https://youtube.com/shorts/H3GyxsD9Igk?si=VyyYXvTre2IWwPuV #sree jai hanuman 🙏
https://youtube.com/shorts/_TfTs3cN9c0?si=9py8N44u7uhd9UfQ #sinthanay seivome.
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மாலய னார்க்கரிய வளர்சோதிய தாயவனே_
_🍁காலனை மார்பிலுதை கழலாய்சுடு காடமர்ந்தாய்_
_🍁சேலுகள் செய்யணிந்த திருமங்கல நன்னகரில்_
_🍁ஆலம துண்டவனே அடியேனிடர் தீர்த்தருளே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_சேல்மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த திருமங்கல நகரில் உறைகின்ற விடம் உண்டவனே !! சுடுகாட்டை விரும்பியவனே !! கழல் அணிந்த திருவடியால் நமனை மார்பில் உதைத்தவனே !! திருமாலுக்கும் பிரமனுக்கும் காணற்கு அரிய எல்லையற்ற ஜோதி ஆனவனே !! என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#azagaana vaalkkay thathuvam நிம்மதி தராது என எந்த ஏழையும் சொன்னது இல்லை ...
நிம்மதி தராத அந்தப் பணத்தை எந்த பணக்காரனும் இழக்க விரும்புவது இல்லை ...
கோபத்தில் உன் அன்பையும் ...
மௌனத்தில் உன் வார்த்தைகளையும் எவர் புரிந்து கொள்கிறார்களோ ...
அவர்களே உண்மையான உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்.
மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் இல்லை ...
வாழும் விதத்தில் தான் உள்ளது ...
எப்போதும் இளமையாக இருக்க முடியாது ...
ஆனால் ...
எப்போதும் அழகாக இருக்க முடியும்
சிரித்தால் போதும் ...
😊
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை*
(17.11.2025)
...........................................
*''அன்பான, ஆதரவான வார்த்தைகள்...!"*
.........................................
பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை...
அதுவும் துன்பக் காலங்களில் ஒருவர் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் செயலாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை...
தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் மரக்கட்டை பிடி கொடுத்து மிதக்க உதவுவதைப் போல, அந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்பக் காலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவருக்கு உதவுகின்றன...
மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், திறமையாளர்கள் கூட சில நேரங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் இழந்து விடுவதை நாம் பார்த்திருக்கின்றோம்...
அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டு இருக்கின்றோம்...
இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது...
எத்தனையோ வசதி, வாய்ப்புகள் பெருகி இருந்தாலும் மனப்பற்றாக்குறையாலும், நேரப்பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது...
இந்த சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை...
*ஆம் நண்பர்களே...!*
🟡 சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்...!
🟡அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் மனமுவந்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்...!
🔴 வருத்தங்களையும், தோல்விகளையும் கடக்காமல் எவரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!
🔴 அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்...!!
⚫ பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகி ஒளிர்வதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன...!!!
⚫ ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன...!!!
🔘 அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள். தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா...?
🔘 அதற்கு என்ன செலவு இருக்கிறது...? அதில் என்ன சிரமம் இருக்கிறது...? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போமா...!?
-உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#vithi valiyathu. விதி ஒன்று இருக்கிறது. உங்களால் காத்திருக்க முடியும் என்றால் அனைத்து விஷயங்களும் நிறைவேற்றப் படுகின்றது.*_
_ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு விதிவிலக்கு என்று எண்ணுகிறான்._
_*மற்றவர் சாகும் போது தாமும் ஒரு நாள் மரணமடையப் போகிறோம் என்பது நமக்கு கருத்தில் படுவதில்லை.*_
_நாம் வெறுமனே பாவம்_
_அவன் இறந்து விட்டான். என்கிறோம். நாமும் அந்த பாவப்பட்டவர்கள்தான் என்று கருதுவதில்லை._
_*இந்த விசித்திரமான உலகத்தின்*_ _*அற்புதமான காட்சி.*_
_*மக்கள்*_ _*வெறுங்கையுடன்*_
_*செல்வதற்காகச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.*_
_சின்ன விசயங்களை_
_கண், காது, மூக்கு_ _வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும்_ _பழக்கத்தை.._
_மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும்.._
_ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.._
_*வாழ்க்கைப் பயணம்*_
_*செல்லும் போது*_
_*வழியில் தோன்றும்*_
_*இன்னல்கள் யாவும்*_
_*சாலைப்பயணங்களில்..*_
_நாம் சந்திக்கும் பனி மூட்டம்_
_போலத்தான்_
_தோள் கொடுக்கும்_ _துணிச்சலோடு_
_துயரங்களை_ _ஊதித்தள்ளு.._
_*நாம் வாழும் நாளை திருட*_ _*முடியாது ஆனால் நடப்பு நாளை*_
_*நன்மையாக்க முடியும்.*_
_வயதில் சிறியவர்களிடம் கனிவாகவும், முதியோரிடம் பரிவாகவும், துன்பப்படுபவர்களிடம் அனுதாபமாகவும்,_
_பலவீனமானவர்களிடமும், தவறு செய்பவர்களிடமும், சகிப்புத்தன்மையுடன் இருக்க முடிவு செய்யுங்கள்..._
_ஏனென்றால்,_
_நமது வாழ்வில்_
_சில சமயம் நாமே இவர்கள் போல் இருந்திருக்கலாம்_
_*"கவனித்துக் கேட்பதையும்,*_
_*கூர்ந்தது*_ _*கவனிப்பதையும்*_ _*நீங்கள் தொழிலாக*_ _*வைத்துக் கொண்டால்*_ _*பேசுவதைக் காட்டிலும் நீங்கள்*_ _*அதிக பலன் பெறலாம்*_
#🙏கோவில் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில்,*
*மூலவர் : உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்.*
*அம்மன்/தாயார் : தையல்நாயகி.*
*மறையூர்,*
*திருப்போரூர்,*
*காஞ்சிபுரம்.*
*காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•═•⊰ ═•╗*
*★❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰ • •═•╝*
*கருவுற்ற பெண்கள் இங்குள்ள தையல்நாயகிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*
*பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, விளக்கேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.*
*ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க, ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர் எனும் திருநாமமும் உண்டு. பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது. இந்தத் திருத்தலம்.*
*பிரதோஷம், சிவராத்திரி. நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலைப்போலவே இங்குள்ள ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!.*
*இந்த ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்! தீர்த்தக்குளத்தின் நீரை எடுத்துப் பருகினாலே, வியாதிகள் பறந்தோடிவிடும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்களும் பிள்ளைப் பாக்கியம் இல்லையே எனக் கண்ணீர் விடுபவர்களும் வியாபாரத்தில் அடுத்தடுத்த நஷ்டத்தால் அல்லல்படுபவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்; நலிவுற்ற வியாபாரம் செழித்து விளங்கும் என்பது ஐதீகம்! கருவுற்ற பெண்கள், இங்கு வந்து தையல்நாயகியை மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால், சுகப்பிரசவம் உண்டாகும். கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகச் சொல்வர்.*
*தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார். அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன், திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.*
*நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலைப்போலவே இங்குள்ள ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!.*
*இனிய காலை வணக்கம்.🙏💐*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்.*
*+918072055052.*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
#sinthanay seivome. உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள்தான் மனிதனை முழுமையாக்கும்.*_
_பிரச்னைகளே இல்லாமல் இருந்துவிட்டால் உங்கள் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்._
_*எதிர்பாராத திருப்பங்கள்தானே ஒரு*_ _*வாழ்க்கையைச்*_
_*சுவையாக*_ _*அமைத்துத் தரமுடியும்.*_
_கடந்த காலக் கெட்டதையும் தூக்கிக் கொண்டு சுமப்பவருக்கு......_
_நிகழ்காலமும் சுமை தான்._
_*உங்கள்*_ _*வாழ்க்கையை*_
_*வடிவமைக்கும்*_ _*அளவுக்கு தைரியமாக இருங்கள்...*_
_*தைரியமாக*_
_*இருப்பதில்*_ _*சுதந்திரம் உள்ளது...*_
_*கதவுகள்*_ _*திறக்கப்படும்...*_
_*தட்டுவதற்கு தைரியமாக இருப்பவர்களுக்கு.*_
#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨
*அருள்மிகு சிங்காண்டீஸ்வரர் திருக்கோயில், திருவூர்*.
இறைவன் : சிங்காண்டீசுவரர்
இறைவி : உத்பலாம்பிகை
விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : முனி (ரிஷி) தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் இருப்புப் பாதையில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது திருவூர் என்னும் கிராமம்.
தன் பெயரிலேயே "திரு" என்ற அடைமொழியைக் கொண்ட இந்த ஊரில் மிகப் பழைமையான அருள்மிகு சிங்காண்டீசுவரர் திருக்கோயில் உள்ளது. புனிதமான "கூவம்" நதிக்கரை யின் வடகரைத் தலமாக இத்தலம் அமைந்துள்ளது. கூவம் நதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தலம் அமைந்துள் ளது.
