கலைஞர்102
27 Posts • 9K views
Ezhilraja
557 views 5 months ago
#கலைஞர்102 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாபெரும் கருத்தரங்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கழக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணச்சாமி MLA அவர்கள் தலைமையில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் VP.ராஜன் Ex MLA, செ.புஷ்பராஜ் Ex MLA, கொடநாடு மு.பொன்சந்தோஸ், பி.துரைசாமி Ex MLA ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை மாலையீடு கற்பக விநாயக மஹாலில் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றி கருத்தரங்கத்தை துவக்கி வைத்தனர். நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கழக இலக்கிய அணி துணை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளிட்ட மாநில மாவட்ட மாவட்ட ஒன்றிய பேருர் வட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சர்வேயர் மா.நடேசன் வரவேற்புரையாற்றினார் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் M.சுப்பையா நன்றி கூறினார். DMK Pudukottai
12 likes
14 shares
Ezhilraja
649 views 5 months ago
#கலைஞர்102 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர்.அண்ணாமலை ரகுபதி அவர்கள் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. 60வது நாளான இன்று (1.08.2025) அரிமளம் தெற்கு ஒன்றியம் கீரணிப்பட்டி ஊராட்சியில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் புதுகோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ரகுபதி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்களால் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது அரிமளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.ராமலிங்கம், அரிமளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து உள்ளிட்ட ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
6 likes
6 shares
Ezhilraja
961 views 6 months ago
#கலைஞர்102 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தீத்தானிப்பட்டியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் துணை அமைப்பாளர் மழையூர் AVG.சத்யா ஒருங்கிணைபில் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். பொதுமக்களுக்கு சிறுநீரக கோளாறுகள், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது மூக்கு தொண்டை சிகிச்சை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய், மின்னிதயபடம் (இசிஜி) பரிசோதனை உள்ளிட்டவை எடுக்கப்பட்டது. 150 நபர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் SS.கருப்பையா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் NM.அய்யப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் N.ராஜாராம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். DMK Pudukottai
16 likes
10 shares