Islamic Way ❤️ Of Life
597 views
4 months ago
"தியாகம் ❤️📌✨ "லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறிவிட்டால் சோதிக்கப்படாமல் மனிதன் விடப்படுவானா என்ற ரப்புல் ஆலமீனின் வார்த்தைகள் இஸ்லாம் என்றாலே தியாகம் தியாகம் என்றாலே இஸ்லாம் அல்லாஹு அக்பர் சோதனைகள் இல்லாமல் சுவனம் இல்லை அல்லாஹ் அவனின் நேசத்திற்குரிய அவனது தூதரையும் சோதித்தான் அவர்களின் ஈமான் அந்த சோதனையில் வெற்றியடைந்தது ஸுப்ஹானல்லாஹ் ❤️✨ முஃமின்கள் இந்த துன்யாவில் சோதிக்கப்படலாம் ஆனால் மறுமையில் மிக உயர்ந்த இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் இது வாழ்வதற்காக வந்த இடமில்லை இது மறுமைக்கான தேர்விற்கான இடம் நம்முடைய வாழ்வை இந்த துன்யாவில் இறையச்சமுள்ள தேர்வாக எழுதினால் இன் ஷா அல்லாஹ் நாளை மறுமையிலே மிக சிறப்பான உயர்ந்த தரஜாவை அடையலாம் இன் ஷா அல்லாஹ் நபி ஸல் அவர்கள் கேட்டால் ரப்புல் ஆலமீன் உஹது மலையை தங்கமாக மாற்றிக் கொடுப்பான் ஆனால் அவர்கள் இந்த துன்யாவின் மதிப்பை அறிந்தார்கள் அவர்கள் இந்த துன்யாவை விரும்பவில்லை நிரந்தரமான மறுமையைத் தேர்வு செய்து வெற்றியடைந்தார்கள் அல்லாஹு அக்பர் ஆம் இந்த துன்யா கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது 📌✨ "உரிமையாளரால் தூக்கி எறியப்பட்ட இறந்த ஓர் ஆட்டை கடந்து செல்லும் போது கூறினார்கள் என்னுடைய உயிர் யார் கையில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த ஆட்டிற்கு, அதன் உரிமையாளரிடத்தில் எத்தகைய மதிப்பும் இல்லாததுபோல், அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம், இதைவிடவும் மதிப்பற்றதாக இருக்கிறது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்னத் அஹ்மத் அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்னத் அஹ்மத் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். அதற்கு நான், "என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கறுப்பர்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும்,அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5690. அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும் #islamicposts #islam #Miracle #HalalPost #Sacrifice