ராமர் எப்படி கடவுளாக இருக்க முடியும்..?
முதலில் யாரிந்த ராமர்..? எதற்காக ஒரு நாடே அவரை கடவுளாக பாவிக்க வேண்டும்..? அந்தளவிற்கு அவருக்கு என்ன தகுதிகள் இருக்கிறது...? நாட்டு மக்களுக்காக அவர் என்ன செய்தார்..?
முதலில் தனது தந்தை தசரதனின் பேச்சை கேட்டு 14 வருடங்கள் வனவாசம் சென்றார். அதாவது ஒரு மகன் தனது தந்தையின் பேச்சை தட்டாமல் காட்டிற்கு போகிறார். இது அவர்களின் குடும்ப பிரச்சனையே தவிர நாட்டு பிரச்சனை அல்ல.
பிறகு காட்டில் இருக்கும்போது சீதையை ராவணன் கவர்ந்து செல்கிறான். ஒருவனின் மனைவியை இன்னொருவன் கவர்ந்து சென்றால் சண்டையிட்டு கூட்டி வரனும். இது ஒரு சாதாரண கணவனின் கடமை. அதை தான் ராமரும் செய்தார்.
ராவணன் ஒன்றும் அயோத்தி நாட்டை கைப்பற்ற போர் தொடங்கவில்லை. இது நாட்டுக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ நடத்தப்பட்ட போர் அல்ல. தன்னுடைய மனைவியை திரும்ப கொண்டு வர நடத்தப்பட்ட போர் தான். ஆக, இது ராமரின் குடும்பத்திற்கும் ராவணனின் குடும்பத்திற்கும் இடையே நடைபெற்ற போர். அதாவது சொந்த பிரச்சனையே தவிர நாட்டு பிரச்சனை அல்ல.
நல்லா கவனிங்க..சீதை அசோக வனத்தில் பத்து மாதங்கள் இருக்கிறார். அப்போது, சீதை கர்ப்பம் தரிக்கவில்லை. ராமன் சீதையை மீட்டு அயோத்திக்கு திரும்பிய பிறகு ராமனும் சீதையும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் சீதையை காட்டிற்கு அனுப்பும்போது அவள் கர்ப்பமாக இருந்திருக்கிறார். காட்டில் தான் லவ, குசா பிறக்கிறார்கள்.
சீதையின் கர்ப்பின் மேல் சந்தேகம் கொண்டிருந்தால் அவளுடன் ராமனால் உடலுறவில் ஈடுப்பட்டு இருக்க முடியாது.
ஆக சீதை கர்ப்பம் ஆகும் வரை ராமருக்கு சந்தேகம் வரவில்லை. அவள் கர்ப்பம் ஆன பிறகு எவனோ ஒரு குடிமகன் 'வேறு ஒருவனிடம் இருந்த மனைவியை திரும்பவும் தன்னுடனே சேர்த்துக்கொள்ள நான் ஒன்றும் ராமன் இல்லை' என்ற சொன்ன ஒரே காரணத்திற்காக கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்பி விடுகிறார்.
இங்கே சீதையை சந்தேகப்பட்டுருக்க வேண்டும்..இல்லையேல், தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவ பெயரை நீக்க சீதையை காட்டிற்கு அனுப்பிருக்க வேண்டும். இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அது தவறு தானே..? இது தான் ராமனின் ஒழுக்கமா..? அப்படியே பார்த்தாலும், சீதையை காட்டிற்கு அனுப்பியதும் ராமரின் குடும்ப விஷயம் தான்.
ராமர் ஒரு ஏகப்பத்தினி விரதனுக்கு ஒரு உதாரணம் என்றால், அப்போ அவரை தவிர அவர் நாட்டு மக்கள் எல்லாம் பல பல மனைவிகளுடன் வாழ்ந்தார்களா..? ராமன் சீதையை மட்டுமே மனைவியாக கொண்டிருந்தான் என்ற ஒரு கொள்கைக்காக, அவரை கடவுள் ஆக கொள்ளும் இந்து மதத்தை அல்லது இந்திய மக்களை என்னவென்று சொல்வது...?
ராமாயணத்தில் அவர்களின் குடும்ப பிரச்சனைகள் தவிர்த்து நாட்டுக்காக அல்லது நாட்டு மக்களுக்காக என்னென்ன விஷயங்கள் நடந்தது...?
இப்போது சொல்லுங்கள்...எதன் அடிப்படையில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்..? சிலைகள் எழுப்ப வேண்டும்...?
#👨மோடி அரசாங்கம்