#கலைஞர்102
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாபெரும் கருத்தரங்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கழக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணச்சாமி MLA அவர்கள் தலைமையில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் VP.ராஜன் Ex MLA, செ.புஷ்பராஜ் Ex MLA, கொடநாடு மு.பொன்சந்தோஸ், பி.துரைசாமி Ex MLA ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை மாலையீடு கற்பக விநாயக மஹாலில் நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றி கருத்தரங்கத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கழக இலக்கிய அணி துணை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளிட்ட மாநில மாவட்ட மாவட்ட ஒன்றிய பேருர் வட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சர்வேயர் மா.நடேசன் வரவேற்புரையாற்றினார் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் M.சுப்பையா நன்றி கூறினார்.
DMK Pudukottai