HalalPost
49 Posts • 4K views
Islamic Way ❤️ Of Life
546 views 4 months ago
🌒 *கிரகணத் தொழுகை* சூரிய, சந்திர கிரகணங்களின் போது தொழுவது கட்டாய சுன்னாவாகும். இமாம் இப்னுல் கையூம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்), ஷேய்க் பின் பாஸ் (ரஹ்) போன்ற அறிஞர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பதாலும், அவர்கள் அதனை செய்திருப்பதாலும், கட்டாயமாகத் தொழுதாக வேண்டும் என்று கூறுகின்றனர். 📌 *தொழுகைக்குரிய நேரம்:* சூரிய, சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிவதற்கிடைப்பட்ட நேரம் தொழுகைக்குரிய நேரமாகும். கிரகணம் முற்றாக நீங்கிவிட்டால், தொழுகையின் நேரம் முடிந்து விடும். கொஞ்சம் நீங்கி கொஞ்சம் இருந்தாலும் அது தொழுகைக்குரிய நேரமாகும். பார்க்க: புஹாரி (1060) மற்றும் முஸ்லிம் (904) கிரகணத்தைக் கண்டால், *‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’* எனப் பள்ளிவாசலுக்குத் கிரகணத் தொழுகைக்காக வரும்படி அழைப்பு விடுக்க வேண்டும். பார்க்க: புஹாரி (1045) கிரகணத் தொழுகை பள்ளிவாசலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், பெண்களும் குறித்த தொழுகையில் கலந்துகொள்ளலாம். பார்க்க: முஸ்லிம் (1645) மற்றும் புஹாரி (1053) கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். ஆனால், தொழும் முறையில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராயப் பேதம் உள்ளது என்றாலும், ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள், *இரண்டு ருக்கூஃகள்*, இரண்டு சுஜூதுகள் என்ற கருத்தில் இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர் உள்ளனர் என்பதுடன் அக்கருத்தே மிகச் சரியானதாகும். பார்க்க: புஹாரி: (1047) மற்றும் முஸ்லிம்: (901). எனவே அதன்படி தொழுகை முறை எவ்வாறு அமையும் என்பதைப் பார்ப்போம். 📌 *தொழும் முறை:* 1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதியதும், நீண்ட ஒரு சூறாவை ஓதுதல். 2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல். 3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல். 4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹாவையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூராவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல். 5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல். 6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல். 7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல். 8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல். தொழுகையின் பின்னர் குத்பா: கிரகணத் தொழுகையின் பின்னர் குத்பா உரை இடம்பெற வேண்டும். கிரகணத் தொழுகையில் குத்பாவும் ஒரு அங்கம் என்பது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்தாகும். ✍️ ஆக்கம்: எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலஃபி 🗣️ இன்று சந்திர கிரகணம் ஏற்படும் நேரத்தை நினைவில் நிறுத்தி, குறித்த நேரத்தில் கிரகணத் தொழுகையைத் தொழுவதுடன், அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்தல் மற்றும் பாவமன்னிப்புக் கோருவதனூடாக நபிகளார் வலியுறுத்திய இந்தக் கட்டாய சுன்னாஹ்வை நிறைவேற்ற முன்வருவோமாக! 📍 உங்களுடைய ஊர் பள்ளிவாசல்களில் கிரகணத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், நீங்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ள முடியும். #Moonesclipse #சந்திரகிரகணம் #HalalPost #islam #Miracle
10 likes
15 shares
Islamic Way ❤️ Of Life
543 views 4 months ago
🌕🌘சந்திர கிரகணம்🌒🌕 ✨எழுந்து விரைந்து தொழுங்கள் கிரகணம் விலகும் வரை. ✨அல்லாஹ்வை புகழுங்கள் (தக்பீர் கூறுங்கள்) ✨ஸதகா செய்யுங்கள். ✨அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ✨இரண்டு ருகூ இரண்டு ஸஜ்தாக்கள் ஒரு ரக்ஆத்திற்கு (மொத்தம் நான்கு) நீண்ட நேரங்கள் செய்யுங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. ஸஹீஹ் புகாரி : 1045 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1042. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'. என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1048. #islam #சந்திரகிரகணம் #Miracle #HalalPost #Moonesclipse
17 likes
12 shares
Islamic Way ❤️ Of Life
644 views 6 months ago
*" சோதனைகள்!!❤‍🩹* முஃமின்களுக்கு ஏற்படும் சோதனைகள் தண்டனை அல்ல அது ஆலமீன் நிஃமத் அருட்கொடை அதை அவன் நாடியவர்களுக்கு அதிகமதிகம் வழங்கி அவர்களின் ரப்புல் ஆலமீனின் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்வான் அந்த சோதனைகள் மூலம் அவன் அவர்களோடு உரையாடுவான் ஸுப்ஹானல்லாஹ்❤‍🩹🪄✨!! "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5645. அறிஞர் ஃபுதைல் பின் இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : அல்லாஹ் ஒருவரின் மீது நேசம் பாராட்டினால் அவருக்கு அதிக சோகத்தை தருவான். ஆனால், ஒருவரை வெறுத்தால் அவருக்கு உலக வாழ்க்கையை விசாலம் ஆக்கிவிடுவான். *நூல் : ஸியரு அஃலாமின் நுபலா 338/4* இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3 இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸஹீஹ் புகாரி : 5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 5641 5642. #Miracle #HalalPost #islam #Islamic Way Of Life Official #islamicposts
16 likes
11 shares