குவைத்தில் வேலை செய்து வந்த ஷிரிகினீடி துர்காபிரசாத் (37), சமீபத்தில் ஊருக்குத் திரும்பிய அவர், தனது மகன் மோஹித் (13) மற்றும் மகள் ஜான்வி (9) ஆகியோரை அழைத்து சென்று கோதாவரி ஆற்றில் தள்ளிக் கொன்ற பின்னர் தானும் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவத்தன்று ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி துர்காபிரசாத் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் தெரிகிறது. ஆற்றங்கரைக்குச் சென்ற அவர், திடீரென குழந்தைகளை நீரில் தள்ளியதும், உடனே தானும் ஆற்றில் குதித்ததும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துர்காபிரசாத் தனது மனைவி நாகவேணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் மீண்டும் குடும்பத்துடன் வாழ வந்த நிலையில், இப்படியான கடுமையான முடிவை எடுக்க காரணம் என்ன என்பதைக் கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
#ஆந்திரா சம்பவம் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #மன வேதனை