JUDYmission Media
1.2K views
4 months ago
#வாய்விட்டுசொல்லுவோம் #✝பைபிள் வசனங்கள் #JUDYmission #tamilchristianwhatsappstatus #anbanjudythimotheu உங்களுக்கான தீர்க்கதரிசன வாக்குத்தத்தம் - செப்டம்பர்'25 கர்த்தர் சொல்லுகிறதாவது.. என்னை கனம்பண்ணுகிறவர்களை *நான் கனம் பண்ணுவேன்.* (1 சாமுவேல் 2.30) The Prophetical Promise Word For You - September '25 LORD DECLARED.. I WILL HONOUR (YOU) THEM those who are Honouring Me.. https://youtube.com/shorts/FAwZDR_gkDE?si=IvMRllua2pNzOrji பிரியமானவர்களே உங்களுக்கு சமாதானமும் சத்துவமும் சத்தியத்தினால் உண்டாகும் சகல நன்மைகளும் உண்டாவதாக ஆமென்.. இந்த ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு முடிவடைந்த நிலைமையில், தேவனாகிய கர்த்தர் வெளியரங்கமாய் உங்களை கனப்படுத்துவதில் கவனமாகவும் கரிசனையாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எட்டு மாதங்கள் முடிந்து விட்டதே.. வாக்குத்தத்தங்கள் எட்டாமல் போய்விட்டதே என்று வருந்த வேண்டாம்.. நல்ல தேவன் நன்மை செய்ய தவற மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தால் நடந்த யாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்.. எல்லாம் அறிந்த தேவனுக்கு தெரியாமல் இதுவரை எதுவும் நடந்திருக்காது என்ற நம்பிக்கை இருந்தால் இழந்து போன யாவற்றிற்காகவும் இறை இயேசு நாமத்தை துதியுங்கள்.. சகலத்தையும் அதன் காலத்தில் நேர்த்தியாய் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் தாமதங்கள் என்று தவறாய் நம்மால் புரிந்து கொள்ளப்பட்ட தடங்கள் யாவற்றிற்காகவும் தகப்பனை துதியுங்கள்.. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவரும் எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கிறவருமாகிய அன்பின் பிதாவை உயர்த்துவதே அன்றி உயர்வுக்கு வேறு வழி இல்லை.. எல்லா கனத்திற்கும் பாத்திரரை.. எந்த நிலைமையிலும் கணப்படுத்துங்கள்.. எந்த இடத்திலும் முதன்மைப்படுத்துங்கள்.. எப்பேர்பட்டவர்கள் சூழ்ந்திருக்கும் போதும் முக்கிய படுத்துங்கள்.. எவ்வளவு அவசரமான நிலையிலும் முதலிடம் தாருங்கள்.. ஏனென்றால் பரலோக தேவ கரத்தினால் நீங்கள் கனப்படுத்த வேண்டிய காலத்தில் இருக்கிறீர்கள்.. இந்த கனம்.. தேவகனம்.. தேவன் தரும் மரியாதை.. தேவன் தரும் அங்கீகாரம்.. தேவனிடத்தில் இருந்தே வரும் அதிகாரம்.. நீங்கள் தேவனுடையவர்கள் என்பதற்கான அடையாளம்.. இப்பேர்பட்ட கனத்தை அசட்டை பண்ணாமலும் அலட்சியப்படுத்தாமலும் அனுபவிக்க ஆயத்தப்படுங்கள்.. கர்த்தர் தாமே உங்களை கனப்படுத்துவாராக.. உங்கள் தலை உயர்ந்திருக்க உங்கள் நாவு அவரை மகிமைப்படுத்த உங்கள் கரங்கள் அவரை நோக்கி ஏறெடுத்து இருக்க உங்கள் வாழ்வு அவரையே பிரதிபலித்திருக்க வாழ்த்துகிறோம் ஆசீர்வதிக்கிறோம்.. அன்போடும் ஜெபத்தோடும் அன்பன்.JUDY தீமோத்தேயு JUDY மிஷன், கோயமுத்தூர். உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உங்கள் ஜெப உதவிக்கும் (24/7) ☎️0️⃣9️⃣7️⃣8️⃣6️⃣6️⃣9️⃣0️⃣6️⃣4️⃣3️⃣ #anbanjudythimotheu #judymissionmedia #JUDYmission #houseoflivinggodcbe #houseoflgerode #houseoflgcbe #houseoflgcoimbatore #tamilchristianwhatsappstatus #tamilchristianreels #வாய்விட்டுசொல்லுவோம் #promiseoftheday #promiseword #promisesofGod #promise #promisekeeper #September1st #september1