#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (30.01.2026)*
........................................................................
*''பொறுப்பும்...! கடமையும்...!!"*
......................................................................
'பொறுப்பு' மற்றும் 'கடமை' ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை...
''உண்மையில் பொறுப்பேற்பது என்றால்'' என்ன என்பதையும், ‘நான் பொறுப்பு’ என்ற உணர்வுடன் இருக்கும்போது உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது என்ன என்பதையும் பாருங்கள்...
பொதுவாகவே, 'பொறுப்பு' என்றால், சுமைகளைச் சுமப்பது என்று பொருளாக்கிக் கொள்பவர்கள்தான் அதிகம். கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்புதான் மிச்சமாகும்...
பொறுப்பு என்பதைக் கடமை என்று தவறாக நினைப்பதால்தான் இப்படி சுமையாகத் தோன்றுகிறது...
ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டியை எடுத்து அதன் மீது அடையாளச் சிட்டை (லேபிள்) ஒட்டினார். அடுத்தவருக்குத் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைக் காலணியைப் போட்டார்...
அவரை அடுத்திருந்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார். அந்தப் பெட்டி விற்பனை பிரிவுக்கு செல்லும் வண்டியில் ஏற்றப்பட்டது...
“என்ன நடக்கிறது இங்கே...? செருப்புகளை சோடியாகத்தானே தயாரிக்கிறோம்...? ஏன் ஒற்றைச் செருப்பை மட்டும் பெட்டியில் போடுகிறீர்கள்...? என்று உரிமையாளர் பதறினார்...
“அய்யா!, இங்கே எந்தத் தொழிலாளரும் வாங்கிய சம்பளத்துக்குத் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. சிக்கல் என்னவென்றால், இடது கால் செருப்பை எடுத்து பெட்டியில் போட வேண்டியவர் மட்டும் இன்று விடுமுறை” என்று மேலாளரிடமிருந்து பதில் வந்தது...
தங்கள் கடமையிலிருந்து தவறாத தொழிலாளர்கள் இருந்தாலும், அந்த முதலாளியின் வியாபாரம் என்ன ஆகும்...? என்று ஆலோசித்துப் பாருங்கள்...
முழுமையாகப் பொறுப்பேற்காமல், கடமையைச் செய்வதாக மட்டுமே நினைத்து செயல்பட்டால், அது உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. விரைவிலேயே சலிப்பும், வெறுப்பும், விரக்தியும் கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள்...
யார் சொல்லியோ செய்யாமல், அதை நீங்களாக பொறுப்புடன் விரும்பிச் செய்தால் மட்டுமே இந்த வேதனை இருக்காது...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *முதலில் பொறுப்பு என்பதைச் செயலாக மட்டுமே நினைப்பதை விடுங்கள். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்...!*
🔴 *எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாக பொறுப்பு ஏற்கும்போது, “இது என்னுடையது” என்ற உணர்வு ஏற்படுகிறது...!!*
⚫ *எப்போது அதை உங்களுடையதாகவே உணர்ந்து விடுகிறீர்களோ!, அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁புவியினர் விண்ணவர் போற்று பூரணன்_
_🍁அவிதலி லாச்சுடர் ஆய பெற்றியன்_
_🍁கவினுறு வயலணி கள்ளில் மேயவன்_
_🍁சிவனவன் அடியிணை சிந்தி நெஞ்சமே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_மண்ணுலகோரும் விண்ணுலகோரும் போற்றுகின்ற முழுமுதற்பொருள் !! என்றும் அவியாத ஜோதி என்ற பெருமை உடையவன் !! அழகிய வயல் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்ற சிவபெருமானது இரு திருவடிகளை, நெஞ்சே, எண்ணுவாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#thaypoosa Valippaadu. 2026 வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய நேரமும், வழிபடும் முறையும்_*
* 🛕🛕🛕முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வேண்டிய வரங்களை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தைப்பூச திருநாள் கருதப்படுகிறது. இந்த நாளில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே விரதம் இருந்து, முருகனை வழிபாடு செய்யலாம். வீட்டில் எந்த நேரத்தில், எந்த முறையில் தைப்பூச வழிபாட்டினை செய்யலாம் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.