திருக்கோயிலில் உள்ள லிங்கம் "ரிஷ்ய சிருங்கர்" என்ற முனிவரால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டதால் இந்த லிங்க மூர்த்திக்கு "சிங்காண்டீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இத்தலத்தின் அம்பிகை "உத்பலாம்பிகை" என்று வணங்கப்படுகின்றார். ரிஷ்ய சிருங்கரால் இறைவனுக்கு நீராட்டு செய்ய அமைக்கப்பட்ட தீர்த்தம் " முனி (ரிஷி) தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த தீர்த்தம் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. தல விருட்சமாக ஈசனுக்கு உகந்த வில்வம் உள்ளது.
இக்கோயிலின் கருவறையில் ஈசன் சிங்காண்டீசுவரர் கிழக்குத் திருமுகமாக பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கின்றார். ராஜகோபுர வாயிலை அடுத்து மகா மண்டபமும், முன் மண்டப மும் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர் களின் கலைத்திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் இத்திருக் கோயிலைச் சார்ந்த துர்க்கை, பைரவர், விஷ்ணு போன்ற சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளில் இறைவனது திருநாமம் "ரிஷ்ய சிங்கீசுவரர்" எனவும் இத்திருத்தலம் "பெருமளையூர்" எனவும் வழங்கப்பட்டுள்ளது. இப்பெருமளையூர் தற்போது "பெருமாள்பட்டு" என்று மருவி வழங்கப்படுகினறது. இக்கல்வெட்டின் மூலம் "உலகளந்த சோழ சதுர்வேதி மங்கலமான பெருமுளையூர்" ஈக்காடு கோட்டத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.
பிற்காலப் பாண்டியர்களின்
திருப்பணி
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு தொடங்கி தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலன் கல்வெட்டு மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் வரையில் மொத்தம் 12 கல்வெட்டுத் தொடர்கள் இத்தலத்தில் உள்ளன.
கிபி 13- ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
சோழ மன்னர்களின் பலம் குறைந்த பின் மதுரையை ஆண்ட பாண்டியர்கள், சோழ மன்னர்களை வெற்றி கொண்டு இந்தப் பகுதிகளை தங்களது ஆட்சி எல்லைக்குள் கொண்டு வந்தனர். அக்காலத் தமிழகத்தின் வடக்கு எல்லையான திருவேங்கடம் வரை உள்ள நிலப்பகுதிகள் பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்களின் ஆட்சிக் காலத்தில் தங்கள் பங்குக்கு இப் பகுதிகளில் உள்ள பல கோயில்களை புதியதாக நிர்மாணித்தும் செங்கல் தளிகளை கற்றளியாகப் புதுப்பித்தும் திருப்பணி செய்தனர்.
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1251-1284) கி.பி. 1261-ல் திருவூர் கோயில் கற்கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதனை "ஒழுகரை" எனப்படும் குலோத்துங்க நல்லூரைச் சார்ந்த திருவண்ணாமலை உடையான் என்பவன் கட்டியுள்ளான். இவன் "வெண்பையூர்" என்றும் "துகடூர்" என்றும் வழங்கப்படும் இடத்தின் தலைவன் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதே மன்னனின் ஆட்சி ஆண்டைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டில் இவன் "மலையன் திருவண்ணாமலை உடையான்" என்றும் வழங்கப்பட்டுள்ளான். இம் மன்னனின் 18- ஆவது ஆட்சி ஆண்டில் ஒழுகரையைச் சார்ந்த "குலத்தறையன்" ஆகிய "பெரியாண்டவன்" என்ற வணிகன் இக்கோயிலுக்கு நிலத்தினை தேவதானமாக அளித்துள்ளான். பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருவூர் கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
பாண்டிய மன்னர்களுக்குப் பின்னர், தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலனின் 18 -ஆம் ஆட்சியாண்டில் இக்கோயில் கணக்குகள் பிச்சாண்டவனான வில்லவரையன் என்பவனால் சரி செய்யப்பட்டுள்ளன. அப்போது "அயத்தூர்" என்ற தேவதான கிராமம் இம்மன்னனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு வரை கோயில் கணக்கில் விடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ததுடன், அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தில் "சித்திரைத் திருவிழா" நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதை யும் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன.
கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள விஜயநகர அரசர் சாளுவ வம்சத்தினைச் சார்ந்த திம்மைய தேவரின் கல்வெட்டில் இவருக்கு முன்னர் ஆட்சி புரிந்த திப்பைய தேவரின் நினைவாக கி.பி. 1502- ஆம் ஆண்டு இவ்வூர் பொது மக்களும், கேசவராயன் என்பவனும் நியாயக் கட்டணமாக அளிக்க வேண்டிய தொகைக்கு தென்னந்தோப்பினை வாங்கிக் கோயிலுக்குத் தானமாக அளித்துள்ள செய்தி காணப் படுகிறது.
கி.பி. 1519 -ல் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவ ராயரின் தளபதி "இம்மடி திருமலை நாயக்கரும்" திருவூர் பொதுமக்களும் சேர்ந்து திருவூரின் அருகில் உள்ள வரதராஜப்பட்டு, மகா மண்டலப் புருஷன்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட தண்ணீர் வரியாகிய ஆறு கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கியுள்ளனர்.
கல்வெட்டில் தமிழ் நிகண்டு
கிருஷ்ணதேவராயர் காலத்தில் தமிழ் நிகண்டினை தொகுத்தவர் மகா மண்டலப் புருஷன் என்பவர் ஆவார். இவரது பெயரால் மகா மண்டலப் புருஷன் பட்டு என்று ஒரு கிராமத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது. கிருஷ்ணதேவ ராயரின் கி.பி. 1527- ஆம் ஆண்டில் இம்மடி திருமலை நாயக்கரின் தளபதியான சதாசிவ நாயக்கர் என்பவர் திருமலை எனப்பட்ட திருவூர் சிங்கீசுவரம் உடைய நாயனார் கோயிலுக்கு மடவிளா கமாக வீடு கட்ட நிலத்தினை இவ்வூர் மக்களிடமிருந்து வாங்கி வழங்கியுள்ளார்.
விஜயநகர ஆரவீடு வம்சத்தின் வழிவந்த வெங்கடாத்ரி மன்னர் இக்கோயிலில் உள்ள கரிய மாணிக்கப் பெருமாளுக்கு திருவூர் மற்றும் பெருமுளைப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை தேவதானமாக வழங்கியுள்ளார். இதில் சிவராம நரசப்பநாயக்கர் என்பவர் அரசரின் பிரதானியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சிங்கீசுவரமுடையார் கோயிலின் கருவறை முக மண்டபத்தினைத் திருவூரைச் சார்ந்த அணுக்கி புருஷோத்தமன் பட்டர் வரதன் என்பவர் கி.பி. 14- ஆம் நூற்றாண்டில் நிர்மாணித்து ள்ளார். இதற்கு ஈடாக, அட்டகப் பிள்ளையார் என்ற பிள்ளையார் கோயிலில் இரவில் தீபம் ஏற்றவும், வழிபாட்டுக்காகவும் சிங்கீசுவரமுடையார் கோயிலில் இருந்து தனக்குச் சேர வேண்டிய பணம் மற்றும் நெல்லினை தானமாக வழங்கியுள்ளார்.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அட்டகப் பிள்ளையார் கோயில் தற்போது கூவம் ஆற்றின் மேற்குக் (?)கரையில் உள்ள சிறிய பிள்ளையார் கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படு கின்றது.
விஜயநகர மன்னர்களின் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ராமேசுவரர், திருநாகேசுவரர், ஜம்புகேசுவரர், ரிஷ்ய சிங்காண்டீசுவரர் போன்ற சிற்பங்கள் அர்த்தமண்டபத்தில் உள்ள ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் காணப்படு கின்றது.
சிறந்த பரிகாரத் தலம்
மூல நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு சிறந்த பரிகாரத்தலமாக திரூர் சிங்காண் டீசுவரர் திருத்தலம் திகழ்கின்றது.
பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்று ஒரு நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகின்றது. ஆனால் ஜோதிடபூர்வமாக இது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதனை பல ஜோதிடர்கள் விவரித்தாலும் மக்கள் புரிந்து கொள்ளாமல் மூல நட்சத்திரம் என்றாலே அந்த ஜாதகம் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர்.
இக்காரணங்களால் திருமணத் தடை உள்ள அன்பர்களும் புத்திர பாக்கியம் வாய்க்காத அன்பர்களும் பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து திருக்கோயில் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்து நந்தி எம்பெருமானுக்கு கலச நீரை அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்கின்றனர். இதனால் மணமாகாதவர்களுக்கு திருமணம் உடனே கை கூடுவதாக வும் குழந்தைப் பேறு இல்லாதவர் களுக்கு அவர்களது இல்லங்க ளில் விரைவில் மழலை ஒலி கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் பலனடைந்த அன்பர்கள்.
இத்திருக்கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு கந்தசஷ்டியின் போது சூரசம்மார விழா சிறப்பாக நடைபெறுகின் றது. பங்குனி உத்திர விழாவும் இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழாவாகும்.
இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் 1904- ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஊரும் திரூர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
திருக்கோயில் காலை 6.00 மணி முதல் 8:30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
🟨🕉️. 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨













