணர்வை தரும்,
இதுவே தியான
தன்மையாகும்... சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப வரும்போது தெரியும்
இந்தப் பிரபஞ்சம் உன்னிடமிருந்து எதையும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை…
ஒரே ஒரு எளிய காரியம் தான் எதிர்பார்க்கிறது…
தொடர்ச்சி — நிலைத்த முயற்சி.
நீ எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும்,
அந்தப் பாதையில் சிறிய அடிகள் கூட தொடர்ந்து செல்வாயானால்…
உன் கர்மாவும், பிரபஞ்சத்தின் ஆற்றலும்
உன்னோடு சேர்ந்து நடக்கத் தொடங்கும்.
ஒரே நாளில் அற்புதம் வேண்டாம்…
ஆனால், ஒவ்வொரு நாளும் கொஞ்சம் வளர்ச்சி வேண்டும்.
அதுவே இந்த பிரபஞ்சத்தின் விதி, விருப்பம்.
உன் கனவு எதுவாக இருந்தாலும்…
அதற்கு தடைகள் வந்தாலும்,
மனம் சோர்ந்தாலும்…
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு
ஒரு கேள்வி மட்டும் பிரபஞ்சம் கேட்கிறது!
“நீ தொடர்ந்து முயற்சி செய்கிறாயா?”
யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியமில்லை…
பிரபஞ்சம் உன் ஈடுபாட்டையே கவனிக்கிறது!
நேற்றைவிட இன்று கொஞ்சம் மேலே இருந்தால்…
அதுவே உன் வெற்றிக்கான மிகப்பெரிய அடையாளம்.
நீ தொடர்ந்து முயற்சி செய்தால்…
பிரபஞ்சம் தானாகவே உன் பக்கம் வர ஆரம்பிக்கும்..
உன் கர்மா உன்னைத் தவறவிடாது..
மறக்காதே !
*🚩பகவத்கீதை🚩*
*என்னை பரம புருஷனாக, ஜடாத தோற்றங்களின் ஆளும் தத்துவமாக, தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாக, எல்லா யாகங்களின் இறைவனாக அறிபவர்கள், உறுதியான மனத்துடன் என்னை உணர்ந்து, இறக்கும் நேரத்திலும் கூட என்னை அறிய முடியும்.*
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.🚩*
உண்மையை மறைப்பது,தன்னை தானே புகழ்வது,தனது தவறுக்கு அடுத்தவரை காரணமாக்குவது, உண்ணும் உணவில் மாறுபாடு காட்டுவது, தர்மத்தை கேள்விக்கு உள்ளாக்குவது போன்றவை கர்ம சண்டாள பலனுக்கு தள்ளிவிடும்:
பரமாத்மா 🚩🌙
வேகத்தைக் குறைத்து வாழ்க்கையை இரசியுங்கள்.வெகு வேகமாகப் போவதால் காட்சிகளைக்
காணத் தவறி விடுவீர்கள் என்பது மட்டுமல்ல.எங்கு செல்கிறீர்கள், ஏன் செல்கிறீர்கள் என்ற நிதானத்தையையும் இழந்துவிட நேரிடும்.மிதமாக முன்னேறி செல்வதே நல்லது.செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
எவ்வளவு தான் சமாளித்து பயணம் செய்தாலும் காயப்படுத்தாமல் விடுவதில்லை இந்த "வாழ்க்கை"👍️
தனியாக நீந்தி கரை சேர கற்றுக்கொள். யாரும் இறுதிவரை நம்மோடு பயணிக்கப்போவதில்லை👍✔️✔️✔️️
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
11.#விஷ்வரூபதரிசன_யோகம்.🙏
பாகம்__14
#ஶ்ரீபகவான்_சொன்னது🙏
🙏32. " உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களை. ஸம்ஹாரம் செய்ய தலைப்பட்டிருக்கிறேன். நீ போரிலிருந்துப் பின்வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழமாட்டார்கள்".
விளக்கம்: "முதல்வனாகிய தங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்! தங்களின் செயல் எனக்குப் புரியவில்லை" _என்ற பார்த்தனின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். "எல்லாவற்றையும் அழிக்கும் வல்லமை வாய்ந்த காலம் நான்! உலகங்களைச் சம்ஹரித்து பூமியின் பாரத்தைத் தீர்க்க வந்துள்ளேன்!" என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
காலம் முன்னும், பின்னும் அண்டவெளியில் விரிந்தோடுகிறது. ஆகாயம், மற்ற பூதங்களையும் தன்னில் அடக்கி வைத்திருப்பதைப் போல, காலமானது, செயல்கள் யாவற்றையும் தன்னிடம் அடக்கிவைத்துள்ளது. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே, பகவத்சொரூபமாகிறது.
உலகங்களையும், உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் செயல்! எனப் பகவான் கூறுகிறார். தோன்றிய அனைத்தையுமே சிறிது சிறிதாக அவர் எப்பொழுதும் விழுங்கிக் கொண்டிருக்கிறார்; சிலவேளைகளில் பெருவாரியாகவும் விழுங்க வேண்டியிருக்கிறது. மகாபாரத யுத்தம் அத்தகையதே. உலகில் அதிகரித்துவிட்ட அதர்மங்களை எல்லாம் அழித்தொழிக்கப் பகவான் வந்து நிற்கிறார். ஏன் அப்படி நடக்கிறது? என நாம் வியக்கிறோம். அவையாவும் #ஈசனின்_செயலே.
எந்த நேரத்தில் உலகை அழிக்க வேண்டுமோ, அப்படி அவர் அழிக்கிறார். ஆக்கமோ, காத்தலோ, அழிவோ அனைத்தும் பகவானின் செயலே! #அனைத்தும்_அவனே! என அறிபவன் அவரைப் போற்றி, நற்பேறு பெறுகிறான். ஏனையோர் எப்பயனும், நற்கதியுமின்றி வீணே அழிந்துப் போகின்றனர். இறைவனை உணர்ந்தவன், பயங்கரமான எச்செயலைக் கண்டும்
நடுங்குவதில்லை.
எதிரில் நிற்கும் கௌரவ சேனை தோற்கும்; பீஷ்மர், துரோணர், துரியோதன் உட்பட்ட கௌரவர்களும், கர்ணன் முதலிய வீரர்களும் அழிவது உறுதி! என இப்பொழுது அர்ஜுனனுக்குக் காட்டப்படுகிறது. தனது *தாத்தாவையும், *குருவையும் தானே அழிப்பது தகுமா? என்ற அர்ஜுனனின் மனக்குழப்பத்தைக் ஶ்ரீகிருஷ்ணர் போக்குகிறார்.
எனவே நடைபெறும் யாவும் உனது செயலல்ல; நீ அதற்குப் பொறுப்பல்ல! என உறுதிபடக் காட்டுகிறார் ஶ்ரீகிருஷ்ணபகவான். 'கர்ணன் மடிவவதும் உன்னைப் பொறுத்தது அல்ல!' என அர்ஜுனனுக்கு உணரவைக்கப்படுகிறது.
நீ போர் புரியாவிட்டாலும் இவர்கள் என்னால் அழிக்கப்படவிருக்கிறார்கள்! எனவே கலக்கத்தை விடு! என்கிறார்! #ஶ்ரீகிருஷ்ணாபரமாத்மா.🙏
#