> முருக வழிபாடு என்பது வாழ்க்கையில் வெற்றியை தரக் கூடிய வழிபாடு. உலகத்தை காப்பதற்காகவும், நன்மையை நிலை நாட்டுவதற்காகவும் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும். இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 01ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில், எப்படி முருகப் பெருமானை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற்றலாம் என தெரிந்து கொள்ளலாம்.
தை மாத வளர்பிறையில் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்த நாளையே தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். அந்த வகையில் பிப்ரவரி 01ம் தேதி அன்று காலை 04.41 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அன்று காலை 04.43 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே போல் அன்றைய தினம் அதிகாலை 01.54 மணி துவங்கி, பிப்ரவரி 02ம் தேதி அதிகாலை 01.01 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. பிப்ரவரி 01ம் தேதியன்று நாள் முழுவதும் பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் உள்ளதால் அன்று முழுவதுமே தைப்பூச வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகப் பெருமானின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, விரதத்தை துவக்கலாம். முடிந்தவரை முருகனின் திருநாமங்களை சொல்லியபடி இருப்பதும், முருகப் பெருமானின் சிந்தனையுடனேயே இருப்பதும் நல்லது. வீட்டில் முருகன் படம், முருகன் சிலை, வேல் இருந்தால் அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, மலர்கள் சாற்றி அலங்கார செய்ய வேண்டும். முடிந்தால் வேலுக்கு அபிஷேகம் செய்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. முருகப் பெருமானுக்கு செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைத்து வழிபடுவது நல்லது. நைய்வேத்தியமாக தேன், திணை மாவு, தயிர் சாதம் ஆகியவை படைத்து வழிபடலாம். அருகில் உள்ள முருகன் கோவிலில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அதிகம் முடியவில்லை என்றாலும் பால் அல்லது சந்தனம் மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம்.
அன்றைய தினம் முருகன் படத்திற்கு முன் ஷட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம். வெற்றிலை தீபமும் ஏற்றலாம். வேல் பூஜை செய்து, வேல்மாறல் மகா மந்திரத்தை படிக்கலாம். செவ்வரளி மலர்களைக் கொண்டு, 108 முறை "ஓம் சரவண பவாய நமக" என முருகப் பெருமானுக்கும், வேலுக்கும் அர்ச்சனை செய்து வழிபடலாம். ஏதாவது இரண்டு ஜீவராசிகளுக்காவது அன்னதானம் அளிப்பது சிறப்பு. அன்றைய தினம் மாலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மலைக் கோவில் இருந்தால் கிரிவலம் செல்வது சிறப்பு.
குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை விலக, நோய் நீங்க, பகை விலக, வியாபாரம் செழிக்க, கடன் நீங்க, குழந்தைகள் கல்வியில் சிறக்க என என்ன வேண்டுதல் இருந்தாலும் அதை மனதார முருகனிடம் பிரார்த்தனை செய்து, தைப்பூச விரதம் இருந்து, வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்.
🍁🍁🍁
#ethilum nithaanam vendum.
*_கோபத்தீயை கனிவான வார்த்தையால் அணைக்க முற்படுங்கள்!_*
* 🌹🌹🌹ஈரான் மன்னர் நெளஷேர்கான் ஒருநாள் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சமையல்காரர் வயதானவர். கை நடுக்கம் உடையவர். அவர் குழம்பு ஊற்றும்போது மன்னருடைய ஆடையில் ஒரு துளி கொட்டிவிட்டது. சமையற்காரர் பயந்துபோனார்.
மன்னரோ மகா கோபக்காரர். சமையற்காரரை மன்னர் எரித்து விடுவது போலப் பார்த்தார். புருவத்தை மன்னர் அசைத்தாலே மரண தண்டனை கிடைத்துவிடும். அப்படியிருக்க வெறித்த பார்வையின் விளைவுகளைப் பற்றி சமையல்காரர் அறிந்திருந்தார்.
சமையற்காரர் ஒரு கணம் திகைத்துப்போனார். திகைப்பு நீங்கியதும் கோப்பையிலிருந்த குழம்பு முழுவதையும் மன்னரின் ஆடையில் எடுத்துக் கொட்டிவிட்டார்.
மன்னர் நௌஷேர்கான் ஆத்திரத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார்.
"ஏய்... முதலில் தெரியாமல் கை தவறிக்கொட்டினாய். இப்பொழுது ஏன் வேண்டுமென்றே முழுக் குழம்பையும் கொட்டினாய்?" என்று கோபத்துடன் கேட்டார்.
உடனே சமையற்காரர் "மன்னா! உங்களுடைய கோபப்பார்வையைக் கண்டதுமே நான் இனி உயிர்வாழ முடியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கொரு யோசனை தோன்றியது. ஒருதுளி குழம்புப்பட்டதற்காக அரசர் தம் பழைய சமையற்காரரைக் கொன்றுவிட்டாரே! என்ன இது அநியாயம்! என்று ஊரார் உங்களைக் குறை சொல்வார்கள். அப்படி ஒரு பழி உங்களுக்கு ஏற்பட வேண்டாமென்றுதான் குழம்பு முழுவதையும் தங்கள்மீது சாய்த்துவிட்டேன். இப்போது என்னைத்தானே குற்றவாளி என்பார்கள்?" என்றார்.
இதைக் கேட்டதுமே நௌஷேர்கானின் கோபம் தண்ணீர் பட்ட நெருப்பாய் அணைந்தது. முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. வேறு ஆடையை அணிவதற்கு அமைதியாக எழுந்து சென்றார். சமையற்காரர் தன் பேச்சின் சிறப்பால் தன்னுடைய உயிரைக் காத்ததோடு, மன்னரையும் கோபத்தி லிருந்து விடுபடச் செய்துவிட்டார்.
இந்நிகழ்ச்சியிலிருந்து நமக்கு ஒரு செய்தி தெளிவாகிறது. அதாவது ஒருவருடைய கோபம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம்முடைய அணுகுமுறையின் மூலம் அக்கோபத்தைத் தணித்துவிட இயலும்.
சின்னத் தவறுக்குக் கூட மன்னிப்புக் கேட்கப் பழகிக்கொள்ளுங்கள். மன்னிப்புக் கேட்பதால் உங்கள் நண்பரைவிட நீங்கள் ஒருபடி உயர்வடைவீர்கள்.
அப்படியில்லாமல், "நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்?" என்று முறுக்கிக் கொண்டு இருந்தால் நட்பையும் முறித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.
நாணல்களைப்போல வளைந்து கொடுத்தால் நட்பு பலப்படும்.
'நெற்றியைக் காயப்படுத்துவதைவிட முதுகை வளைத்துச் செல்வது நல்லது' என்று ஒரு பொன்மொழி உண்டு.
உங்கள் தவறுக்கு மனமார வருந்தி மன்னிப்புக் கேட்பதால் உங்கள் நண்பரின் கோபம் தண்ணீர்பட்ட நெருப்பாய் நிச்சயம் அணைந்துவிடும்.
🌹🌹🌹
#savaalgal.
_*வாழ்க்கையை சிறப்பாக*_ _*மாற்றுகிறது ,*_ _*அவற்றைச் சமாளிப்பதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.*_
_தளராத இதயம் உள்ளவனுக்கு_ _இவ்வுலகில்_
_முடியாதது என்று எதுவுமே இல்லை!_
_*தன் கஷ்டமும்,*_ _*கண்ணீரும்*_
_*வெளியில்*_ _*தெரியாமல்*_ _*இருக்க*_ _*ஒவ்வொரு*_ _*மனிதருக்கும்*_
_*சிரிப்பு என்னும்*_ _*முகமூடி*_ _*தேவைப்படுகிறது.*_
_அர்த்தமில்லாத ஒரு சில_
_சண்டைகளால் தான்,_ _அர்த்தமுள்ள _ ஆயிரம் சந்தோசங்கள் தொலைந்து போகிறது._
_*உங்களைச் சுற்றி ஆயிரம் பேர்கள்* *இருப்பதை விட, உங்களையும், உங்கள்*_ _*உணர்வுகளையும் மதிக்கின்ற*_
_*ஒரு சிலர்*_ _*உங்களோடு* *இருந்தாலே* *போதும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.*_
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
#sirappaana Eduthurayppu. பார்த்துக் கொள்ளலாம்*_
_*என எவர் ஒருவர் தனது மனதை*_
_*ஆறுதல்*_ _*படுத்துகிறாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி காண்பவராகத் திகழ்வார்.*_
_நீங்கள் அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால், பாதை கடினமானாலும் அதை மாற்றாமல் பயணிக்கத்தான் வேண்டும்._
_*உயரத்தில் செல்லச் செல்ல நீங்கள் உயரத்தில் உள்ளவர்களைப் பாருங்கள்.*_ _*நீங்கள் இன்னும் உயர வேண்டும் என்பதால்.*_
_உயரத்தில் சென்ற பிறகு தாழ்வில் உள்ளவர்களையும் பாருங்கள்._
_நீங்கள்_ _இங்கிருந்து தான்_
_உயர்ந்து_ _வந்தீர்கள்_
_என்பதை மறக்காமல் இருக்க._
_*வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளால் நிரம்பியுள்ளது. தாழ்வு இல்லாமல், உயர்வுக்கு அர்த்தமே இல்லை.*_
_உண்மையான_
_அன்பு இருந்தால்..._
_நிஜங்கள் மட்டுமல்ல_
_நினைவுகளும் பேசும்._
#sinthanay thulirgal புறக்கணியுங்கள்!
இந்த உலகத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். வாழ்க்கையில் பிறரால் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நமக்கான போராட்டங்கள் ஆரம்பமாகிறது.
நம்பிக்கை கொடுக்கவும் நம்பி கை கொடுக்கவும் யாரேனும் இருக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் பெரும்பான்மையான மனிதர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய எண்ணப் போராட்டங்களே மனப் பூசல்களையும், விரக்தியையையும் சோர்வையும் தருகிறது.
வாழ்வில் வெற்றி பெற அவமானங்களும், புறக்கணிப்பும் அவசியம் தேவை தான். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சேகரித்து வையுங்கள். பின்னாளில் நமக்கான வெற்றி விழாவில் சொல்வதற்கு உதவும். சக மனிதன் வளர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணங்கள் தான் இந்த புறக்கணிப்பிற்கான காரணமாகும்.பின்னாடி பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னாடி போக முடியாது. இந்தப் புறக்கணிப்பு கூட ஒரு உந்துதல் சக்தி தான். மண்ணிற்குள் புதைத்து வைத்த விதைகள் முட்டி மோதி வெளியே வருவது போல இவற்றையெல்லாம் புறம் தள்ளி வெளியே வாருங்கள். மனத் தடைகளைத் தாண்டி, புறத் தடைகளைத் தாண்டி வருவது தான் வாழ்விற்கான வெற்றியாகும்.
வேலை கேட்டுச் சென்ற முதியவரிடம் அந்த நிறுவன முதலாளி 61 வயதில் உங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்டதற்கு, இனிக்கும் 16 வயது இளமையும், அதனுடன் 45 வருட கடினமான அனுபவமும் சேர்ந்து 61 வயது இளைஞன் நான் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த அந்த முதியவரை, நிர்வாக ஆலோசனை தலைவர் பதவியில் அமர்த்தினாராம் முதலாளி. இப்படித் தான் எதிர்பாராத சூழலையும் எதிர்நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உளிபடாத கல் சிலையாவதில்லை. வலி இல்லாத வாழ்க்கையும் வெற்றி பெறுவதில்லை. எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டால் வாழ்வில் சுவாராசியமேது?
மிகப் பெரிய அவமானங்களைக் கடந்து வந்தவர்களே இன்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
இன்பமும் துன்பமும்: எதுவரினும் மனம் தளராத தன்மை, பரந்த ஆகாயம் போன்ற விசாலப் பார்வை, இதுவும் கடந்து போகும் என்ற மனப் பாங்கு, எந்த சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை, பாறை போன்ற மன உறுதி இவை அனைத்தும் இருந்தாலே போதும் எந்த புறக்கணிப்புகளும், அவமானங்களும் நம்மை ஒன்றும் செய்யாது. எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்கலாம். எதிர்மறை மனிதர்களைப் புறக்கணிக்கலாம். வேண்டாத ஆசைகளைப் புறக்கணிக்கலாம். தீய சிந்தனைகளையும், தீய மனிதர்களையும் புறக்கணிக்கலாம். அதே சமயம் நாம், பிறர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ, அதை நாமும் மற்றவருக்கு செய்யக் கூடாது என்பதில் கவனம் வைப்போம்.
மனதாலும், சொல்லாலும், செயலாலும் பிறரைக் காயப்படுத்தக் கூடாது.
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.
சொற்களால் அவமானப்பட்டு பிரிந்த உறவுகள் அதிகம். அதனால் தான் நாவினால் சுட்ட வடு என்று வான் மறை கூறுகிறது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களாக நமது சொற்கள் இருக்கட்டும். அவமானப்படுத்தும் சொற்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வ சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்வுப்பூர்வ மனிதர்களை நல்ல உணர்வுகளால் இணைப்பது நல்ல வார்த்தைகளே.
சகமனிதனை நேசிக்க ஆரம்பித்தாலே போதும். புறக்கணிப்புகளும், அவமானங்களும் என்ற வார்த்தைகளே நம் கலைக் களஞ்சியத்தில் இல்லாமல் போய் விடும்.அங்கீகரிப்போம் எளிய மனிதர்களையும். அரவணைப்போம் அகிலத்தையும். புறக்கணிப்புகளைப் புறம் தள்ளுவோம். அவமானங்களை அடித்து நொறுக்குவோம்.
வாழ்தல் இனிது. வாழ்க்கையும் இனிது. 😊😊😊
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (29.01.2026)*
.......................................................................
*''கிடைக்கும் வாய்ப்பை...!"*
.............................................................
எல்லோருக்கும் எல்லாம் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஆனால்!, அவர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள்...
ஒபாமா தனது நாற்பத்து நான்காவது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது எழுபதாவது வயதில்தான் அதிபர் ஆகிறார்...
பில்கேட்ஸ் தனது முப்பதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தரானார். ஆனால்!, நிறுவனத்தை தனது ஐம்பதாவது வயதில்தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா எண்பது வயதில்தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்...
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...
இருபத்தி இரண்டு வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் நாற்பது வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் நாற்பது வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் அனைத்து விரயங்களை அனுபவித்து ஐம்பதாவது வயதில் செல்வந்தராகிறார்...
சர்ச்சில் தனது எண்பத்து இரண்டாவது வயதில் 'History of English Speaking People' என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது தொண்ணுற்று மூன்றாவது வயதில் 'Pertouched Pepler' என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது எண்பத்து இரண்டாவது வயதில் ''I Cannot Be Silent'' என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது ஐம்பதாவது வயதை தாண்டிய பிறகே முப்பத்து ஏழு நாடகங்களை இயற்றினார்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது...?அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!*
🔴 *இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது. இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ!, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...!!*
⚫ *அடுத்த நொடி உறுதியாக அழகாய் மலரும். தேவைகளை உறுதியாக நிறைவு செய்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும், இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்வாக வாழ்கிறார்கள்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹













