இரத்தக் காயம் மற்றும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாத்தா ராஜு தாஸ் (45) என்பவரைத் தாரகேஷ்வர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது 'தீயவர்கள் கொசுவலையைக் கிழித்து' உறங்கிக்கொண்டிருந்த சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியைத் தீவிரமாகத் தேடிய குடும்பத்தினர், அன்றைய பிற்பகல் நேரத்தில் தாரகேஷ்வர் ரயில்வேயின் வடிகால் அருகே சிறுமியைப் படுகாயங்களுடன் கண்டெடுத்து, உடனடியாக தாரகேஷ்வர் கிராமப்புற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
#😱4 வயது சிறுமி துடிதுடிக்க கற்பழிப்பு👧 #🔴இன்றைய முக்கிய செய்திகள்