Ezhilraja
557 views
5 months ago
#கலைஞர்102 புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மற்றும் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் கழக கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தமிழ்நாடு அரசியலில் "உண்மையான உருட்டு யார்! திருட்டு யார்!" என எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கழக இலக்கிய அணி துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கழக நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும் தெற்கு மாநகர பொறுப்பாளருமான வே.ராஜேஷ் நன்றி கூறினார்.