#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁தீம்பர்கள் நீறணியாச் சிறியோர்அறி யாதவனே_
_🍁பாம்பணி மேனியினாய் படருஞ்சடை மேற்பிறையாய்_
_🍁தேம்பொழில் சூழ்ந்தழகார் திருமங்கல நன்னகரில்_
_🍁ஓம்பிடு வார்துணைவா ஒழியாவிடர் தீர்த்தருளே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_தேன் நிறைந்த சோலை சூழ்ந்த அழகிய திருமங்கல நகரில் உறைகின்ற வழிபடும் பக்தர்களின் துணைவனே !! திருநீற்றைப் பூசமாட்டாத துஷ்டர்களாலும் கீழோர்களாலும் அறியப்படாதவனே !! பாம்புகளைத் திருமேனிமேல் அணிந்தவனே !! படர்ந்த சடையின்மேல் சந்திரனைச் சூடியவனே !! தீராத துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#azagaana vaalkkay thathuvam நிம்மதி தராது என எந்த ஏழையும் சொன்னது இல்லை ...
நிம்மதி தராத அந்தப் பணத்தை எந்த பணக்காரனும் இழக்க விரும்புவது இல்லை ...
கோபத்தில் உன் அன்பையும் ...
மௌனத்தில் உன் வார்த்தைகளையும் எவர் புரிந்து கொள்கிறார்களோ ...
அவர்களே உண்மையான உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்.
மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் இல்லை ...
வாழும் விதத்தில் தான் உள்ளது ...
எப்போதும் இளமையாக இருக்க முடியாது ...
ஆனால் ...
எப்போதும் அழகாக இருக்க முடியும்
சிரித்தால் போதும் ...
😊
#sinthanay thulirgal போக்கில் அவர் போகட்டும் என்று விட்டு விடுவது அக்கறையின்மை இல்லை.
யாரையும் வற்புறுத்த, வருந்தி, திணித்துக் காரியம் சாதிக்க விருப்பமில்லை என்பதே அதன் உண்மைப் பொருள்.
வீழ்ச்சியில் கற்பதும், அந்த அனுபவம் கொண்டு எழுச்சி பெற்று நிற்பதும் ஒரு வகை வாழ்க்கை சுழற்சியே, இரவும் பகலும் போல.
😊
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை*
(18.11.2025)
................................................
*"தவறை மன்னியுங்கள்...!"*
...........................................
நமக்குத் தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது என்று அண்மையில் வந்த ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது...
மனிதர்களின் மனதிற்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்...
இருநூறு பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்குக் கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்...?, அவரை எப்படி பழி வாங்குவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...
மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...
ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்து அவர்களது குருதியோட்டம் (ரத்த அழுத்தம்) சோதனை செய்யப்பட்டது...
நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் குருதியோட்டம் மிக அதிகமாக வேகமாகப் பாய்ந்தது...
மறப்போம், மன்னிப்போம் என்ற மன்னிக்கும் குணம் கொண்ட நூறு பேரின் குருதியோட்டம் சீராக இருந்ததும் தெரிய வந்தது...
இந்த ஆய்வு குறித்து கருத்துத் தெரிவித்த குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன்,
மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் குருதியோட்டம் ஆத்திரப்படும் போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பைச் சந்திக்கிறது.
அதனால், அவர்கள் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம்.
அதேநேரம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு குருதியோட்டம் அதிகரித்து அது வலுவடைந்ததும் சோதனையில் தெரிந்தது...
இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டு மொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்...
இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது...
இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ''எண்ணம் போல் வாழ்வு'' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்...
மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்...
மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது...
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளை விடும்...!
*ஆம் நண்பர்களே...!*
🟡 மன்னிப்பு!, வாழ்க்கையை உருவாக்குகிறது.. மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது...!
🔴 மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...!!
⚫ வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்...!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
https://youtube.com/watch?v=at9GCgTG7ig&si=PZJxW9iIz8hhJNEm
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
https://youtube.com/shorts/H3GyxsD9Igk?si=VyyYXvTre2IWwPuV #sree jai hanuman 🙏
https://youtube.com/shorts/_TfTs3cN9c0?si=9py8N44u7uhd9UfQ #sinthanay seivome.











