#magill vithu magill. மகிழ்
உண்மையை பொய்யோடு ஒப்பிடுவதை போல ..
உண்மையை அவமதிக்கும் செயல் வேறு ஒன்றுமே இல்லை ..
நிழல் தான் நிஜத்தை சார்ந்து இருக்கு ..
நிஜம் என்றும் நிஜமாகவே இருக்கு ..
அவன் அப்படித்தான் !!
அவனுள் இருப்பவன் அவனை அப்படி இருக்க வைத்திருக்கான் !!
இவன் இப்படித்தான் !!
இவனுள் இருப்பவன் இவனை இப்படித்தான் வைத்திருக்கான் !!
எதுவும் எப்படியும் தான் !!
எதுனுள்ளும் இருப்பவன் எதையும் எப்படியும் தான் வைத்திருக்கான் !!
நீ மட்டும் !!
அவன் அப்படி !!
இவன் இப்படி !!
அது அப்படி !!
என்று கணிக்க வரவில்லை ??!!
என்பது மட்டும் நிதர்சனமான மெய் !!
*🚩பகவத்கீதை🚩*
*அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன்*
*பரம யோகியாகக் கருதப்படுகிறான்.*
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩* *
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
10.#விபூதி_யோகம்
பாகம்__20
🙏36. " வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான்; வெற்றியாகவும், முயற்சியாகவும், சாத்துவிகர்களுடைய சத்துவ குணமாகவும் நான் இருக்கிறேன்".🙏
விளக்கம்: பிறரை ஏமாற்றுவது எப்பொழுதுமே தவறானதே. #சூதாட்டம் என்பதும் தவறானதே. பொய்ப் பத்திரம் தயாரிப்பது, பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது, போலியான பொருட்களை விற்பது என அனைத்துமே தவறானவையே.
ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சில சூதாட்டங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கிறது. மன்னர்களின் காலத்தில் மன்னர்கள், தங்கள் பொழுதுபோக்கிற்காகச் சூதாடுவது என்பது மரபு. பாண்டவர்களும் பகடைகளின் மூலம் சூடினர். அது சகுனியின் சதியால் வஞ்சகச் சூதாட்டமாக முடிந்தது. அது தவறே. ஆனால் வஞ்சகமின்றி வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக மட்டுமே சூதாட்டம் நடைபெறும் போது அது தவறில்லை.
*சூதாட்டம் என்பது வெளிப்படையாக சபையினர் முன்னே செய்யப்படுகிறது. அதனால் வரும் இலாப, நஷ்டங்களும், சுகத், துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். வஞ்சக செயல்கள் அனைத்துமே கேடுடையவையே! என்றாலும் அவைகளில் *சூதாட்டம் மட்டும் சற்றே வேறுபட்டது. ஏனென்றால் அதற்கு அறிவு மிகவும் வேண்டும். #அறிவு என்பது *தெய்வத்திடமிருந்தே வருகிறது.
பிற வஞ்சகங்களைப் போலின்றி சூதாட்டத்திற்கு "அறிவுத்திறன்" தேவைப்படுவதால் வஞ்சகர்களுடைய சூதாட்டமும் நானே! என்கிறார். அதாவது வஞ்சகங்கள் அனைத்துமே கேடானவேயே! என்றாலும் அந்தக் கேட்டிலும் அறிவைப் பயன்படுத்தி செய்யப்படுவதால்
#சூதாட்டத்தின்_அந்த_அறிவாக இருப்பதும் நானே! என்கிறார்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
#தேஜஸ் என்பது ஒளி என்று பொருள்படும். ஆரோக்கியம், புலனடக்கம், பிரம்மச்சரியம் முதலியவைகளில் இருந்து உண்டாகும் பொலிவும், மனத் தெளிவும், செயலாற்றும் திறமையும் சேர்ந்து தேஜஸாக மிளிர்கின்றன. கீழ்மையான குணங்களை அகற்றி, மேன்மை குணத்தில் நிலைநிற்கும் பொழுது, நம் முகத்தில் ஒரு தேஜஸ்( ஒளி) இருக்கும்.
நேர்மையான முறையில் அறிவும், புலனடக்கமும், ஆரோக்கியமும், மனத்தெளிவும் இணையும் பொழுது, ஒருவரின் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றுகிறது. அது நல்ல அரசர்கள், நேர்மையான ஆச்சாரியர்கள், சிறந்த மதத் தலைவர்கள் ஆகியோரிடம் இதை. நாம் காணலாம்.
#பண்பும்_பயனும் உடைய தொழிலை, உறுதியான மனத்தோடு செய்தால் நம்மிடம் ஒரு #நேர்மை_ஒளி பிறக்கிறது. சத்வம், ரஜோ, தமஸ் என்ற முக்குணங்களும் இறைவனின் படைப்பின் சொரூபமே என்றாலும், அவைகளுள் சத்துவகுணம் (சாத்வீகம்) ஒரு சாதகனுக்கு(ஞானநிலையில் பயிற்சிப் பண்ணுபவன்) இறைவனது சந்நிதிக்கு அழைத்துச் செல்ல உதவுகிறது.
எனவே #அர்ஜுனா! வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான்; எதிலும் வெற்றியாகவும், முயற்சியாகவும்; சாத்விகர்களுடைய சத்துவகுணமாகவும் நான் இருக்கிறேன்! என்கிறார்
#கேட்டால்தான்_கிடைக்குமா ?? #கேட்க்காவிட்டால் #கிடைக்காதா !! ஓர் நட்பின் கேள்விக்கு ..
கேட்பது என்பது எண்ணத்தால் நிகழும் செயல் ஆகும் ..
எதை எண்ணுகிறோம் ?? எப்படி எண்ணுகின்றோம் ?? எவ்வளவு ஆழமாக எண்ணுகின்றோம் ?? அந்த எண்ணத்தில் நமக்கு இருக்கும் தீர்க்கம் பொறுத்தே கேட்பது வலுப்பெறுகிறது ..
அப்படியான வலிமையான எண்ணமே செயலாய் மாறுகின்றது ..
வாய் ஒன்றை சொல்ல !!
மனம் ஒன்றை நினைக்க !!
நம் புலன்கள் எதையோ அனுபவித்த வண்ணம் இருக்க !!
அங்கே என்ன கேட்டாலும் , ( அது வருமா ?? நடக்குமா ?? கிடைக்குமா ?? போன்ற சலனம் இருக்குமாயின் .. )
அந்த கேட்டல் பலன் அளிப்பதில் தாமதமும் , நம் சலனத்தைப்போலவே அமையும் என்பதே எதார்த்தம் ஆகும் ..
இவனிடம் கேட்கின்றேன் !! இவனிடம் பெறவும் விரும்புகின்றேன் !! என்று உங்கள் எண்ணம் பயணிக்கும்போது ..
முதலில் அந்த இவன் அதை பெற்று உங்களுக்கு தரும் , மனநிலைக்கு வருவதில் தொடங்கி , அதை பெறுகின்ற தன்மைக்கு அந்த இவனை கொண்டுவந்து , அந்த இவனை பெறவைத்து , அந்த இவன் உங்களுக்கு கொடுக்கும்படியான சூழலை அமைத்து கொடுத்த பின்னே தான் அது கிடைக்கும் , அதற்கும் கொஞ்சம் தாமதம் ஆகும் தானே ..
அதே இறைவா கொடு !! எப்படியும் கொடு !! எதன்வழியும் கொடு !! என்ற எண்ணத்தில் தீர்க்கம் இருக்கும்போது , எப்படியும் கிடைக்க வேண்டியது கிடைத்துவிடும் , விரைவாக ..
அடுத்து கேட்டால் தான் கிடைக்குமா ?? என்ற கேள்வி ..
கேட்க்கும் எண்ணம் வெளிப்படும்போதே கேட்க தொடங்கி விட்டிர்கள் ..
இருந்தாலும் கேட்க்கூட ,
கேட்காதே கிடைக்கவேண்டியது கிடைத்துக்கொண்டு இருப்பதால் தான் முடிகிறது ..
கேட்பது உங்கள் விருப்பம் மட்டுமே , மற்றபடி கேட்காதே கிடைத்துக்கொண்டே தான் இருக்கு அனைத்தும் , உங்களை உணர்ந்த உங்கள் நாயகன் இறைவன் கருணையால் ..
#ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
..#


